Topic : Conversion

நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.

2 Chronicles 7:14

ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

Colossians 3:5

ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.

2 Peter 3:9

இஸ்ராயேல் வீட்டாரே,நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவனும் சாக வேண்டும் என நாம் விரும்புவதில்லையே, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். ஆகவே மனந்திரும்புங்கள்; உயிர் வாழ்வீர்கள்."

Ezekiel 18:32

ஆம், ஆண்டவர் பக்கம் நீங்கள் மனம் திரும்பினால், உங்கள் சகோதரரும் புதல்வரும், தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போன தலைவரிடமிருந்து இரக்கம் பெறுவர்; இந்நாட்டிற்குத் திரும்பி வருவர். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அன்பும் இரக்கமும் உள்ளவர். நீங்கள் அவர் பக்கம் மனம் திரும்புவீர்களானால் அவரும் பாராமுகமாய் இரார்." இதுவே அந்த அரச கட்டளை.

2 Chronicles 30:9

அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

Acts 2:38

உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.

Joel 2:13

அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

Matthew 4:17

ஆகையால், உங்கள் பாவங்கள் ஒழியும்பொருட்டு மனம் மாறிக் கடவுளிடம் திரும்புங்கள்.

Acts 3:19

ஆகவே, பெருக்கெடுக்கும் தீமையையும் மாசு அனைத்தையும் அகற்றி, உங்கள் உள்ளத்திலே ஊன்றப்பெற்ற வார்த்தையை அமைந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; இவ்வார்த்தையே உங்கள் ஆன்மாவை மீட்க வல்லது.

James 1:21

கார்மேகம் கலைவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கினோம், பனிப்படலம் போல் உன் பாவங்கள் பறந்தன; நம்மிடத்தில் நீ திரும்பி வா, ஏனெனில் உன்னை நாம் மீட்டிருக்கிறோம்.

Isaiah 44:22

எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்.

Matthew 3:8

அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

Luke 15:7

நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும்.

Romans 6:13

ஆண்டவர் கூறுகிறார்: "இப்பொழுதாவது நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வாருங்கள்;

Joel 2:12

சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.

Galatians 6:1

நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" என்று மறுமொழி கூறினார்.

Luke 5:32

நான் யார் மேல் அன்புகூருகிறேனோ அவர்களைக் கண்டித்துத் தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்து.

Revelation 3:19

ஆதலால் நீ இம்மக்களுக்குக் கூறு: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம்மிடம் திரும்பி வாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அப்போது நாமும் உங்கள்பால் திரும்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Zechariah 1:3

மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

Acts 17:30

"காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" என்றார்.

Mark 1:15

தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.

Isaiah 55:7

ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கவாறு தீர்ப்பிடுவோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். நீங்கள் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் விட்டு மனந்திரும்புங்கள்; அப்போது நீங்கள் பாவத்தில் விழ இடமிராது.

Ezekiel 18:30

அவ்வாறே, மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

Luke 15:10

ஆயினும் அக்கிரமி ஒருவன் தான் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்துத் தள்ளி விட்டு, நம் கற்பனைகளைக் கடைப்பிடித்து, சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் உயிர் வாழ்வான் என்பது உறுதி;

Ezekiel 18:21


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |