Topic : Conversion

நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.

2 Chronicles 7:14

ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

சிலர் எண்ணுகிறபடி ஆண்டவர் தமது வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தாமதிப்பதில்லை. ஆனாலும் அவர் ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்பவேண்டுமென்று விரும்பி, உங்களைப்பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார். (எசே. 18:23; 1 தீமோ. 2:4.)

2 Peter 3:9

ஏனெனில், செத்தவனுடைய சாவை நாம் விரும்புகிறதில்லை யென்று தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; ஆகையால் மனந் திரும்புங்கள், (அதனால்) பிழைத் திருப்பீர்கள் (எசேக். 33:11; 2 இரா. 3:9).

Ezekiel 18:32

ஆம்! கர்த்தரிடத்திற்குத் திரும் பினால் உங்கள் சகோதரரும், உங்கள் குமாரரும் தங்களைச் சிறைப்பிடித் துக்கொண்டுபோன எஜமான்களுக்கு முன்பாக இரக்கம் பெற்று இந்தத் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். உள்ளபடி கிருபை தயாபமுள்ளவரா யிருக்கிறார் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அவரிடத்திற்குத் திரும்புவீர்களானால், அவரும் பாரா முகமாயிருக்கப் போகிறதில்லை என்று சொல்லி விளம்பரம் பண்ணி னார்கள்.

2 Chronicles 30:9

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

உங்கள் வஸ்திரங்களை (மாத்திரம்) அல்ல; உங்கள் இருதயங் களையும் (மனஸ்தாபத்தால்) கிழித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்புங்கள்; ஏனெனில், அவர் நல்ல வர், இரக்கமுள்ளவர், பொறுமை யுள்ளவர், மிகுந்த தயையுடையவர், தீமைமீது பச்சாத்தாபங் கொள்பவர் (சங். 85:5).

Joel 2:13

அது முதல் சேசுநாதர், தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறதென்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மாற். 1:15.)

Matthew 4:17

ஆகையால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்படி மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புங்கள்.

Acts 3:19

ஆகையால் எவ்வித அசுசியை யும், துர்க்குணப் பெருக்கத்தையும் அகற்றி விட்டு, உங்கள் உள்ளத்தில் ஒட்டப்பட்டதும் உங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கக்கூடியதுமான வாக்கியத்தைச் சிரவணத்தோடு கைக்கொள்ளுங்கள். (1 இரா. 2:1; கொலோ. 3:8.)

James 1:21

மேகங் கலைந்துபோவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கி னோம்; புகை மறைவதுபோல் உன் பாவங்களும் பறந்தன. நாம் உன்னை மீட்டோமாதலின் நம்மிடந் திரும்பி வரக்கடவை.

Isaiah 44:22

ஆகையால் தகுதியான தவப் பலனைச் செய்யுங்கள்;

Matthew 3:8

அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப்பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியி னிமித்தம் மோட்சத்திலே அதிக சந் தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். * 7. மனந்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள்பேரில் சர்வேசுரன் குறையற்ற பட்சமாயிருந்தாலும் மனந்திரும்புகிற பாவி அவருடைய சந்தோஷத்துக்கு ஒரு விசேஷ காரணமாயிருக்கிறானென்று இவ்வாக்கியத்தால் விளங்குகிறது.

Luke 15:7

அவ்வண்ணமே உங்கள் அவயவங்களை அநீதத்தின் எத்தனங்களாகப் பாவத்துக்கு ஒப்புக்கொடாமல், மரித்தோரிலிருந்து உயிர்த்தவர்களாக உங்களைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களையும் நீதியின் நடக்கைக்குரிய எத்தனங்களாகச் சுவாமிக்குக் (கையளியுங்கள்).

Romans 6:13

ஆதலால் இப்போது அழுகை யாலும், பிரலாபத்தாலும் உங்கள் முழு இருதயத்தோடு நம்மிடந் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.

Joel 2:12

சகோதரரே, ஒரு மனிதன் நினையாமல் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஞானவான்களாகிய நீங்கள் சாந்தகுணத்தோடு அப்படிப்பட்டவனுக்குப் புத்தி சொல்லுங்கள். ஆனால் சோதனையில் நீயும் அகப்படாதபடிக்கு உன்மட்டில் கண்ணுண்டாயிரு.

Galatians 6:1

நீதிமான்களையல்ல, பாவிக ளையே பச்சாத்தாபத்துக்கு அழைக்க வந்தேன் என்றார்.

Luke 5:32

நான் நேசிக்கிறவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ உரோசமடைந்து தவஞ்செய். (பழ. 3:12; எபி. 12:6.)

Revelation 3:19

நீ (அவர்கள் மக்களாகிய) அவர்களைப் பார்த்து: சேனைகளின் தேவனார் சொல்வதேதெனில்: நம் மிடம் (மனந்திரும்பி) வாருங்கள் என்கிறார் சேனைகளின் அதிபர்; யாமும் உங்களை நோக்கி வருவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (இசா.21:12; 31:6; 45:22; எரே. 3:12; எசேக். 18:30; 20:7; 33:11; ஓசே. 14:2; யோவேல். 2:12; மலாக். 3:7).

Zechariah 1:3

ஆகிலும் இந்த அறியாமையின் காலங்களைச் சர்வேசுரன் பாராமுகமாய்ப் பார்த்து, இப்போது எங்கும் எல்லா மனிதரும் தவஞ்செய்யும் படிக்கு அறிவிக்கிறார்.

Acts 17:30

காலம் நிறைவேறி, சர்வேசுர னுடைய இராச்சியம் சமீபமாயிற்று. பச்சாத்தாபப்பட்டுச் சுவிசேஷத்தை விசுவசியுங்கள் என்றார்.

Mark 1:15

அக்கிரமியானவன் தன் பாதை யையும், அநீதன் தன் துர் எண்ணங் களையும் விட்டு, ஆண்டவரிடந் திரும்பி வரட்டும்; அவர் அவனுக்குத் தயை பாராட்டுவார்; நம்தாண்டவ ரிடம் வரட்டும்; ஏனெனில், அவ னுக்கு மன்னிக்க அவர் மிகு தயை யுளராயிருக்கின்றார்.

Isaiah 55:7

ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே! நாம் உங்களில் அவன வனை அவனவன் நடத்தைக்குத் தக்காப்போல நாம் நீதி செலுத்து வோம் என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்பி உங்கள் அக்கிரமங்களுக்கெல்லாந் தவம்புரியுங்கள்; அப்போது உங்கள் அக்கிரமம் உங்களைப் பாழாக்காது (மத். 3:2).

Ezekiel 18:30

அவ்விதமே தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கு மென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். * 10. மோட்சவாசிகளுக்கும், இவ்வுலகத்திலுள்ள கிறீஸ்துவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், ஆகையால் அவர்களை நோக்கி மன்றாடுகிறது வீணென்றும் போதிக்கிறவர்களை இந்த வாக்கியம் மறுக்கிறது.

Luke 15:10

அக்கிரமி தன் எல்லாப் பாவங் களுக்காகவுந் தவம் புரிந்து நமது கட்டளைகள் யாவையுங் கைக் கொண்டு நீதி நியாயப்படி நடப் பானேயாகில் அவன் சாகாமல் உயிர் பிழைத்திருப்பான்.

Ezekiel 18:21


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |