Topic : Sickness

உங்களில் ஒருவன் வியாதியாயிருக்கிறானோ, அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணுவார்கள். (மாற். 6:13.) * 14. வியாதிக்காரர்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ளவும், தங்கள்பேரில் தைலத்தைப் பூசவும் திருச்சபையின் குருமார்களை வரவழைக்கக் கற்பிக்கிறார். இது கத்தோலிக்கு உரோமன் திருச்சபையிலே எக்காலத்திலும் நடந்துவருகிற ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்றாகிய அவஸ்தைபூசுதல் என்றறிக.
அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோடிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும். (மாற். 16:18.)

James 5:14-15

உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் சேவித்து வந்தால் நீங்கள் புசிக்கும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் நாம் ஆசீர்வாதங் கொடுத்து வியாதியை உங்களிடத்திலிருந்து விலகப்பண்ணுவோம்.

Exodus 23:25

ஆனந்திக்கிற மனம் உடலை மலரச் செய்கிறது; துயரமான மனம் எலும்புகளைகூட வற்றச்செய் கிறது (பழ. 15:13).

Proverbs 17:22

எனக்கு மிகவும் பிரியமுள்ளவனே, உன் ஆத்துமம் நன்றாய் வாழ்ந்திருப்பதுபோல், நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படிக்குப் பிரார்த்திக்கிறேன்.

3 John 1:2

அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானங் கட்டளையிட்டுக் கோது மையின் கொழுமையினால் உன் னைத் திருப்தியாக்கினார்.

Psalms 147:3

மெய்யாகவே அவரே நமது ஆயாசத்தை எடுத்துக்கொண்டு, நமது வேதனைகளைத்தானே சுமந்து கொண்டார்; நாம் அவரைக் குஷ்ட ரோகியாகவும், கடவுளால் தண்டிக் கப்பட்டவராகவும், ஒரு நிசேதகனா கவும் எண்ணினோம் (மத். 8:17).

Isaiah 53:4

நோயாளிகளைக் குணமாக்குங் கள், மரித்தோரை உயிர்ப்பியுங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குங்கள்; பசாசுகளை ஓட்டுங்கள். இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

Matthew 10:8

நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவரொருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமானுடைய அயராத வேண்டுதல் மிகுந்த வல்லமையுள்ளது. * 16. பின்னும் நீங்கள் இரட்சணியமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணுங்களென்று கற்பிக்கிறார். இங்கே ஒருவருக்கொருவர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமேதெனில், பாவப்பொறுத்தல் கொடுக்க அதிகாரம் பெற்ற குருமார்கள் ஒருவருக்கொருவர் என்றும் மற்றக் கிறீஸ்தஃவர்கள் அந்த அதிகாரம் பெற்றிருக்கிற தங்கள் குருமார்களிடத்திலென்றும் அர்த்தமல்லாது வேறல்ல. ஏனெனில், பாவப்பொறுத்தலைக் கொடுக்க அதிகாரமில்லாதவர்களிடத்தில் ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால் பிரயோஜனமென்ன?

James 5:16

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்த ரின் வாக்கியத்துக்குச் செவிகொடுத்து அவ ருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவரின் கற்பனைகளுக்கெல்லாம் கீழ்ப்பட்டு, அவருடைய கட்டளை யாவை யும் அனுசரிப்பீர்களாகில், எஜிப்த்தியருக்கு நாம் வரப்பண்ணின வாதைகளில் ஒன்றையும் உங்கள் மேல் வரச்செய்யமாட்டோம். ஏனெ னில் நாம் உங்கள் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

Exodus 15:26

தாமதிக்கப்படுகிற நம்பிக்கை ஆன்மாவை வருத்துகிறது; சீவிய விருட்சமாம் நிறைவேறுகிற ஆசை .

Proverbs 13:12

அவ்விடத்திலுள்ள நோயாளிகளைச் சொஸ்தமாக்கி, சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களுக்குச் சமீபித்தது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Luke 10:9

(வேறுவிதமாய் எண்ணி யிருக்க) அவர் மனிதரில் அருவருக்கப் பட்டவராகவும், கடைத்தர மானவராகவும், துன்புற்ற மனிதனாக வும், கஷ்டப் பரிட்சயமுளராகவும், முகமறைவானவராகவும், இகழ்ச் சிக்குரியராகவுங் காணப்பட்டதி னால் நாங்கள் அவரைச் சிந்தை கொள்ளவில்லை என்பர் (மாற். 9:11).

Isaiah 53:3


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |