Topic : Mercy

தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறை அருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக.

Hebrews 4:16

' பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

Matthew 9:13

ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.
ஆண்டவர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து, உன்மேல் இரக்கமாய் இருப்பாராக.
ஆண்டவர் உன் பக்கம் தம் திருமுகத்தைத் திருப்பி, உனக்குச் சமாதானம் அருள்வாராக என்பதாம்.

Numbers 6:24-26

ஆனால், கடவுள் இரக்கப் பெருக்கமுள்ளவர், அன்புமிக்கவர், நம் குற்றங்களால் நாம் இறந்தவர்களாய் இருந்தபோதிலும்,
அவர் நம்மீது கொண்ட பேரன்பினால் கிறிஸ்துவோடு நாம் உயிர்பெறச் செய்தார்.

Ephesians 2:4-5

இறைவா, உம் இரக்கத்திற்கேற்ப என்மீது இரக்கம் வையும்: உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்குறைகளைப் போக்கிவிடும்.
நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்: என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்.

Psalms 51:1-2

ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.

Psalms 103:8

அருளுக்கெல்லாம் ஊற்றாகிய கடவுள், கிறிஸ்துவுக்குள் தம் முடிவில்லா மகிமைக்கு உங்களை அழைத்தவர், சிறிதுகாலம் நீங்கள் துன்புற்றபின், அனைத்தையும் சீர்ப்படுத்தி, உங்களுக்கு உறுதியும் உரமும் நிலைபேறும் அளிப்பார்.

1 Peter 5:10

உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்டமாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர்.

Micah 7:18

மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி
நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.

Titus 2:11-12

"மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.

Matthew 6:14

ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை நினைவுகூரும்: ஆதி கால முதல் உள்ள உம் அருளன்பை மறவாதேயும்.
இளமையில் நான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினையாதேயும்: உம் அருள் அன்பிற்கேற்ப என்னை நினைவு கூரும், உமது அருள் நன்மையின் பொருட்டென்னை மறவாதேயும்.

Psalms 25:6-7

ஆதலால் உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்; அவ்வாறு உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதால் அவர் மகிமைப்படுத்தப் பெறுவார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள், அவருக்குக் காத்திருப்பவர்கள் பேறு பெற்றோர்.

Isaiah 30:18

கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;

2 Timothy 1:9

சகோதரர்களே! கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: உங்கள் உடலைக் கடவுளுக்கு உகந்த பரிசுத்த பலியாகவும், உயிருள்ள பலியாகவும் ஒப்புக் கொடுங்கள்.

Romans 12:1

ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.

Revelation 22:21

பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்துதல் ஆகாது; நீங்கள் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை; இறையருளின் அதிகாரத்திலே இருக்கிறீர்கள்.

Romans 6:14

ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை.

Romans 6:15

எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.

Romans 3:23-24

நம் ஆண்டவராகிய கடவுள் இன்முகம் காட்டுவாராக: எங்கள் வேலைகளைப் பயனுள்ளவையாக்கும்.

Psalms 90:17

தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

John 3:16

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.

Psalms 112:5

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.

Philemon 1:25

ஆகவே, உங்கள் மனம் செயலாற்ற ஆயத்தமாயிருக்கட்டும். மட்டுமிதத்தோடு இருங்கள்; இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் உங்களுக்கு அளிக்கப்பெறும் அருளின் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.

1 Peter 1:13

ஆனால் குற்றத்தின் தன்மை வேறு, அருட்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவன் செய்த குற்றத்தால் அனைவரும் இறந்தார்கள் அல்லவா? ஆனால் கடவுளின் அருளும், இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதரின் அருளால் கிடைக்கும் கொடையும் அனைவருக்கும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியுள்ளன.

Romans 5:15

இவ்வாறு சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியது போல், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய், முடிவில்லா வாழ்வுக்காக இறையருள் மனிதரை இறைவனுக்கு ஏற்புடையராக்கி, ஆட்சி செய்கிறது.

Romans 5:21


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |