Topic : Life

ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர்.
ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.

Psalms 121:7-8

ஆகையால், உங்கள் நடத்தையைப் பற்றிக் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் நடக்காமல் ஞானிகளாக நடந்து கொள்ளுங்கள்.
நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; இது பொல்லாத காலம்.

Ephesians 5:15-16

நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல், ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள்.
அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களைத் தம் வாரிசுகளாக்குவார் என உங்களுக்குத் தெரியுமன்றோ? நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே.

Colossians 3:23-24

நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுகிறவன் வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

Proverbs 21:21

ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?

Mark 8:36

ஏனெனில், கண்கூடான காட்சி நமக்கில்லை. நாம் வாழ்வது விசுவாச வாழ்வு--

2 Corinthians 5:7

என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து.

Psalms 73:26

" வாழ்வை விரும்பி இன்பநாளைச் சுவைக்க விழைபவன், தீமையினின்று தன் நாவைக் காத்துக் கொள்க; வஞ்சகப் பேச்சினின்று தன் வாயைக் காத்துக்கொள்க;
தீமையினின்று விலகி நன்மை செய்க; அமைதியை நாடி அதனைத் தொடர்க;

1 Peter 3:10-11

நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ, அவ்வாறே மனிதர்களுடைய இதயங்கள் விவேகிகளுக்கு வெளியரங்கமாய் இருக்கின்றன.

Proverbs 27:19

ஏனெனில், நீர் எனக்குக் கற்கோட்டையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்: உம் பெயரின் பொருட்டு என்னை வழி நடத்தியருள்வீர், நல்வழி காட்டுவீர்.

Psalms 31:3

ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் காட்டியருளும்: உம் நெறிகளை எனக்குக் கற்பித்தருளும்.

Psalms 25:4

உன் இதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்; ஏனென்றால், வாழ்வே அதனின்றுதான் புறப்படுகின்றது.

Proverbs 4:23

இதுவே நீங்கள் செலுத்தவேண்டிய ஆன்மீக வழிபாடு. இவ்வுலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக. இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள். அப்போது எது நல்லது, எது உகந்தது, எது தலை சிறந்தது என உங்களுக்கு விளங்கும்.

Romans 12:2

ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.

Psalms 37:7

அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.

John 6:35

தன் நாவைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால், பேச்சில் கவனமில்லாதிருப்பவன் தீமையைச் சுமக்கிறான்.

Proverbs 13:3

கருணையும் அருளும் என்னைத் தொடரும்; என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்: ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்; ஊழி ஊழிக்காலமும் குடியிருப்பேன்.

Psalms 23:6

நீ வாழ்ந்து பெருகவும், நீ உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசீர் அளிக்கும்படிக்கும் நீ அவர் பால் அன்புகொள்ளவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு அனுசரிக்கவும் கடவாய்.

Deuteronomy 30:16

எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான்.

Hebrews 12:14

கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காகத் தம்மையே கையளித்தார்.

Galatians 2:20

ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்.

Matthew 16:25

அறிவாளி தன் ஆன்மாவை நேசிக்கிறான். விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.

Proverbs 19:8

உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்; அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்.

James 3:13

அறிவுரையை அனுசரிப்பவன் வாழ்வுப் பாதையிலே நடக்கிறான். கண்டனங்களைக் கைநெகிழ்பவனோ அலைந்து திரிகிறான்.

Proverbs 10:17

மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.

John 7:38


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |