Topic : Hope

ஏனெனில் நாம் உங்கள் விஷய மாய் எண்ணும் எண்ணங்கள் நமக் குத் தெரியும்; அவைகள் உங்களுக் குப் பொறுமையையும், முடிவையுந் தரும்பொருட்டு நாம் கொண்ட சமாதான எண்ணங்களே தவிர துன்ப எண்ணங்களல்ல.

Jeremiah 29:11


ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்தவரோ எப்போதும் புது பலம் பூண்டவராய்ச் சிறகுகள்கொண்டு கழுகுகளைப்போல் பறந்தோடுவர், ஆயினுங் களைக்கமாட்டார்; நடந்து போவர்; பலங்குன்றவுமாட்டாராமே.

Isaiah 40:31

உன் வீரத்தில் சமாதானமும் உன் கோட்டைகளில் சம்பூரணமும் உண்டாவதாக.
என் சகோதரரையும் என்னைச் சேர்ந்தாரையும் பற்றி உனக்காகச் சமாதானம் பேசினேன்.

Psalms 121:7-8

நீங்கள் நம்பிக்கையிலும், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையிலும், பெருகும்படிக்கு நம்பிக்கையின் தெய் வம் விசுவசிப்பதினாலுண்டாகும் எவ் வித சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

விசுவாசமானது நாம் நம்பிக் காத்திருக்கவேண்டியவைகளின் அடிநிலையும், காணப்படாதவைகளின் நிச்சயிப்புமாயிருக்கின்றது.

Hebrews 11:1

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கிறது. ஆகிலும் இவை களில் தேவசிநேகமே சிரேஷ்டமானது.

1 Corinthians 13:13

வருந்திச் சுமை சுமந்திருக்கிற வர்களாகிய நீங்களெல்லோரும் என் அண்டையில் வாருங்கள், நான் உங்க ளைத் தேற்றுவேன்.

Matthew 11:28


நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் தத்தளியாமல் நிலைநிற்போமாக; (ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்)

Hebrews 10:23


ஆனால் நாம் காணாததை நம்பினால், அதற்கும் பொறுமையோடே காத்துக்கொண்டிருக்கிறோம்.

Romans 8:25

இதுமாத்திரமல்ல; துன்பங்களிலே முதலாய் மேன்மை பாராட்டுகிறோம். ஏனெனில் துன்பம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், (இயா. 1:3.)
பரீட்சை நம்பிக்கையையும் உண் டாக்குகிறதென்று அறிந்திருக்கிறோம்.

Romans 5:3-4

தாமதிக்கப்படுகிற நம்பிக்கை ஆன்மாவை வருத்துகிறது; சீவிய விருட்சமாம் நிறைவேறுகிற ஆசை .

Proverbs 13:12


நானோ என் பார்வைகளை ஆண்டவரை நோக்கி உயர்த்து வேன்; என் இரட்சகரான தேவனுக் குக் காத்திருப்பேன்; என் பிரானான வரும் எனக்குச் செவிகொடுப்பார்.

Micah 7:7

ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்பேரில் அமர்ந்தார்; ஆதலால் ஆண்டவர் என்னைத் தம் பரிசுத்த ஸ்தலத்தால் அபிஷேகஞ் செய்தார்; ஆண்டவர் என்னை அனுப் பினது: சாந்தந் தாழ்மை உடையோ ருக்குப் போதிக்கவும், இருதயம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டவர்களுக்குக் கிருபை யையும், அடைபட்டோருக்கு மீட்பையும் பிரசித்தஞ் செய்யவும் (லூக்.4:18),

Isaiah 61:1

ஆண்டவர் தமது தாசர்களு டைய ஆத்துமங்களை இரட்சிப்பார்; அவர் பேரில் நம்பிக்கை வைத்திருக் கிறவர்கள் குற்றவாளிகளாகமாட் டார்கள்.

Psalms 33:22

ஹேத்: எனது ஆத்மா: கர்த்தர் என் பங்கு என்றது; ஆதலால் அவரை நம்பியிருக்கிறேன்.

Lamentations 3:24

நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவர் தம்முடைய இரக்கப் பெருக்கத்தின் படியே மரித்தோரிலிருந்து உயிர்த்த சேசுக் கிறீஸ்துநாதருடைய உத்தானத்தின் வழியாய் ஜீவனுள்ள நம்பிக்கைக்கும், (2 கொரி. 1:3; எபே. 1:3.)

1 Peter 1:3

ஆண்டவராகிய கிறீஸ்துநாதரை உங்கள் இருதயங்களில் அர்ச்சியுங்கள். உங்களிலுள்ள நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் தகுந்த பதில் சொல்லும்படி எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.

1 Peter 3:15

பொல்லாதவர்களுடைய கூட்டத்தை நான் பகைத்தேன்; அவ பத்தியுள்ளவர்களோடு நான் உட்கார மாட்டேன்.

Psalms 25:5

நம்பிக்கையோவென்றால் நம்மை வெட்கிப்போகப்பண்ணாது. ஏனெனில் நமக்கு அளிக்கப்பட்ட இஸ்பிரீத்து சாந்துவினாலே தேவசிநேகம் நம் முடைய இருதயங்களில் எப்பக்கத் திலும் பொழியப்பட்டிருக்கிறது.

Romans 5:5

உங்களுக்கு உண்டான அழைப்பினால் ஒரே நம்பிக்கைக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறதுபோல, உங்களுக்கு ஒரே சரீரமும், ஒரே ஆத்துமமும் உண்டு.

Ephesians 4:4

இந்தப் பரம இரகசியத்தின் மகிமைத் திரவியங்கள் அஞ்ஞானிகள் மட்டில் எம்மாத்திரம் விளங்குகிறதென்று சர்வேசுரன் தமது அர்ச்சிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கச் சித்தமானார். உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையாகிய கிறீஸ்துநாதரே இந்தப் பரம இரகசியம்.

Colossians 1:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |