Topic : Purification

ஆகையால் அன்புக்குரியவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கும் நாம் உடலிலும் உள்ளத்திலும் எவ்வித மாசுமின்றி நம்மைத் தூயவர்களாக்கிக்கொள்வோமாக, கடவுளுக்கு அஞ்சிப் பரிசுத்தத்தின் முழுமையை அடைவோமாக.

2 Corinthians 7:1

மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.
ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,
களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.
இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.

Mark 7:20-23

தூயதோர் உள்ளத்தை, இறைவா, நீர் என்னகத்தே உருவாக்கும்: உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்.

Psalms 51:10

இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும்.
நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்.

Psalms 51:1-2

மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.

1 John 1:9

அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.

James 4:8

கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.

Ephesians 5:25-26

உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள். நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்; தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்;

Isaiah 1:16

மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

1 John 1:7

அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.

1 John 3:2-3

இவர் நம்மை எல்லா அக்கிரமத்திலிருந்தும் மீட்கவும், நம்மைத் தூயவர்களாக்கி, நற்செயல்களில் ஆர்வமுள்ள ஓரினமாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் தம்மை நமக்காகக் கையளித்தார்.

Titus 2:14

இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.

1 Peter 3:21

கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய உள்ளியல்பின் சாயலாகவும் விளங்கும் இவர் தம்முடைய வல்லமை மிக்க வார்த்தையால் எல்லாவற்றையும் தாங்கி வருகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திய பின்னர் உன்னதங்களில் மகத்துவமிக்கவரின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.

Hebrews 1:3

இனித் தாமதமேன்? எழுந்து அவருடைய பெயரைச் சொல்லி, மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்ளும்" என்றார்.

Acts 22:16

நான் உங்களுக்குக் கூறிய வார்த்தையால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாக இருக்கிறீர்கள்.

John 15:3


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |