Topic : Salvation

(இவராலன்றி) வேறு எவராலும் இரட்சணியமில்லை; ஏனெனில் நாம் இரட்சணியம் அடையவேண்டியதற்கு வானத்தின்கீழ் (அவருயை நாமமல் லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை, என்றார்.

Acts 4:12

அதற்கு அவர்கள்: ஆண்டவராகிய சேசுநாதரை விசுவசி. அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

Acts 16:31

அவர் நம்முடைய கிரியைகளைப் பாராமல், தம்முடைய சித்தத்தையும், கிறீஸ்து சேசுவுக்குள் உலகாதிகாலத்துக்குமுன் நமக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்தையும் பார்த்து, நம்மை மீட்டிரட்சித்து, தம்முடைய பரிசுத்த அழைப்பால் நம்மை அழைத்திருக்கிறார். (தீத்து. 3:5.)

2 Timothy 1:9

தேவனே! என்னுடைய தேவனே! விடியற்காலம் விழித்து நான் உம் மைத் தேடுகிறேன்; என் ஆத்துமம் உமதுபேரில் தாகங்கொண்டது; என் சரீரமும்கூட உமது பேரில் எவ்வளவு வாஞ்சை கொண்டது.

Psalms 62:1

அப்பொழுது சம்பவிப்பதே தெனில், ஆண்டவருடைய நாமத்தை மன்றாடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் என்று கர்த்தர் திருவுளம்பற்றுகிறார் என்பதே. (யோவேல் 2:32; உரோ. 10:13.)

Acts 2:21

அநீதர்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள மாட்டார்கள் என்று அறியீர்களோ? மோசம் போகாதேயுங்கள்: தூர்த்தரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக் காரரும், (கலாத். 5:19; எபே. 5:5.)
சிற்றின்பப்பிரியரும், ஆணும் ஆணுமாய் மோகிக்கிறவர்களும், திருடரும், பொருளாசைக்காரரும், குடி வெறியரும் உதாசினரும், கொள்ளைக்காரரும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை.

1 Corinthians 6:9-10

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

எவ்வாறெனில், நீதியை அடைய இருதயத்தால் விசுவசிக்கிறோம். இரட்சணியமடைய வாயால் அறிக்கையிடுகிறோம்.

Romans 10:10

சிலர் எண்ணுகிறபடி ஆண்டவர் தமது வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தாமதிப்பதில்லை. ஆனாலும் அவர் ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்பவேண்டுமென்று விரும்பி, உங்களைப்பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார். (எசே. 18:23; 1 தீமோ. 2:4.)

2 Peter 3:9

அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் சர்வேசுரனால் கூடும் என்று அவர்களுக்குச் சொன்னார்.

Luke 18:27

சிதறிப்போனதைத் தேடி இரட் சிக்கும்படியாகவே மனுமகனும் வந்தி ருக்கிறார் என்றார். (மத். 18:11.)

Luke 19:10

விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

Mark 16:16

அவரை நீங்கள் காணாதிருந்தும், சிநேகிக்கிறீர்கள்; இப்போது நீங்கள் அவரைத் தரிசியாதிருந்தும், அவரை விசுவசிக்கிறீர்கள். விசுவசித்து,
உங்கள் விசுவாசத்தின் கதியாகிய ஆத்தும இரட்சணியத்தை அடைவீர்களென்பதால், வாக்குக்கெட்டாத தும், மகிமை நிறைந்ததுமான சந்தோ ஷத்தால் அகமகிழுவீர்கள்.

1 Peter 1:8-9

நெருக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஏனென்றால் கேட்டுக்குச் செல்லும் வாசல் அகன்றதும் அதன்வழி விசாலமுமாயிருக்கின்றது. அதில் பிரவேசிக்கிறவர்களும் அநேகர். (லூக். 13:24.)
சீவியத்துக்குச் செல்லும் வாசல் எவ்வளவோ நெருக்கமும் அதன் வழி எவ்வளவோ ஒடுக்கமுமாயிருக்கின்றது! அதைக் கண்டுபிடிக்கிறவர்களும் சொற்பப்பேர்.

Matthew 7:13-14

அப்படியே கிறீஸ்துநாதரும் அநேகருடைய பாவங்களை நிர்மூலமாக்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார். இரண்டாந்தரமோ தம்மை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இரட்சகராகப் பாவமின்றித் தோன்றுவார். (உரோ. 5:9; 1 இரா. 3:18.)

Hebrews 9:28

ஏனெனில்: நீர் பூமியின் கடைசி எல்லைமட்டும் இரட்சிப்பாயிருக்கும் படிக்கு உம்மைப் புறஜாதியாருக்கு ஒளியாக ஏற்படுத்தினேன், என்றபடி ஆண்டவர் எங்களுக்கு இவ்விதமாய்க் கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள். *** 47. இதில் சொல்லப்பட்ட வாக்கியம் இசையாஸ் தீர்க்கதரிசனம் 49-ம் அதி.

Acts 13:47

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறதே அரிது. ஆகிலும் நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணியலாம்.
ஆனால் நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்.

Romans 5:7-8

ஏனெனில் சுவிசேஷத்தைப்பற்றி நான் கூச்சப்படேன். ஏனென்றால் முந்த யூதரிலும், பின்பு கிரேக்கரிலும் விசுவசிக் கிற எவனுக்கும் அது இரட்சணியமாகிய தேவ வல்லபமாயிருக்கின்றது. (மத். 10:32; 1 கொரி. 1:23; அப். 13:46.) *** 16. யூதரிலும் கிரேக்கரிலும்:- கிரேக்கத் தேசத்தார் சாதாரணமாய் அஞ்ஞானிகளாயிருந்ததினாலும், அவர்கள் பல தேசங்களில் பரவியிருந்ததினாலும், இவ்விடத்திலும், இன்னும் பல இடங்களிலும் கிரேக்கர் என்பது அஞ்ஞானிகளென்று அர்த்தங்கொள்ளுகிறது. சில சமயங்களில் யூதர்களல்லாத இதர ஜாதிகளென்றும் அர்த்தங்கொள்ளும். (மெனோக்கியுஸ்)

Romans 1:16

சேசுநாதர் அவர்களை நோக்கி: இது மனிதர்களால் கூடாததாயினும், சர்வேசுரனால் கூடாததல்ல; ஏனெனில் சர்வேசுரனால் சகலமும் கூடுமென்று திருவுளம்பற்றினார்.

Mark 10:27

அன்றியும் ஆதாமில் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறீஸ்துநாதரில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1 Corinthians 15:22


ஏனெனில், (அக்காலையில்) அத்தி புஷ்பிக்காது; திராட்சைக் கொடிகள் தளிர் கொள்ளா; ஒலீவ் மரம் கனி மோசஞ் செய்யும்; வயல் கள் தானியந் தராது; ஆடின்றி மந்தை வெறுமையாகும்; தொழுவங்களில் மாடு கன்றுகளிரா.
யானோ ஆண்டவரில் சந்தோ ஷங் கொண்டாடுவேன்; என் இரட்சகராகிய தேவனின் அக்களிப் புக் கொள்வேன்.

Habakkuk 3:17-18

நமது கண்களுக்கு நீ கனமுற்ற தாயும், விலையேறப்பெற்றதாயும் ஆனது தொட்டு உன்னை விசேஷ விதமாய் நேசித்தோம்; உனக்காக மனிதரை (பிறர்) கையளிப்போம், உன் சீவனுக்காகச் சனங்களைப் போக்கடிப்போம்.

Isaiah 43:4

நாம் சர்வேசுரனுக்குச் சத்துருக்களாயிருக்கையிலே, தேவ சுதனு டைய மரணத்தினால் அவரோடு சமாதானமாக்கப்பட்டிருக்க, சமாதான மாக்கப்பட்டபின்பு அவருடைய ஜீவனால் நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

Romans 5:10

சேசுநாதர் அவனை நோக்கி: நீ போகலாம்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். என்றவுடனே அவன் பார்வையடைந்து, வழியில் அவரைப் பின்தொடர்ந்து போனான்.

Mark 10:52


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |