Topic : Truth

மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்;
நாவால் எப்பழிச்சொல்லும் கூறாதவன், அயலானுக்குத் தீமை செய்யாதவன், பிறரைப் பழித்துரைக்காதவன்;

Psalms 15:2-3

அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.

1 John 3:18

இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல.

1 John 1:6

பின்னர், தம்மை விசுவசித்த யூதர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்.
உண்மையை அறிவீர்கள்; அவ்வுண்மையும் உங்களுக்கு விடுதலையளிக்கும்."

John 8:31-32

அன்பினாலே உண்மையைப் பற்றிக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும்.

Ephesians 4:15

இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.

Philippians 4:8

இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.

John 14:6

என் மக்கள் உண்மைக்கேற்ப நடக்கின்றனர் என்று கேள்விப்படுவதைவிட மேலானதொரு மகிழ்ச்சி எனக்கில்லை.

3 John 1:4

விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி.

Hebrews 11:1

நீதிமானின் உதடுகள் விருப்பமானவற்றையும், அக்கிரமிகளின் வாய் பொல்லாதவற்றையும் கவனிக்கின்றன.

Proverbs 10:32

கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்கவும். நாணித் தலைகுணியவேண்டிய செயலில் ஈடுபடாத வேலையாளாய் இருக்கவும், நெறிபிறழாது உண்மையின் வார்த்தையைப் போதிப்பவராய் இருக்கவும் முயற்சி செய்யும்.

2 Timothy 2:15

உம் உண்மை என்னும் நெறியில் என்னை நடத்தி எனக்கு அறிவு புகட்டியருளும்: என் மீட்பாரம் இறைவன் நீரே, என்றும் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

Psalms 25:5

கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்."

John 4:24

உண்மையின் பாதையை நான் தேர்ந்து கொண்டேன்: உம் முறைமைகளை என் கண்முன் கொண்டேன்.

Psalms 119:30

கடவுளின் வார்த்தை நெருப்பினால் (பரிசுத்தப்) பட்டது. அதை நம்பி இருக்கின்றவர்களுக்கு (அது) கேடயமாம்.

Proverbs 30:5

குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

James 5:12

உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு.

Psalms 34:13

நீங்களோ அவரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அந்த அபிஷுகம் உங்களில் நிலைத் திருக்கிறது; ஆகவே ஒருவரும் உங்களுக்குக் கற்பிக்கத் தேவையில்லை; அவரது அபிஷுகமே உங்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் கற்பித்து வருகிறது. உண்மையைத்தான் கற்பித்து வருகிறது, பொய்யையன்று. எனவே, அது உங்களுக்குக் கற்பித்தது போல அவருள் நிலைத்திருங்கள்.

1 John 2:27

தம் படைப்புக்களுள் நாம் முதற் கனிகளாகும் பொருட்டு, உண்மையை அறிவிக்கும் வாக்கினால் நம்மை ஈன்றெடுத்தார். தாமே விரும்பியபடி இங்ஙனம் செய்தார்.

James 1:18

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சிமை ஒரேபேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. ஆகவே அவர் அருளும் உண்மையும் நிறைந்து விளங்கினார்.

John 1:14

கடவுளின் மகன் வந்தார்; உண்மை இறைவனை அறியும் ஆற்றலை நமக்குத் தந்தார்; இதுவும் நமக்குத் தெரியும். அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் உண்மை இறைவனுக்குள் இருக்கிறோம்; இவரே உண்மைக் கடவுள். இவரே முடிவில்லா வாழ்வு.

1 John 5:20

எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

John 16:7

ஏனெனில், ஆண்டவருடைய வார்த்தை நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் உண்மையானவை.

Psalms 33:4

நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்; அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.

John 15:26

அடாத வாயை உன்னிடமிருந்து அகற்று. அவதூறு பேசும் உதடுகளும் உன்னைவிட்டு அகல இருக்கக்கடவன.

Proverbs 4:24


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |