9. ஏனெனில் தெய்வத்துவத்தின் சம்பூரணமெல்லாம் அவரிடத்தில் சரீரப் பிரகாரமாய்க் குடிகொண்டிருக்கிறது.
*** 9. மனுஷ சுபாவம் தேவ சுபாவத்தோடு சேசுக்கிறீஸ்துநாதரில் ஒன்றித்தபடியால் தெய்வீக மகத்துவமெல்லாம் அவரிடத்தில் வசித்திருந்ததென்று அர்த்தமேயொழிய தெய்வீகம் மனுஷரூபமாய் மாறிப்போனதென்று அர்த்தமில்லை. ஆகையால் உலக போதகங்களையும் யூதர் போதகங்களையும் புறக்கணித்து, திவ்விய கர்த்தரைப் பின்சென்றால் நாம் தவறிப்போகமாட்டோம்.
10. மேலும் எல்லாத் துரைத்தனத் துக்கும், அதிகாரத்துக்கும் தலைவரா யிருக்கிற அவரிடத்தில் நீங்கள் சம்பூரண மாக்கப்பட்டிருக்கிறீர்கள்.