ஏனெனில் நாம் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் நமக்குத் தெரியும்; அவை உங்களுக்கு வளமான பிற்காலத்தையும் நம்பிக்கைகையும் தரும்படி நாம் கொண்ட சமாதானத்தின் எண்ணங்களே தவிர, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.
என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகின்றாய்? இறைவன்மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.
ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.
ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர். ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.
அதுமட்டுமன்று, வேதனைகளிலும், பெருமை கொள்கிறோம். ஏனெனில், வேதனையால் பொறுமையும். பொறுமையால் மனத்திண்மையும் மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையும் என்று அறிந்திருக்கிறோம்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.
ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.
ஏனெனில், இத்திட்டத்தின் மாட்சிமை புறவினத்தாரிடையே எவ்வளவு வளமிக்கதாய் உள்ளது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க இறைவன் திருவுளங் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் இருத்தலே அத்திட்டம் நாம் மாட்சிமை அடைவோம் என்பதற்கு அவரே, நம் நம்பிக்கை.