Topic : Neighbor

'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக' என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை" என்றார்.

Mark 12:31

இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.

1 Peter 3:8

ஆகையால் நீங்கள் இப்போது செய்து வருவதுபோலவே, ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்; ஞான வளர்ச்சி அடைய ஒருவர்க்கொருவர் துணை செய்யுங்கள்.

1 Thessalonians 5:11

யாரும் தன்னலத்தை நாடலாகாது; அனைவரும் பிறர் நலத்தையே நாடவேண்டும்.

1 Corinthians 10:24

ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

Galatians 6:2

உன்மீது நீ அன்பு காட்டுவது போல, உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது.

Galatians 5:14


போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

Philippians 2:3

சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
விருந்தோம்பலை மறவாதீர்கள். 'விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களையும் உபசரித்ததுண்டு.

Hebrews 13:1-2

நமக்கு உகந்ததையே தேடலாகாது. பிறர்க்கு ஞான வளர்ச்சி தரும் நன்மை உண்டாகும்படி. நம்முள் ஒவ்வொருவனும் அயலார்க்கு உகந்தவனாய் இருத்தல் வேண்டும்.

Romans 15:2

ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

Romans 14:13

ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!

Galatians 6:10

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.

Colossians 3:13

அனைத்திற்கும் மேலாக, ஒருவர்க்கொருவர் எப்போதும் அன்பு காட்டுங்கள்; ஏனெனில், அன்பு திரளான பாவங்களை அகற்றி விடும்.

1 Peter 4:8

நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனுக்கு உதவி செய்யுங்கள், திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்கு நடத்துங்கள்.

Isaiah 1:17

ஆகையால், பிறருக்குத் திர்ப்பிடும் மனிதா, நீ யாராயினும் சரி, சாக்குச் சொல்லுவதற்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்குத் தீர்ப்பிடுவதால் நீ உனக்கு எதிராகவே தீர்ப்புக் கூறுகிறாய்; தீர்ப்புக்கூறும் நீயே அவற்றைச் செய்கிறாயே!

Romans 2:1

நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.

John 13:34

அன்பு பிறர்க்குத் தீமை செய்யாது. ஆகவே. திருச்சட்டத்தின் நிறைவு அன்பே.

Romans 13:10

தன் நண்பனுக்கு இரக்கம் காட்டாத ஒருவன் எல்லாம் வல்லவரைப் பற்றிய அச்சத்தையே தவிர்க்கிறான்.

Job 6:14

சகோதரர்க்குரிய முறையில் ஒருவர்க்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.

Romans 12:10

ஏனெனில், 'விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, இச்சிக்காதே 'என்னும் கட்டளைகளும் வேறு எந்தக் கட்டளையும் 'உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீது அன்பு காட்டுவாயாக' என்னும் ஒரே கட்டளையில் சுருக்கமாய் அடங்கியுள்ளன.

Romans 13:9

உங்கள் மீது எங்களுக்குள்ள அன்பு பெருகுவது போல், ஒருவருக்கொருவர் மீதும் உங்களுக்குள்ள அன்பில் ஆண்டவர் உங்களை வளர்ந்தோங்கச் செய்வாராக.

1 Thessalonians 3:12

தந்தையாகிய கடவுள் முன்னிலையில் புனிதமும் மாசற்றதுமான தொண்டு எதுவெனில், வேதனையுறும் அனாதைகள், கைம்பெண்கள் இவர்களை ஆதரிப்பதும், உலகத்தால் மாசுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வதுமே.

James 1:27

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.

1 John 3:11

ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.

Romans 14:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |