Topic : Strength

நீ பயப்படாதே; நாம் உன் னோடிருக்கிறோம், நம்பிக்கையில் தளராதே; ஏனெனில் நாம் (அபிர காம்) தேவனான உன் கடவுளாயிருக் கிறோம், அவருக்குச் செய்தது போலவே உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவிபுரிவோம்; நம்மு டைய நீதிமானின் பலமாயிருந்த நம் வலது கரம்தான் உன்னையும் ஆதரிக் கும்.

Isaiah 41:10

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்தவரோ எப்போதும் புது பலம் பூண்டவராய்ச் சிறகுகள்கொண்டு கழுகுகளைப்போல் பறந்தோடுவர், ஆயினுங் களைக்கமாட்டார்; நடந்து போவர்; பலங்குன்றவுமாட்டாராமே.

Isaiah 40:31


என்னைப் பலப்படுத்துகிறவரைக்கொண்டு என்னால் எல்லாங்கூடும்.

Philippians 4:13

அவர்தான் களைத்தவனுக்குப் பலங்கொடுக்கின்றவர்; அபல மானோர்க்குச் சத்துவத்தையும் பலத்தையும் மூட்டுகிறவர்.

Isaiah 40:29

இதனிமித்தம் எனக்கு உண்டா கும் பலவீனங்களிலும், அவமானங்க ளிலும், இக்கட்டுகளிலும், கலாபங்களி லும், நெருக்கிடைகளிலும், கிறீஸ்துவைப்பற்றி நான் பிரியப்படுகிறேன். ஏனெனில் எப்போது பலவீனப்படுகிறே னோ, அப்போது வல்லவனாயிருக்கி றேன்.

2 Corinthians 12:10

ஏனெனில், சர்வேசுரன் நமக்குப் பயத்தின் இஸ்பிரீத்துவைக் கொ டாமல், தைரியம், சிநேகம், மனஅமைதி என்பவற்றின் இஸ்பிரீத்துவைக் கொடுத் திருக்கிறார். (உரோ. 8:15.)

2 Timothy 1:7

சர்வேசுரனோ பிரமாணிக்கமுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தித் தின்மையினின்று உங்களைக் காப்பாற்றுவார்.

2 Thessalonians 3:3

ஆண்டவரையும், அவருடைய வல்லமையையும் தேடுங்கள்; அவரு டைய சந்நிதானத்தை நித்தமும் தேடுங்கள்.

1 Chronicles 16:11

வானமண்டலங்கள் சர்வே சுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டு கின்றன.
பகல் பகலுக்கு இச்சத்தியத்தை உரைக்கின்றது; இரவு இரவுக்கு அறிக்கை இடுகின்றது.

Psalms 18:1-2

விழிப்பாயிருங்கள்; விசுவாசத் திலே நிலைமையாயிருங்கள்; வீரராய் நடந்துகொள்ளுங்கள், திடமாயிருங்கள்.

1 Corinthians 16:13


ஐயையோ! ஐயோ! ஆண்ட வரே, தேவனே! உமது பராக்கிரமத் தினாலும் புஜ பலத்தினாலும் வானத் தையும் பூமியையும் படைத்தீர்; உம்மாலாகாதது ஏதுமில்லை.

Jeremiah 32:17

என் பிரான் ஆண்டவர் என் ஞக்துவமாயிருப்பார்; மான் உடைத் தானவைபோல் எனக்குக் கால்களை அமைப்பார்; என்னை வெற்றி (வாகை)யனாய்க் கீத கோஷத்தோடு எமது பர்வதங்கண்மீது கூட்டிப் போவார்.

Habakkuk 3:19

ஏனெனில் தேவ வாக்கியமானது உயிருள்ளதும், சக்தியுள்ளதும், இருபுறமும் கருக்குள்ள எந்த வாளிலும் அதிகக் கூரானதுமாயிருந்து, ஞானாத்துமாவையும், ஜீவாத்துமாவையும், மூட்டுகளையும், மூளையையுங்கூட ஊடுருவிப் பிரிக்கத்தக்கதுமாய், இருதயத்தின் நினைவுகளையும் கருத்துகளையும் வகையறுக்கத்தக்கதுமாய் இருக்கின்றது.

Hebrews 4:12

கடைசியாய், சகோதரரே, கர்த்தரிடத்திலும், அவருடைய சர்வ வல்லப சக்தியிலும் திடங்கொள்ளுங்கள்.

Ephesians 6:10

ஆண்டவரே! மகத்துவமும், வல்லமையும், மகிமையும், செயமும் தேவரீருடையது. உமக்கே தோத்திரம். பரலோகத்திலும் பூலோகத்திலும் இருக்கின்ற அனைத்தும் உம்முடைய தாமே. அரசாட்சி, கர்த்தரே, உம் முடையது. தேவரீர் எல்லோருக்கும் ஆண்டவராக உயர்ந்திருக்கிறீர்.

1 Chronicles 29:11

உன் சர்வேசுரனாகிய ஆண்ட வரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோ டும் சிநேகிப்பாயாக; இதுவே முதன் மையான கற்பனை.

Mark 12:30

நமக்குள் முயற்சியாயிருக்கிற தமது வல்லபத்தைக்கொண்டு, நாம் கேட்பதற்கும், எண்ணுவதற்கும் மிகவும் அதிகமாய்ச் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவராகிய அவருக்குத்,
திருச்சபையில் கிறீஸ்துநாதர் மூலமாய்த் தலைமுறை தலைமுறைகளாகச் சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. ஆமென்.

Ephesians 3:20-21

பின்னர் மாறுத்தாரமாக அவன் என்னைப் பார்த்து: யஸாரோப பேலுக்கு ஆண்டவர் அருளும் வாக்கியமாவது: சேனையினாலு மன்று, (சுய) பலத்தினாலுமன்று நமது ஆவியால் மாத்திரமுண்டு எனச் சேனைகளின் தேவனார் செப்புகின் றார் என உரைத்தார்.

Zechariah 4:6

சிலுவையைப்பற்றிய வாக்கியம் கெட்டுப்போகிறவர்களுக்கே பைத்தியமாயிருக்கிறது; இரட்சணியம் அடை கிறவர்களாகிய நமக்கோ, அது தேவ பலமாயிருக்கிறது. (உரோ. 1:16.)

1 Corinthians 1:18

எல்லா மனுப்புத்திரரிலும் நீர் சவுந்தரியமுள்ளவர்; உமது உதடு களிலே வடிவு ஊற்றப்பட்டிருக்கின் றது; ஆகையால் சர்வேசுரன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதித்தார்.

Psalms 44:3


ஏனெனில் தெய்வத்துவத்தின் சம்பூரணமெல்லாம் அவரிடத்தில் சரீரப் பிரகாரமாய்க் குடிகொண்டிருக்கிறது. *** 9. மனுஷ சுபாவம் தேவ சுபாவத்தோடு சேசுக்கிறீஸ்துநாதரில் ஒன்றித்தபடியால் தெய்வீக மகத்துவமெல்லாம் அவரிடத்தில் வசித்திருந்ததென்று அர்த்தமேயொழிய தெய்வீகம் மனுஷரூபமாய் மாறிப்போனதென்று அர்த்தமில்லை. ஆகையால் உலக போதகங்களையும் யூதர் போதகங்களையும் புறக்கணித்து, திவ்விய கர்த்தரைப் பின்சென்றால் நாம் தவறிப்போகமாட்டோம்.
மேலும் எல்லாத் துரைத்தனத் துக்கும், அதிகாரத்துக்கும் தலைவரா யிருக்கிற அவரிடத்தில் நீங்கள் சம்பூரண மாக்கப்பட்டிருக்கிறீர்கள்.

Colossians 2:9-10

எவ்வாறெனில், கண்ணுக்கெட்டாத அவருடைய இலட்சணங்கள் உலகமுண்டானதுமுதல் சிருஷ்டிக்கப் பட்ட பொருட்களாலே புத்திக்கெட் டும்படியாகி, அவருடைய நித்திய வல்லமையையும், தெய்வீகத்தையுங் கூட விளங்கப்பண்ணுவதால் அவர் கள் போக்குச்சொல்வதற்கு இடமே யில்லை

Romans 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |