Topic : Life

உன் வீரத்தில் சமாதானமும் உன் கோட்டைகளில் சம்பூரணமும் உண்டாவதாக.
என் சகோதரரையும் என்னைச் சேர்ந்தாரையும் பற்றி உனக்காகச் சமாதானம் பேசினேன்.

Psalms 121:7-8

ஆதலால் சகோதரரே, நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடக்க வேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். புத்தியீனரைப்போல் நடவாமல், (கொலோ. 4:5.)
காலம் கெட்டுப்போயிருக்கிறபடியால், போன காலத்தை மீட்டு, ஞானிகளைப்போல் நடங்கள். *** 16. காலத்தை மீட்டுக்கொள்ளுங்கள் என்பதின் கருத்தாவது: இக்காலங்கள் கெட்டவைகளாயிருக்கிறபடியினாலே எச்சரிக்கையோடும், விமரிசையோடும், விழிப் போடுமிருந்து எவ்விதத்திலும் காலத்தைப் புண்ணிய வளர்ச்சிக்குப் பிரயோசன மாக்கிக்கொள்ளுங்கள். அவனவன் இதுவரையில் ஜீவித்த ஜீவியத்தை இப்போது யோசித்துப்பார்த்தால், அதில் அநேககாலம் வீணாய்க் கெட்டுப்போயிற்றென்று காண்பான். அவன் இவ்விதமாய் நஷ்டமாக்கின காலத்துக்குப் பரிகாரஞ்செய்து அந்தக் காலத்தை மீட்கும்படி சுறுசுறுப்போடு புண்ணிய சம்பத்துக்களை அதிகமாய்த் தேடிக்கொள்ளவேண்டுமென்பது கருத்து.

Ephesians 5:15-16

நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், ஆண்டவருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
ஆண்டவரிடத்தில் சுதந்திரத்தின் சம்பாவனையைப் பெற்றுக்கொள்வீர்களென்று அறிந்து, கிறீஸ்துநாதருக்கு ஊழியஞ்செய்யுங்கள். *** 23,24. உரோமையர்களுக்குள் அடிமைகள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்குச் சுதந் திரமென்று ஒன்றுமில்லை. சர்வேசுரனுடைய ஊழியர்களாகிற கிறீஸ்தவர்கள் எவ்விதத் தாராயிருந்தாலும் ஆண்டவருடைய இராச்சியத்துக்குச் சுதந்திரக்காரராயிருக்கிறார்கள்.

Colossians 3:23-24

நீதியையும் இரக்கத்தையும் பின்செல்பவன் சீவியத்தையும், நீதி யையும், மகிமையையுங் கண்டெடுப் பான்.

Proverbs 21:21

மனிதனானவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமத்தைச் சேதப்படுத்துவானாகில் அவனுக்குப் பிரயோஜனமென்ன?

Mark 8:36



ஏனெனில், ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணும்படி ஆசிக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடமான பேச்சுகளுக்குத் தன் உதடுகளையும் அடக்கி, (சங். 33:13, 14.)
தின்மைக்கு விலகி, நன்மையைச் செய்து, சமாதானத்தை நாடி அதைப் பின்பற்றுவானாக. (இசை. 1:16.)

1 Peter 3:10-11

நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ அவ்வாறே மனிதர்களுடைய இதயங் கள் விவேகிகளுக்கு வெளியரங்க மாயிருக்கின்றன.

Proverbs 27:19

நான் (என் பாவங்களை) வெளிப்படுத்தாமல் மவுனமாயிருந்த நாளெல்லாங் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்துபோயிற்று.

Psalms 31:3

நான் வீணருடைய ஆசனத்தில் உட்கார்ந்தவனுமல்ல; தோஷம் செய்பவரிடத்தில் சேர்வதுமில்லை.

Psalms 25:4

உன் இருதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்! ஏனெனில், சீவியமே அதி னின்று புறப்படுகின்றது.

Proverbs 4:23

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

நான் மிகவுந் தரித்திரனாய் உடல் கூனிப்போய் நாள் முழுவதுந் துக்கத்தால் முகம் வாடித் திரிகிறேன்.

Psalms 37:7

சேசுநாதர் அவர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஜீவியத்தின் அப்பம் நானே: என்னிடத்தில் வருகிற வன் பசியடையான்; என்னை விசுவசிக் கிறவனும் ஒருக்காலும் தாகமடையான். (சர்வப். 24:29; அரு. 4:14; 6:41, 48, 51.)

John 6:35

தன் வாயைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால் பேச்சில் கவனமில்லாதிருக் கிறவன் தீமையைச் சகிப்பான்.

Proverbs 13:3

இதுதான் அவரைத் தேடுகிற வர்களுடைய சந்ததியும் யாக்கோ பின் தேவனுடைய சந்ததியைத் தேடு கிறவர்களுடைய சந்ததியுமாம்.

Psalms 23:6

நீ பிழைத்துப் பெருகும்படிக் கும் நீ சுதந்தரிக்கப் போகிற தேசத் தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ அவரிடத் தில் அன்புகூரவும், அவருடைய வழி களில் நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் கட்டளை களையும், ரீதி ஆச்சாரங்களையும் கைக்கொண்டு அநுசரிக்கவும் கடவாய்.

Deuteronomy 30:16

சமஸ்தரோடும் சமாதானத்தையும் பரிசுத்ததனத்தையும் நாடுங்கள். பரிசுத் தமில்லாமல் சர்வேசுரனை ஒருவனும் தரிசிக்கமாட்டான். (உரோ. 12:18.)

Hebrews 12:14

நான் ஜீவிக்கிறேன்; ஆனாலும் நானல்ல; கிறீஸ்துநாதர்தான் என்னில் ஜீவிக்கிறார். ஏனெனில் நான் இப்போது சரீரத்தில் ஜீவிக்கிறதோ, இது என்னைச் சிநேகித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவசுதனைப் பற்றும் விசுவாசத்தினாலே ஜீவிக்கிறேன். *** 20. மனுஷ உயிர் என்னிடமிருந்தபோதிலும், சேசுக்கிறீஸ்துநாதர் தம்முடைய இஷ்டப்பிரசாதத்தினாலே என்னிடம் வசித்து, என் நினைவு பற்றுதலெல்லாம் ஆண்டு நடத்திவருவதால், அவரே என்னிடத்தில் ஜீவிக்கிறார் என்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறாரென்றறிக.

Galatians 2:20

ஏனெனில் தன் பிராணனைக் காப்பாற்ற மனதாயிருக்கிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் பிரா ணனை இழப்பவனோவென்றால் அதைக் கண்டடைவான். (லூக். 17:33; அரு. 12:25.)

Matthew 16:25

அறிவுடையோன் தன் ஆன்மா வைச் சிநேகிக்கிறான்; விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.

Proverbs 19:8

உங்களில் ஞானியும் கல்விமானும் யார்? அவன் ஞானத்துக்குரிய சாந்தகுணத்தோடு தன் கிரியைகளை நல்லொழுக்கத்தினாலே காண்பிக்கக் கடவான்.

James 3:13

புத்திமதியை அனுசரிப்பவன் சீவிய பாதையிலே நடக்கிறான்; கண்டனைகளைக் கைநெகிழ்பவனே அலைந்து திரிகிறான்.

Proverbs 10:17

வேதவாக்கியம் சொல்லுகிறபடியே என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுடைய வயிற்றினின்று ஜீவஜல நதிகள் பாய்ந்தோடும் என்றார். (உபாக. 18:15; இசை. 12:3; 44:3; அரு. 4:10, 14.) * 38. இஸ்பிரீத்துசாந்துவினிடமிருந்து வருகிற வரப்பிரசாதம் ஜீவிய ஜலம் எனப்படும். தேவ விசுவாசமுள்ளவன் தான் அடைந்திருக்கிற வரப்பிரசாத ஜலம் மற்றவர்களுடைய இருதயத்திலும் பாயும்படி முயற்சிசெய்வான்.

John 7:38


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |