Topic : Suffering

சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. (எபே.1:3; 1 இரா. 1:3.)
நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக்கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்களுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார்.

2 Corinthians 1:3-4

கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார்.

1 Peter 5:10

இதுமாத்திரமல்ல; துன்பங்களிலே முதலாய் மேன்மை பாராட்டுகிறோம். ஏனெனில் துன்பம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், (இயா. 1:3.)
பரீட்சை நம்பிக்கையையும் உண் டாக்குகிறதென்று அறிந்திருக்கிறோம்.

Romans 5:3-4

ஆகிலும் இக்காலத்தின் துன்ப துரிதங்கள் இனி நம்மிடத்தில் வெளிப் படப்போகிற மகிமைக்குச் சரிதகைமை யானதல்ல என்று எண்ணுகிறேன்.

Romans 8:18

அநியாயமாய் என்னோடு எதிர்ப்பவர்களும் முகாந்தரமின்றி என்னைப் பகைத்து கண்சாடை காட்டுகிறவர்களும் எனக்கு விரோதமாகச் சந்தோஷியாதிருக் கட்டும் (அரு. 15:25).

Psalms 34:19

ஏனெனில் இம்மையில் இலகுவாயும் ஒரு நொடிப்பொழுதுக்குமாத் திரமிருக்கிற நமது துன்பமானது நித்திய கனத்தையுடைய மகிமைப்பிரதாப மகத்துவத்தை அளவின்றிப் பெறுவிக்கும். (உரோ. 8:18.)

2 Corinthians 4:17

ஆகையால் கிறீஸ்துநாதர் நமக்காகத் தமது சரீரத்தில் பாடுபட்டிருக்கக்கொள்ள, நீங்களும் அப்படிப்பட்ட சிந்தனையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். (உரோ. 6:6.)

1 Peter 4:1

அப்படியிருக்கக் கிறீஸ்துநாதருடைய சிநேகத்தைவிட்டு நம்மைப் பிரிக்கப்போகிறது யார்? துன்பமோ? நெருக்கிடையோ? நிர்வாணமோ? ஆபத்தோ? கலாபனையோ? பயமோ?

Romans 8:35

ஆகிலும் நீங்கள் நீதியினிமித்தம் ஏதேனும் பாடுபட்டால் பாக்கியவான்கள். ஆதலால் அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படாமலும், கலங்காமலு மிருங்கள். (மத். 5:10.)

1 Peter 3:14

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள். இவ்விதமாய் கிறீஸ்துநாதருடைய கட்டளையை நிறைவேற்றுவீர்கள்.

Galatians 6:2

ஏனெனில் நீங்கள் கிறீஸ்துநாதரை விசுவசிப்பதற்குமாத்திரமல்ல, அவருக்காகப் பாடுபடுவதற்கும் உங்க ளுக்கு வரங் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Philippians 1:29

(வேறுவிதமாய் எண்ணி யிருக்க) அவர் மனிதரில் அருவருக்கப் பட்டவராகவும், கடைத்தர மானவராகவும், துன்புற்ற மனிதனாக வும், கஷ்டப் பரிட்சயமுளராகவும், முகமறைவானவராகவும், இகழ்ச் சிக்குரியராகவுங் காணப்பட்டதி னால் நாங்கள் அவரைச் சிந்தை கொள்ளவில்லை என்பர் (மாற். 9:11).

Isaiah 53:3

மெய்யாகவே அவரே நமது ஆயாசத்தை எடுத்துக்கொண்டு, நமது வேதனைகளைத்தானே சுமந்து கொண்டார்; நாம் அவரைக் குஷ்ட ரோகியாகவும், கடவுளால் தண்டிக் கப்பட்டவராகவும், ஒரு நிசேதகனா கவும் எண்ணினோம் (மத். 8:17).

Isaiah 53:4

இப்படி நான் அவரையும், அவருடைய உத்தானத்தின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிந்து அவருடைய மரணத்துக்கு ஒத்த சாயலாகி, (உரோ. 6:3-5.)

Philippians 3:10

தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவ னும் எனக்குப் பாத்திரவானல்ல. (மத். 16:24; மாற். 8:34; லூக்.14:27.)

Matthew 10:38

இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறீஸ்து நாதரும் நமக்காகப் பாடுபட்டு, தம் முடைய அடித்தடங்களை நீங்கள் பின்பற்றும்படியாக உங்களுக்கு மாதிரி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

1 Peter 2:21

அப்பொழுது யோபு எழுந் திருந்து தன் ஆடைகளைக் கிழித்துத் தலை மயிரைச் சிரைத்துத் தரையில் விழுந்து (கடவுளைத்) தொழுது:
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். தேவனுக்கு எப்படி இஷ்டமோ, அப்படியே ஆயிற்று. ஆண்டவரின் நாமத்திற்குத் தோத்திர முண்டாகக் கடவது என்றான். (சர்வப்.5:14; 1 திமோ.6:7.)

Job 1:20-21

தன் ஜீவனைக் கண்டடைகிற வன் எவனும் அதை இழப்பான்; என் னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். (மத். 16:25; லூக். 17:33; அரு.12:25.) * 39. தன் உயிர் பிழைக்கும்படி தேவ கற்பனையை மீறி நடக்கிறவன் நரகத்தில் நித்தியகாலம் செத்தும் சாகாமல் வேதனைப்படுவானாமே.

Matthew 10:39

(உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் பிதாக்களும் அறிந்திராத உண வாகிய மானூவை உனக்கு அளித் தார். அதினால் மனிதனானவன் அப்பத் தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயினின்று புறப்படுகிற ஒவ்வொரு வாக்கியத்தினாலும் பிழைப்பா னென்று உனக்குக் காண்பித்தருளி னார் (மத்.4:4; லூக்.4:4).

Deuteronomy 8:3

அன்றியும் என் ஆஸ்திபாஸ்திகளெல்லாவற்றையும் நான் ஏழைகளுக்குப் போஜனமாகப் பகிர்ந்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கும்படி கையளித்தாலும் என்னிடத்தில் தேவசிநேக மில்லாவிட்டால், எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை. (மத். 6:2, 3.)

1 Corinthians 13:3

அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி, ஓர் சிவப்புச் சால்வையை அவர்மேல் போர்த்தினார்கள்.
முள்ளுகளால் ஓர் முடியையும் பின்னி, அவருடைய சிரசின்மேல் வைத்து, ஓர் மூங்கில் தடியையும் அவருடைய வலது கையில் கொடுத் தார்கள். பின்னும், அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: யூதருடைய இராஜாவே வாழ்கவென்று அவரைப் பரிகாசம்பண்ணி , (அரு. 19:2, 3.)

Matthew 27:28-29

அதெப்படியென்றால், கிறீஸ்துநாதருடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல், கிறீஸ்துநாதர்வழியாக எங்களுக்கு ஆறுதலும் பெருகிவருகிறது.

2 Corinthians 1:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |