Topic : Salvation

இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனெனில், நாம் ' மீட்படைவதற்கு அவர் பெயரைத்தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை."

Acts 4:12

அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றனர்.

Acts 16:31

கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;

2 Timothy 1:9

கடவுளிடம் தான் என் ஆன்மா சாந்தி கொள்கிறது. அவரிடமிருந்தே எனக்கு மீட்பு வருகிறது.

Psalms 62:1

அப்பொழுது, ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான். '

Acts 2:21

அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.

1 Corinthians 6:9-10

மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி
நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.

Titus 2:11-12

ஆம், உள்ளத்தால் விசுவாசிப்பவன் இறைவனுக்கு ஏற்புடையவனாவான்; வாயினால் அறிக்கையிடுகிறவன், மீட்புப் பெறுவான்.

Romans 10:10

ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.

2 Peter 3:9

அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.

Luke 18:27

இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

Luke 19:10

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

Mark 16:16

நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை; எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,
உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.

1 Peter 1:8-9

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழி பரந்தது; அதன் வழியே நுழைபவரும் பலர்.
வாழ்வுக்குச் செல்லும் வாயில் எவ்வளவோ ஒடுக்கமானது; வழி எவ்வளவோ இடுக்கானது. இதைக் கண்டுபிடிப்பவரும் சிலரே.

Matthew 7:13-14

அவ்வாறே கிறிஸ்துவும் பல்லோர் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறையில் எக்காலத்திற்குமே தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். மீண்டும் தோன்றுவார். அப்போது பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக அன்று, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அளிக்கும் பொருட்டே தோன்றுவார்.

Hebrews 9:28

ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.

Acts 13:47

நீதிமானுக்காக ஒருவன் தன் உயிரைக்கொடுத்தல் அரிது- ஒருவேளை நல்லவன் ஒருவனுக்காக யாரேனும் தன் உயிரைக் கொடுக்கலாம் - ஆனால் .
நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்கிறார்.

Romans 5:7-8

நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்; ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.

Romans 1:16

இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

Mark 10:27

ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்.,

1 Corinthians 15:22

பாதுகாப்புத் தரும் உம் கேடத்தை நீர் எனக்கு அளித்தீர்: உமது வலக்கரம் என்னை ஆதரித்தது; நீர் என்னிடம் காட்டிய பரிவு நான் மாண்புறச் செய்தது.
நான் செல்லும் வழியை நீர் விசாலமாக்கினீர்: என் கால்களும் தளர்வுறவில்லை.

Psalms 18:35-36

அத்திமரங்கள் பூக்காவிட்டாலும், திராட்சைக் கொடிகளில் பழமில்லாவிட்டாலும், ஒலிவமரங்களின் பலன் அற்றுப் போயினும், வயல்களில் விளைச்சல் கிடைக்காவிடினும், கிடையில் ஆடுகள் இல்லாமற் போனாலும், தொழுவங்களில் மாடுகள் இல்லாதிருந்தாலும்,
நான் ஆண்டவரில் அக்களிப்பேன், என் மீட்பரான கடவுளில் அகமகிழ்வேன்.

Habakkuk 3:17-18

நமது கண்ணுக்கு நீ விலையேறப் பெற்றவன், மதிப்புக்குரியவன், உன் மேல் மிகுந்த அன்பு கொண்டோம்; ஆதலால் தான் உனக்காக மனிதரைக் கையளிப்போம், உன் உயிருக்காக மக்களை மாற்றிக் கொள்வோம்.

Isaiah 43:4

கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகனது மரணத்தின் வழியாய் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப் பட்ட நாம் அவருடைய உயிரால் மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாமன்றோ

Romans 5:10

இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

Mark 10:52


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |