Topic : Death

சேசுநாதர் அவளை நோக்கி: உத்தானமும், உயிரும் நானே; என்னில் விசுவாசமாயிருக்கிறவன் இறந்தாலும், பிழைப்பான். (அரு. 6:40.)
உயிரோடிருக்கையில் என்னை விசுவசிக்கிறவன் எவனும் நித்தியத்துக்கும் சாகமாட்டான். இதை விசுவசிக்கிறாயோ ? என்றார்.

John 11:25-26

ஆனால் நாம் சீவித்தாலும், ஆண்டவருக்கென்றே சீவிக்கிறோம்; மரித்தாலும், ஆண்டவருக்கென்றே மரிக்கிறோம். ஆகையால் நாம் சீவித்தாலுஞ்சரி, மரித்தாலுஞ்சரி ஆண்டவருக்கே சொந்தமாயிருக்கிறோம்.

Romans 14:8

வீணில் தன் ஆத்துமாவை உபயோகப்படுத்தாமலும், தன் புறத் தியானுக்குக் கபடாய் ஆணை யிடாமலுங் கரங்களில் மாசற்றவனும் இருதயத்தில் பரிசுத்தமுள்ளவனுமாயிருப்பவன்தான்.

Psalms 23:4

ஏனெனில் கிறீஸ்துநாதர் எனக்கு ஜீவன்; மரணம், எனக்கு ஆதாயம்.

Philippians 1:21

பின்பு (இவ்வுலகத்தில்) உயி ரோடே விடப்பட்டிருக்கிற நாம் அவர் களோடேகூட மேகங்களில் எடுபட்டு, ஆகாயத்தில் கிறீஸ்துநாதருக்கு எதிர் கொண்டுபோய், அப்படியே ஆண்ட வரோடு எப்போதும் இருப்போம்.
ஆனபடியினாலே இந்த வார்த்தைகளைக்கொண்டு நீங்கள் ஒருவ ரொருவரைத் தேற்றிக்கொள்ளுங்கள். * 17. தெசலோனிக்கேய சபையார் தங்களில் மரிக்கிறவர்களை ப்பற்றி மிகவும் துக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆறுதலாக அர்ச். சின்னப்பர் போதித்த தன்மையாவது: நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் நீங்களும் உங்கள் மரித்தோர்களைக் குறித்துத் துக்கப்படவேண்டாம். ஏனெனில், அவர்கள் என்றென்றைக்கும் மரித்தவர்களல்ல. அவர்களுடைய மரணம் நித்திரையைப்போலிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உயிர்த்தெழுந்திருப்பார்கள். அதெப்படியென்றால், உலகமுடிவிலே சேசுநாதர் சம்மனசுக்கள் சூழ, மிகுந்த மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்தினின்று இறங்கி வந்து, அதிதூதர் நான்கு திசைகளிலும் கேட்கும்படி எக்காளம் ஊதி: மரித்தோரே எழுந்திருங்களென்று கூப்பிடக் கற்பிப்பார். அப்பொழுது கிறீஸ்துநாதருடைய சமாதான ஐக்கியத்தில் மரித்தவர்களாகிய சகலரும் ஒரு க்ஷணத்தில் கல்லறைகளைவிட்டு எழுந்து, அப்போது உயிரோடிருக்கும் மற்ற விசுவாசிகளோடு ஏகோபித்துக் கிறீஸ்துநாதருக்கு எதிர்கொண்டுபோய் அவரோடேகூடப் பரமண்டலங்களில் ஏறி என்றென்றைக்கும் அவருடனேகூடப் பாக்கியமாயிருப்பார்கள். ஆகையால் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற நீங்கள் இந்த வாக்கியங்களைக் கொண்டு ஒருவரொருவரைத் தேற்றி ஆறுதலடைந்திருங்கள் என்கிறார். இதிலே அர்ச். சின்னப்பர் அந்தச் சபையார்களுக்கு ஆறுதல் வருவிக்கவேண்டுமென்கிற கருத்தாயிருந்தபடியால், நடுத்தீர்வையில் நடக்கப்போகிற மற்றவைகளெல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டு, ஆறுதலுக்கு ஏதுவானவைகளை மாத்திரம் இங்கே காட்டுகிறார். அதைப்பற்றியே முதலாவது, கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர்களுடைய உத்தானத்தைக் குறித்துப் பேசுகிறார். ஆனால் 1 கொரிந்தியர் 15-ம் அதி. 51-ம் வசனத்தில் கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர் களுமன்றிப் பாவிகளும் உயிர்ப்பார்கள் என்கிறார். 2-வது. சேசுநாதர் நடுத்தீர்க்க வரும் போது உயிரோடிருக்கிறவர்கள் ஒரு க்ஷணத்தில் மரித்து உயிர்ப்பார்களென்று சொல்லாமல், முன் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்தவுடன் அவர்களும் இவர்களும் ஒன்றாகக்கூடி ஆகாயத்தில் எழுந்து சேசுநாதருக்கு எதிராகப் போவார்கள் என்கிறார். ஆகையால் அப்போது உயிரோடிருப்பவர்கள் மரிப்பதில்லையென்று சிலர் நினைப்பதற்கு இட மாகிறது. ஆயினும் அர்ச். சின்னப்பரே எபிரேயர் 9-ம் அதி. 27-ம் வசனத்தில் சொல்லு மாப்போல தேவ தீர்மானத்தால் எல்லா மனிதர்களும் மரிக்கவேண்டியதென்பத

1 Thessalonians 4:16-17

ஏனெனில் சாவானாலும், ஜீவ னானாலும், தேவதூதரானாலும், சத்து வகரானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், பராக்கிரமமானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதர்மேல் நமக்குள்ள தேவ சிநேகத்தைவிட்டு நம்மை விலக்க முடியாதென்று எனக்கு நிச்சயமா யிருக்கிறது.

Romans 8:38-39

நீ என்னை உன் இருதயத்தின் மேலும் உன் புஜத்தின்மேலும் முத்திரையைப்போல் வைக்கக்கட வாய்; ஏனெனில், நேசமானது மரணத் தைப்போல் வலியதும், நேச வைராக் கியம் நரகத்தைப்போல் கொடியது மாயிருக்கிறது; நேசத்தின் உக்கிர மானதோ அக்கினித் தழலும் அதின் சுவாலை கடுஞ் சுவாலையுமாயிருக் கின்றது.

Song of songs 8:6

அன்றியும் ஆதாமில் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறீஸ்துநாதரில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1 Corinthians 15:22

ஆகையால் இருபக்கத்திலும் நெருக்கப்படுகிறேன். என் தேகக் கட் டவிழ்ந்து, கிறீஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு. இதுவும் அதிமிக நன்மைதான்.
ஆனால் இன்னும் சரீரத்தில் நிலைத்திருக்கிறது உங்களைப்பற்றி அவசியமாயிருக்கின்றது.

Philippians 1:23-24

அப்போது சிங்காசனத்திலிருந்து ஒரு பெரிய குரல் சத்தம் உண்டாகி: இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணுவார்; அவர்களும் அவ ருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வே சுரன்தாமே அவர்களுடைய தெய்வ மாக அவர்களோடேகூட இருப்பார்.
சர்வேசுரன் அவர்களுடைய கண் களினின்று கண்ணீர் யாவையும் துடைப் பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக்கேட்டேன். (காட்சி. 7:17; இசை. 25:8.)

Revelation 21:3-4

ஏனெனில், செத்தவனுடைய சாவை நாம் விரும்புகிறதில்லை யென்று தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; ஆகையால் மனந் திரும்புங்கள், (அதனால்) பிழைத் திருப்பீர்கள் (எசேக். 33:11; 2 இரா. 3:9).

Ezekiel 18:32

இது சத்திய வாக்கு. என்ன வென்றால்: நாம் அவருடனேகூட மரித்தோமானால், அவருடனேகூட உயிர்வாழ்வோம்.

2 Timothy 2:11

ஏனெனில் தன் பிராணனைக் காப்பாற்ற மனதாயிருக்கிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் பிரா ணனை இழப்பவனோவென்றால் அதைக் கண்டடைவான். (லூக். 17:33; அரு. 12:25.)

Matthew 16:25

ஏனெனில் மனிதனாலே மரணமுண்டானபடியால், மனிதனாலேயே மரித்தோருடைய உத்தானமும் உண்டாயிருக்கிறது. (ஆதி. 3:17; உரோ. 5:12-18 காட்சி. 1:5.)

1 Corinthians 15:21

சேசுநாதரோ உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி உயிர்விட்டார். (சங். 30:5.)

Luke 23:46

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறதே அரிது. ஆகிலும் நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணியலாம்.
ஆனால் நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்.

Romans 5:7-8

இதோ மனிதர் எல்லோரும் போகிற வழியே நான் இன்று போகி றேன். கர்த்தர் உங்களுக்குத் தருவோ மென்று எவ்வித வார்த்தைப் பாடு களையுங் கொடுத்திருந்தாரோ அந்தச் சகல வார்த்தைகளிலும் ஒரு வார்த்தைகூடத் தவறிப் போகவில் லையென்பதை நீங்கள் முழுமன தோடு அறிந்திருப்பீர்கள் (3அர.2:2).

Joshua 23:14


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |