Topic : Evil

தீமை உன்னை வெல்ல விடாதே, நன்மையால் தீமையை வெல்க.

Romans 12:21

ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் உன்னைக் காப்பார்: அவரே உன் ஆன்மாவையும் காப்பவர்.
ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார், வரும் போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்.

Psalms 121:7-8

அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள்.

Ephesians 6:11

சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள்.

Romans 16:17

ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம்.

Ephesians 6:12

தெய்வ பயம் தீமையைப் பகைக்கின்றது. நானும் அகந்தையையும் வீம்பையும் தீயவழியையும், இரு பொருள்பட மொழியும் நாவையும் வெறுக்கிறேன்.

Proverbs 8:13

மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.
ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,
களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.
இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.

Mark 7:20-23

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக. தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக் கொண்டிருங்கள்.

Romans 12:9

சினம்கொண்டாலும் பாவத்திற்காளாகாதீர்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடன் இனித் திருடாமலிருக்கட்டும்.

Ephesians 4:26-27

நீங்கள் என்னைக் கெடுக்கச் சதியாலோசனை செய்தீர்களே; ஆனால், கடவுள் தீமையை நன்மையாக மாற்றி, பல இனத்தாரைக் காப்பாற்றத் தக்கதாக, நீங்கள் இந்நேரம் தெளிவாய்க் கண்டறிந்தபடி என்னை உயர்த்தினார்.

Genesis 50:20

அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக்கொள்ளுங்கள்.
தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.

1 Thessalonians 5:21-22

உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.

1 Thessalonians 5:15

உனக்கு நீயே ஞானியாய் இராதே. கடவுளுக்குப் பயந்து தீமையினின்று விலகு.
அப்பொழுது நீ உடல் நலனுடன் இருப்பாய். உன் எலும்புகளும் நன்னீரால் நிறைக்கப்படும்.

Proverbs 3:7-8

தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.

Psalms 97:10

பகை சச்சரவுகளை எழுப்புகின்றது. நட்போ எல்லாப் பிழைகளையும் மூடுகின்றது.

Proverbs 10:12

உலகிலிருந்து அவர்களை எடுத்துவிடும்படி நான் மன்றாடவில்லை, தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்.

John 17:15

உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள். நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்; தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்;

Isaiah 1:16

அவ்வொளி இருளில் ஒளிர்ந்தது; இருளோ அதை மேற்கொள்ளவில்லை.

John 1:5

சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்; ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!
கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா; உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."

Zechariah 7:9-10

தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.

Psalms 34:14

மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.

1 John 1:9

உமது வாக்கின்படி என் நடத்தையை நெறிப்படுத்தும்: தீமையானது எதுவும் என்னை மேற்கொள்ளாது.

Psalms 119:133

ஆகவே, பெருக்கெடுக்கும் தீமையையும் மாசு அனைத்தையும் அகற்றி, உங்கள் உள்ளத்திலே ஊன்றப்பெற்ற வார்த்தையை அமைந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; இவ்வார்த்தையே உங்கள் ஆன்மாவை மீட்க வல்லது.

James 1:21

ஆண்டவர் எனக்கு உண்டாகும் எல்லாத் தீங்குகளினின்றும் என்னை விடுவித்து மீட்பளித்துத் தம்முடைய வானக அரசினுள் என்னைச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.

2 Timothy 4:18

எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.

Matthew 6:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |