Topic : Truth

நான் கர்த்தருக்குக் சொன்ன தாவது: நீர் என் தேவனாயிருக்கிறீர்; ஏனெனில் என்னுடைய ஆஸ்திகள் உமக்கு வேண்டியதில்லை.
அவருடைய சொந்த பூமியி லுள்ள பரிசுத்தவான்களுக்கு எனது விருப்பங்களையெல்லாம் அதிசயிக் கப் பண்ணினார்.

Psalms 15:2-3

என் பிள்ளைகளே, நம்முடைய சிநேகம் வார்த்தையிலும் நாவிலும் இராமல், கிரியையிலும் உண்மையிலும் இருக்கவேண்டியது.

1 John 3:18

ஆகையால் நாம் அவரோடு ஐக்கியமாயிருக்கிறோமென்று சொல்லியும் இருளில் நடப்போமானால், நாம் பொய்யரேயன்றி, உண்மைப்படி நடப்பவர்களல்ல.

1 John 1:6

ஆகையால் சேசுநாதர் தம்மை விசுவசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் வாக்கியத்திலே நிலைத்திருந்தால், மெய்யாகவே என்னுடைய சீஷர்களா யிருப்பீர்கள்.
சத்தியத்தையும் அறிந்துகொள்ளு வீர்கள்; சத்தியம் உங்களைச் சுயாதீன ராக்கும் என்றார்.

John 8:31-32

பரம அன்பில் உண்மையோடு நடந்து, தலைமையாயிருக்கிற கிறீஸ்துநாதரிடத்தில் எல்லாவற்றிலும் வளருவோமாக.

Ephesians 4:15

கடைசியாய்ச் சகோதரரே, எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நீதியோ, எதெது பரிசுத்தமோ, எதெது அன்புக்குரியதோ, எதெது நற்கீர்த்திக்குரியதோ, எதெது புண்ணிய மோ, எதெது நல்லொழுக்கப் புகழ்ச்சி யோ, அவைகளைச் சிந்தித்துக்கொண் டிருங்கள்.

Philippians 4:8

சேசுநாதர் அவரை நோக்கி: வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை.

John 14:6

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப் படுகிறதைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறே இல்லை.

3 John 1:4

விசுவாசமானது நாம் நம்பிக் காத்திருக்கவேண்டியவைகளின் அடிநிலையும், காணப்படாதவைகளின் நிச்சயிப்புமாயிருக்கின்றது.

Hebrews 11:1

நீதிமானின் உதடுகள் பிரிய மானவைகளையும், அக்கிரமிகளின் வாய் பொல்லாதவைகளையுங் கவனிக்கிறது.

Proverbs 10:32

நீர் வெட்கப்படாத ஊழியனாகச் சத்திய வாக்கியத்தை ஒழுங்காய்ப் போதித்து, சர்வேசுரனுடைய அங்கீகரிப்புக்கு ஏற்றவராக உம்மைக் காட்டும்படி அக்கறையாய்ப் பார்த்துக் கொள்ளும்.

2 Timothy 2:15

பொல்லாதவர்களுடைய கூட்டத்தை நான் பகைத்தேன்; அவ பத்தியுள்ளவர்களோடு நான் உட்கார மாட்டேன்.

Psalms 25:5

சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்கவேண்டும் என்றார். (1 கொரி. 3:17.) * 21-24. சாலமோன் இராஜா ஜெருசலேமில் கட்டின தேவாலயத்தில் மாத்திரம் அந்நாள் பலிகளெல்லாம் செலுத்தப்படவேண்டியதாயிருந்தது. பிரிவினைக்காரரான சமாரியர்கள் ஜெருசலேமில் பலியிடப்போகாமல், அவர்கள் பட்டணத்துக்கு அருகேயிருந்த காரீசிம் என்ற மலையின்மேல் சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமாய்ப் பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இந்தப் பலிகளெல்லாம் தெய்வபக்தியில்லாமல் யூதர்கள் வெறுஞ் சடங்குகளாக நிறைவேற்றிவந்ததினாலே அவைகளுக்கு முடிவுகாலம் வந்ததென்றும், இது முதற்கொண்டு ஞானமாயிருக்கப்பட்ட சர்வேசுரனை ஞானமும் உண்மையும் அடங்கிய தேவ விசுவாசம் தேவ நம்பிக்கை தேவ சிநேகத்தினாலே ஆராதிக்கிற காலம் வந்திருக்கிறதென்றும் சேசுநாதர்சுவாமி படிப்பிக்கிறார்.

John 4:24


தேவ வாக்கியம் அக்கினியால் (பரிசுத்தப்)பட்டது; அதை நம்பி இருக்கின்றவர்களுக்கு (அது) கேடய மாம்.

Proverbs 30:5

எல்லாத்துக்கும் முக்கியமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறே எந்த ஆணையிட்டாவது. சத்தியம் பண்ணாதிருங்கள். நீங்கள் தீர்வைக் குள்ளாகாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லக்கடவீர்கள். (மத். 5:34.)

James 5:12

நானோவென்றால், எனக்கு அவர்கள் உபாதனை பண்ணுங் காலத்தில் தவ உடையைத் தரித்துக் கொண்டு, ஒருசந்தி பிடித்து என் ஆத்துமத்தை தாழ்த்தி என் உள்ளத் தில் செபம்பண்ணிக்கொண்டிருந் தேன்.

Psalms 34:13

அவராலே நீங்கள் பெற்றுக் கொண்ட அபிஷேகம் உங்களிடத்தில் நிலைத்திருப்பதாக. அப்பொழுது ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டிய தில்லை. அவருடைய அபிஷேகம் சகலத் தையும்பற்றி உங்களைப் படிப்பிப்பதி னாலே, அந்தப் படிப்பினை உண்மையுள் ளதும் பொய்யற்றதுமாயிருக்கின்றது. அது உங்களைப் படிப்பித்தபடியே அவரிடத்தில் நிலைக்கொள்வீர்களாக.

1 John 2:27

தம்முடைய (ஞான) சிருஷ்டிப்புக்கு நாம் ஒரு ஆரம்பமாயிருக்கும் படி, அவர் தமது சித்தத்தின்படியே நம்மைச் சத்திய வாக்கியத்தால் ஜெனிப் பித்தார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

James 1:18

வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகி மைக்கு நிகராயிருந்தது. (மத். 1:16.) * 14. இவ்வாக்கியத்தைக் கொண்டு தேவ பிதாவின் வார்த்தையாகிய சுதனிடத்தில் தேவ சுபாவமும், மனுஷசுபாவமுமாகிய இரண்டு சுபாவமுண்டென்று ஒப்பிக்கப்படுகிறது. மாம்சமென்பது வேத வாக்கியங்களில் வழக்கமாய் ஆத்துமமுஞ் சரீரமுமுள்ள மனுஷ சுபாவத்தைக் குறிக்கிறது. ஆகையால் சுதனாகிய சர்வேசுரன் மாம்சமானாரென்கும்போது, அவர் ஒரே ஆளாய் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனுமாய் இருக்கின்றார் என்றறிக.

John 1:14

சர்வேசுரனுடைய குமாரன் வந்திருக்கிறாரென்றும், நாம் மெய் யான சர்வேசுரனை அறிந்து, அவரு டைய மெய்யான சுதனுக்குள் இருக்கும் படிக்கு நமக்கு அறிவைத் தந்தருளி னாரென்றும் அறிந்திருக்கிறோம். இவரே மெய்யான சர்வேசுரனும் நித்திய ஜீவியமுமாயிருக்கிறார். (லூக். 24:45.)

1 John 5:20

அப்படியானாலும் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போவது உங்களுக்கு நலமாயிருக்கின் றது. ஏனெனில் நான் போகாதிருந்தால், தேற்றுகிறவர் உங்களிடத்தில் வரார். நான் போவேனாகில், அவரை உங்களி டத்தில் அனுப்புவேன். (அரு. 14:16, 26.)

John 16:7

நான் ஆண்டவரைத் தேடி னேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; என் சகல துன்பங் களிலும் நின்று என்னை விடுவித் தார்.

Psalms 33:4

ஆகிலும் பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற வரும், பிதாவினிடத்தினின்று புறப் படுகிறவருமாகிய சத்திய இஸ்பிரீத்துவான தேற்றுகிறவர் வரும்போது, அவர் என்னைப்பற்றிச் சாட்சி சொல்லுவார். (லூக். 24:49; அரு. 14:26.)

John 15:26

அடாத வாயை உன்னின்று அகற்று; அவதூறு பேசும் உதடு களும் உனக்கு அகலவிருப்பன.

Proverbs 4:24


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |