Topic : Healing

இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.

Mark 9:23

உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

Psalms 147:3

இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

Mark 10:52

இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தகப்பனிடம், "அஞ்சாதே, விசுவசி, அதுபோதும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

Luke 8:50

அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.

James 5:16

உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர்.
விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார்.

James 5:14-15

மகிழ்கிற மனம் உடலை மலரச்செய்கின்றது. துயரமான மனம் எலும்புகளையுமே வற்றச் செய்கிறது.

Proverbs 17:22

நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயுற்றோரைச் சுகமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்; இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

Matthew 10:8

நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.

2 Chronicles 7:14

ஆனால் நமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கும் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்; தன் இறக்கைகளில் நலத்தைத் தாங்கி வருவான். நீங்களும் தொழுவத்திலிருந்து துள்ளியோடும் கன்றைப்போலத் துள்ளியோடுவீர்கள்.

Malachi 4:2

நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.

1 Peter 2:24

ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.

Isaiah 53:5

நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாசை நோக்கி, உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: உன் மன்றாட்டைக் கேட்டோம்; கண்ணீரையும் கண்டோம். இதோ உன்னைக் குணப்படுத்தினோம். மூன்று நாட்களில் நீ ஆண்டவரின் ஆலயத்துக்குப் போவாய்.

2 Kings 20:5

ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.
பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.

Luke 13:10-17

அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.

Luke 10:9

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, அவருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, அவருடைய சட்டங்கள் யாவையும் கைக்கொண்டு நடப்பீர்களாயின், எகிப்தியருக்கு நாம் வருவித்த வாதைகளில் ஒன்றையும் உங்கள்மேல் வரவிட மாட்டோம். ஏனென்றால், நாம் உங்களைக் குணப்படுத்தும் ஆண்டவர் என்றார்.

Exodus 15:26

'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

Luke 4:18

இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

Matthew 9:12


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |