Topic : Addiction

ஆகையால் நாம் அவருடைய மரணத்துக்கு ஒப்பாக அவரோடு ஒட்டவைக்கப்பட்டவர்களானால், உத்தானத்துக்கும் அவரோடு ஒத்தவர்களாக அவரில் ஒட்டவைக்கப்படுவோம்.
ஏனெனில் பாவச் சரீரம் அழிந்து, நாம் இனிப் பாவத்துக்கு அடிமைக ளாகாதபடிக்கு, நம்முடைய பழைய மனிதன் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறானென்று அறிந்திருக்கிறோம். *** 6. பழைய மனிதன் என்பதும், பாவச் சரீரம் என்பதும் என்னவெனில், ஜென்மப் பாவத்தினாலே, தர்ம குணங் கெட்டு, பாவத்துக்குச் சார்பான பற்றுதலையுடைய மனுஷனுடைய சுபாவமாம். புது மனிதனோவென்றால் வரப்பிரசாதத்தினாலே புதிதான ஞான சீவியத்தை அடைந்த சுபாவமென்றறியவும்.

Romans 6:5-6

எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆனாலும் எல்லாம் தகுந்ததல்ல. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆயினும் நான் ஒன்றிற் கும் என்னை அடிமையாக்கிக்கொள்ள மாட்டேன். (1 கொரி. 10:23.) *** 12. அஞ்ஞான நடுவனிடத்தில் கிறீஸ்தவர்கள் வழக்காடக்கூடாதாவென்று சிலர் கேட்பார்களாக்கும். உத்தரவுதான், என்றாலும் அப்படிச் செய்வது கிறீஸ்தவனுக்கு யோக்கியமல்ல. வேறுவழியாய் அதாவது, திருச்சபையாரைக்கொண்டு நியாயம் பெற்றுக் கொள்ளக்கூடுமாகில் அப்படிச் செய்வதே நலம். ஏனென்றால் கிறீஸ்தவன் சர்வேசுர னுடைய பிள்ளையாயிருக்கிறபடியினாலே, பசாசுக்கடிமையாயிருக்கிற அஞ்ஞானிக ளுடைய அதிகாரத்துக்கு மனம்பொருந்தித் தன்னைக் கீழ்ப்படுத்தப்போவது சரியல்ல வென்று சொல்லத்தகும்.

1 Corinthians 6:12

மனுஷசுபாவத்துக்குரிய சோ தனையேயன்றி வேறொன்றும் உங்களுக்கு நேரிடாதிருப்பதாக. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடார். ஆனால் நீங்கள் சோதனையைத் தாங்கும்படி சோதனையோடு வழியும் பண்ணுவார்.

1 Corinthians 10:13

நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குக் கீழ்ப்படாமல் நிலைநில்லுங்கள்.

Galatians 5:1

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

ஏனெனில் உங்கள் விசுவாசத்தின் பரீட்சை பொறுமையைப் பெறுவிக்கிறதென்று அறிந்து கொள்ளுங்கள். (உரோ. 5:3.)

James 1:3

ஆகையால் நீங்கள் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பசாசை யோ எதிர்த்து நில்லுங்கள். அது உங்க ளை விட்டு ஓடிப்போம். (எபே. 6:12.)

James 4:7

ஏனெனில் உலகத்திலுள்ள யாவும் சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாயிருக்கின்றது. அவைகள் பிதாவினிடத்தினின்று வராமல் உலகத்தினின்றே வருகின்றது.

1 John 2:16

நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து, ஜெபஞ் செய் யுங்கள். மனமானது வேகமுள்ளதுதான், மாம்சமோ துர்ப்பலமுள்ளது என்றார்.

Matthew 26:41

ஆகையால் சேசுநாதர் தம்மை விசுவசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் வாக்கியத்திலே நிலைத்திருந்தால், மெய்யாகவே என்னுடைய சீஷர்களா யிருப்பீர்கள்.
சத்தியத்தையும் அறிந்துகொள்ளு வீர்கள்; சத்தியம் உங்களைச் சுயாதீன ராக்கும் என்றார்.

John 8:31-32

எங்களைச் சோதனையிலே பிர | வேசிப்பியாதேயும், ஆனால் தின்மை யிலே நின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ஆமென். * 13. சோதனையிலே பிரவேசிப்பியாதேயும்:- அதாவது சோதனை வராமல் எங்களைக் காப்பாற்றியருளும். அப்படி வந்தாலும் அதற்குள் அகப்பட்டுப் பாவத்தில் விழாதபடி எங்களைத் தற்காத்தருளும் என்று அர்த்தமாம்.

Matthew 6:13

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே நீங்கள் சுயாதீனராயிருப்பீர்கள். (உரோ. 8:2; கலாத். 4:6, 7.)

John 8:36

சேசுநாதர் அவர்களுக்குப் பிரத்தியுத்தாரமாக: மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவத்தைச் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமைப்பட்டவனாய் இருக்கி றான். (உரோ. 6:15; 2 இரா. 2:19.)

John 8:34

நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது. (மாற். 9:49; லூக். 14:34.) * 13. பூமியின் உப்பு:- உப்பானது, 1-வது, ஒரு பதார்த்தம் கெட்டுப்போகாதபடி காப்பாற்றுகிறது; 2-வது, போஜனத்துக்கு ருசி கொடுக்கிறது. அப்படியே, 1-வது, ஆத்துமங்கள் கெட்டுப்போகாமல் காப்பாற்றுவதும், 2-வது. ஜனங்கள் ஞானக்காரியங்களின் மேல் பிரியப்படும்படியான புத்தி பிரசங்கம் செய்கிறதும், வேதியர் தொழிலாமே.

Matthew 5:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |