Topic : Suffering

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள்.
அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.

2 Corinthians 1:3-4

அருளுக்கெல்லாம் ஊற்றாகிய கடவுள், கிறிஸ்துவுக்குள் தம் முடிவில்லா மகிமைக்கு உங்களை அழைத்தவர், சிறிதுகாலம் நீங்கள் துன்புற்றபின், அனைத்தையும் சீர்ப்படுத்தி, உங்களுக்கு உறுதியும் உரமும் நிலைபேறும் அளிப்பார்.

1 Peter 5:10

அதுமட்டுமன்று, வேதனைகளிலும், பெருமை கொள்கிறோம். ஏனெனில், வேதனையால் பொறுமையும்.
பொறுமையால் மனத்திண்மையும் மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையும் என்று அறிந்திருக்கிறோம்.

Romans 5:3-4

இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என எண்ணுகிறேன்.

Romans 8:18

நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார்.

Psalms 34:19

நாம் படும் வேதனை அற்பமானது, நொடிப் பொழுதே நீடிப்பது; ஆயினும் அது நம்மில், அளவிடமுடியாத நித்திய மாட்சிமையை ஒப்புயர்வற்ற வகையில் விளைவிக்கிறது.

2 Corinthians 4:17

ஆகவே, கிறிஸ்து தம் ஊன் உடலில் பாடுபட்டதை நினைத்து, அவர் அப்போது கொண்டிருந்த உள்ளக் கருத்தை நீங்களும் படைக்கலமாக அணிந்து கொள்ளுங்கள்.

1 Peter 4:1

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்? வேதனையோ? நெருக்கடியோ? கலாபனையோ? பசியோ? ஆடையின்மையோ? இடர்களோ? வாளோ? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?

Romans 8:35

நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.

1 Peter 3:14

ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

Galatians 6:2

நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசம்கொள்வதற்கு மட்டுமன்று. அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் இறையருள் உங்களுக்கு அளிக்கப்பட்டது.

Philippians 1:29

இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய் துயரத்திலாழ்ந்தவராய் இருந்தார்; கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை.

Isaiah 53:3

மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்; ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.

Isaiah 53:4

இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.

Philippians 3:10

தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.

Matthew 10:38

இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.

1 Peter 2:21

அப்போது யோபு எழுந்திருந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தலையையும் மழித்து விட்டுத் தரையில் விழுந்து தொழுது,
நிருவாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிருவாணியாகவே திரும்பிப் போவேன்; ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார்; ஆண்டவரின் திருப்பெயர் வாழ்த்தப்பெறுக!" என்றார்.

Job 1:20-21

தன் உயிரைக் கண்டடைந்தவன் அதை இழந்துவிடுவான். எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்.

Matthew 10:39

(உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் முன்னோரும் அறிந்திராத மன்னாவை உனக்கு அளித்தார். அதனால்: மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று உனக்குக் காண்பித்தருளினார்.

Deuteronomy 8:3

எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும் எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல், எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

1 Corinthians 13:3

அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்;
முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.

Matthew 27:28-29

ஏனெனில், கிறிஸ்துவின் பாடுகள் எங்கள் வாழ்வில் மிகுந்திருப்பது போல், கிறிஸ்துவின் வழியாய் வரும் ஆறுதலும் மிகுந்திருக்கிறது.

2 Corinthians 1:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |