Topic : Purification

இந்த வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினாலே, மிகவும் பிரியமானவர்களே, மாம்சத்திலும் மன திலும் உள்ள எவ்வித அழுக்குகளும் நீங்க நம்மைச் சுத்திகரித்து, தெய்வபயத் தை முன்னிட்டு நமது அர்ச்சிப்பின் வே லையைப் பூரணமாய் முடிக்கக்கடவோம்.

2 Corinthians 7:1

மனிதனுடைய இருதயத்திலி ருந்து புறப்படுகிறவைகளே மனிதனை அசுத்தப்படுத்துகின்றன.
ஏனெனில் மனிதனுடைய இரு தயத்துக்குள்ளிருந்து துர்ச்சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், லோபித்தனங்க ளும், துஷ்டத்தனங்களும், கபடங்களும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தேவ தூஷணமும், ஆங்காரமும், மதிகேடும் புறப்படுகின்ற ன. (ஆதி. 6:5.)
இந்தத் தின்மைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனி தனை அசுத்தப்படுத்துகின்றன என்றார்.

Mark 7:20-23


அக்கிரமத்தை செய்ய வல்ல வனாயிருக்கிற நீ ஏன் துஷ்டத்தனத் தில் மகிமை பாராட்டுகிறாய்?
நாள்முழுதும் உன் நாவு நீ (எனக்குச்) செய்த அநியாயத்தையே சிந்தித்தது; மோசகரமான சவரகன் கத்தியைப் போல் (என்னை உபா தித்தது).

Psalms 51:1-2

நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம்பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரி சுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக் கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

1 John 1:9

சர்வேசுரனை அண்டிப்போங்கள்; அவரும் உங்களை அண்டிவருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (இசை. 1:16.)

James 4:8

புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்ததுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.)
கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு ஜல ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும்,

Ephesians 5:25-26

கரங்களைக் கழுவுங்கள், சுத்திசெய்யுங்கள்; எம் கண்கள் முன் னின்று உங்கள் கிரியைகளின் தீமையை அகற்றுங்கள், தீங்குச் செயலை ஒழியுங்கள் (1 இரா. 3:11)..

Isaiah 1:16

அவர் பிரகாசத்தில் இருப்பது போல், நாமும் பிரகாசத்தில் நடப்போமானால், நாம் அந்நியோன்னிய ஐக்கியமுள்ளவர்களாயிருப்பதுமன்றி, அவருடைய குமாரனாகிய சேசுக்கிறீஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவத்திலும் நின்று சுத்திகரிக்கும்.

1 John 1:7

மகா அன்பரே, இப்போது நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போ மென்பது இன்னும் நமக்கு வெளிப்படவில்லை. அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்.
மீளவும் அவர்மேல் இந்த நம்பிக் கை வைத்திருக்கிறவனெவனும், அவர் பரிசுத்தமாயிருக்கிறதுபோல் தன்னை யும் பரிசுத்தமாக்கிக்கொள்ளுகிறான்.

1 John 3:2-3

இவரே நம்மைச் சகல அக்கிரமங்களிலும் நின்று இரட்சித்து, நம்மைச் சுத்தமாக்கி, தமக்கு உகந்தவர்களும், நற்கிரியைகளில் வைராக்கி யருமான ஜனமாக்கிக்கொள்ளும் படி தம்மைத்தாமே நமக்காகக் கை யளித்தார்.

Titus 2:14

அதற்கொத்த ஒப்பனையான ஞானஸ்நானமானது சரீர அழுக்கை நீக்குவதாயிராமல், சர்வேசுரன்மட்டில் நல்ல மனச்சாட்சி உண்டாவென்று அத்தாட்சியாயிருந்து,சேசுக் கிறீஸ்து நாதருடைய உத்தானத்தைக் கொண்டு நம்மை இரட்சிக்கிறது.

1 Peter 3:21

இவர் அவருடைய மகிமையின் பிரதாபமும் அவருடைய தற்பொருளின் சொரூபமாய் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லப வார்த்தையால் தாங்கி, நம்மைப் பாவங்களினின்று சுத்திகரித்து, உன்னத ஸ்தலங்களில் அவருடைய மகத்துவ வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். (ஞானா. 7:26; மாற். 16:19.) * 3. மகிமையின் பிரதாபம்: - முகக்கண்ணாடியில் ஒருவனுடைய சாயல் முழுவதும் பிரதிபிம்பமாய்த் தோன்றுவதுபோல, பிதாவாகிய சர்வேசுரனுடைய சாயல் முழுவதும் சுதனிடத்தில் தோன்றுகிறது. அவருடைய தற்பொருளின் சொரூபம்: - சுதனாகிய சர்வேசுரன் தேவ பிதாவின் சுயசாயலும், அவருடைய தற்பொருளின் சொரூபமுமாயிருக்கிறார். முத்திரைக்கோலிலுள்ள சகல விஷயங்களும் முத்திரையில் பதிவதுபோல, பிதாவினிடத்திலுள்ள சுபாவமும் இலட்சணங்களும் சுதனிடத்தில் பதிந்திருக்கின்றன.

Hebrews 1:3

ஆகையால் இப்போது நீர் தாமதிப்பானேன்? எழுந்திருந்து, அவருடைய நாமத்தை மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று, உம்முடைய பாவங்களைக் கழுவும் என்றார்.

Acts 22:16

நான் உங்களுக்குச் சொன்ன வாக்கியத்தின் நிமித்தம் நீங்கள் இப்போதே சுத்தமாயிருக்கிறீர்கள். (அரு. 13:10.) * 3. நான் உங்களுக்குச் சொன்ன வாக்கியத்தினிமித்தம் நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள் என்பதற்கு, நான் உங்களுக்குச் சொன்ன திராட்ச செடியின் உவமைப்படி நீங்கள் என்னோடு ஒன்றித்திருப்பதினாலும், என்னுடைய வார்த்தைகளை விசுவசித்து நம்பியிருப்பதினாலும், நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள் என்றர்த்தமாம்.

John 15:3


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |