Topic : Strength

நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.

Isaiah 41:10

ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.

Isaiah 40:31

என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து.

Psalms 73:26

எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

Philippians 4:13

அவரே களைத்தவனுக்குப் பலம் தருகிறார், வலிமையும் சக்தியும் அற்றவர்க்கு அவற்றை ஊட்டுகிறார்.

Isaiah 40:29

ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது, இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது, இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.

2 Corinthians 12:10

கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.

2 Timothy 1:7

அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காப்பாற்றுவார்.

2 Thessalonians 3:3

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.

1 Chronicles 16:11

என் ஆற்றலாய் உள்ளவரே, ஆண்டவரே, உமக்கு நான் அன்பு செய்கிறேன்.
ஆண்டவரே, நீரே என் கற்பாறை, என் அரண், என் மீட்பர்: என் இறைவனாக உள்ளவரே, நான் அடைக்கலம் புகுவதற்கு ஏற்ற கோட்டையாக உள்ளவரே, என் கேடயமும் எனக்கு மீட்பளிக்கும் வலிமையும் என் அடைக்கலமுமாக உள்ளவரே!

Psalms 18:1-2

விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கள், ஆண்மையுடன் நடந்துகொள்ளுங்கள்,

1 Corinthians 16:13

நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.

Psalms 59:16

ஆண்டவராகிய இறைவனே, உம்முடைய மிகுந்த வல்லமையாலும், நீட்டிய கரத்தாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவர் நீரே;

Jeremiah 32:17

ஆண்டவராகிய இறைவனே என் வலிமை, என் கால்களை மான் கால்களைப் போல் அவர் ஆக்குவார், உயரமான இடங்களில் என்னை நடத்திச் செல்வார். பாடகர் தலைவனின் பண்; இசைக்கருவி: நரம்புக் கருவி.

Habakkuk 3:19

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவின் உள்ளாழத்தையும் ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவுகிறது; மூட்டு, மூளைவரை எட்டுகிறது; உள்ளத்தின் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

Hebrews 4:12

இறுதியாக, ஆண்டவரில் அவர் தரும் வலிமைமிக்க ஆற்றலால் உறுதி பெறுங்கள்.

Ephesians 6:10

ஆண்டவரே, பெருமையும் மகிமையும் வல்லமையும் வெற்றியும் உமக்கே உரியன. புகழும் உமக்கே உரியது. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. அரசும் உம்முடையதே. ஆண்டவரே, நீரே மன்னருக்கு மன்னர், செல்வமும் மகிமையும் உம்முடையன.

1 Chronicles 29:11

ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக' என்பது முதல் கட்டளை.

Mark 12:30

நம்மில் செயலாற்றும் வல்லமைக்கேற்றபடி நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிக மேலாகச் செய்ய வல்ல அவருக்கே,
திருச்சபையிலும் கிறிஸ்து இயேசுவிலும், தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

Ephesians 3:20-21

அப்போது அவர் என்னிடம், "சொரொபாபெலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: ஆற்றலாலுமன்று, வல்லமையாலுமன்று, ஆனால் நமது ஆவியாலே ஆகும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Zechariah 4:6

சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுபவர்களுக்கு மடமையே; மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

1 Corinthians 1:18

எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர்.

Psalms 44:3

ஆண்டவரைத் தவிர வேறு தேவன் யார்? நம் இறைவனைத் தவிர வேறு அடைக்கலம் தரும் பாறை யார் ?

Psalms 18:31

ஏனெனில், அவருள்தான் கடவுள் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் குடிகொண்டிருக்கிறது. அவருள்ளே நீங்களும் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் முதலிய தூதர் அனைவருக்கும் தலைவர் அவரே.

Colossians 2:9-10

ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.

Romans 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |