Topic : Evil

தின்மையானது உன்னை ஜெயிக்க விடாதே. ஆனால் நீயே தின்மையை நன்மையால் ஜெயிப்பாயாக.

Romans 12:21

உன் வீரத்தில் சமாதானமும் உன் கோட்டைகளில் சம்பூரணமும் உண்டாவதாக.
என் சகோதரரையும் என்னைச் சேர்ந்தாரையும் பற்றி உனக்காகச் சமாதானம் பேசினேன்.

Psalms 121:7-8

நீங்கள் பசாசின் தந்திர சற்பனைகளுக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாய் இருக்கும்படிக்குச் சர்வேசுரனுடைய போராயுதங்களை அணிந்துகொள்ளுங்கள். ( உரோ. 13:12.)

Ephesians 6:11

அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்துக்கு ஒவ் வாத பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள்மேல் கண்ணாயிருந்து, நீங்கள் அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன். (2 தெச. 3:14; 2 அரு. 10.)

Romans 16:17

ஏனெனில் நமக்குள்ள போராட்டம் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல; துரைத்தனங்களோடும் வல்லமைகளோடும் இந்த அந்தகார உலகாதி பதிகளோடும், ஆகாசமண்டலங்களி லுள்ள அக்கிரம அரூபிகளோடும் நாம் போராடவேண்டியிருக்கிறது. *** 12. ஆகாச மண்டலம் என்பது வானமண்டலங்களின் கீழ்ப்பாகங்களாம். இவைகளில் சர்வேசுரன் தமது திருவுளத்தின்படிக்கு கெட்ட அரூபிகளை உலாவும்படி சிலவிசைகளில் உத்தரவு தருகிறார். நமது ஞான யுத்தம் மனிதரோடு அல்ல, கெட்ட அரூபிகளோடுதான்.

Ephesians 6:12

தேவ பயந் தீமையைப் பகைக் கின்றது; நானும் அகந்தையையும், ஆங்காரத்தையும், தீய வழியையும். இரட்டிக்கிற மொழியையும் நாவை யும் அரோசிக்கின்றேன்.

Proverbs 8:13

மனிதனுடைய இருதயத்திலி ருந்து புறப்படுகிறவைகளே மனிதனை அசுத்தப்படுத்துகின்றன.
ஏனெனில் மனிதனுடைய இரு தயத்துக்குள்ளிருந்து துர்ச்சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், லோபித்தனங்க ளும், துஷ்டத்தனங்களும், கபடங்களும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தேவ தூஷணமும், ஆங்காரமும், மதிகேடும் புறப்படுகின்ற ன. (ஆதி. 6:5.)
இந்தத் தின்மைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனி தனை அசுத்தப்படுத்துகின்றன என்றார்.

Mark 7:20-23

உங்கள் சிகேம் பாசாங்கற்றிருப் பதாக; தின்மையை வெறுத்து, நன்மை யைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள். (யாத். 20:14; உபாக. 5.18.)

Romans 12:9

(கோபிப்பதில்) பாவம் வராமல் கோபியுங்கள். உங்கள் கோபத்தின்மேல் சூரியன் அஸ்தமிக்காதிருக்கக்கடவது. (சங். 4:5.)
பசாசுக்கு இடங்கொடாதிருங்கள். (இயா. 4:7.)

Ephesians 4:26-27

நீங்கள் என்னைக் கெடுக்கச் சதி யோசனை பண்ணினீர்களே; ஆனால் தேவன் தின்மையை நன்மையாக மாற்றி, அநேக பிரஜைகளை இரட்சிக் கத்தக்கதாக, நீங்கள் இந்நேரத்திலே ஸ்பஷ்டமாய்க் கண்டறிந்தபடி என்னை உணர்த்தினார் (ஆதி. 45:5).

Genesis 50:20

ஆனால் எல்லாவற்றையும் பரிசோதித்து, நலமானதைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள்.
தின்மையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

1 Thessalonians 5:21-22

ஒருவரும் எவனுக்காவது தின்மைக்குத் தின்மை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் மற்றெல்லாருக்குள்ளும் எப்போதும் நலமானதைச் செய்யும்படி நாடுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17.)

1 Thessalonians 5:15

உனக்குத்தானே ஞானியா யிராதே; தேவனுக்குப் பயந்து தின்மை யினின்று விலகு (உரோ.12:16).
அப்பொழுது உன் திரேகத் திற்கு சுகம் இருக்கும்; உன் எலும்பு களும் நன்னீரால் இறைக்கப்படும்.

Proverbs 3:7-8


பகை சச்சரவுகளை எழுப்பு கின்றது; சிநேகமோ சகல பிழை களையும் மூடுகின்றது (1 கொரி. 13:4; 1 இரா. 4:8).

Proverbs 10:12

தேவரீர் அவர்களை உலகத்தினின்று எடுத்துக்கொள்ளும்படிக்கு நான் வேண்டிக்கொள்ளாமல், தின்மையினின்று அவர்களைக் காப்பாற்றும்படி (வேண்டிக்கொள்ளுகிறேன்).

John 17:15

கரங்களைக் கழுவுங்கள், சுத்திசெய்யுங்கள்; எம் கண்கள் முன் னின்று உங்கள் கிரியைகளின் தீமையை அகற்றுங்கள், தீங்குச் செயலை ஒழியுங்கள் (1 இரா. 3:11)..

Isaiah 1:16

அந்த ஒளி இருளில் பிரகாசிக்கின்றது. ஆயினும் இருளானது அதை ஒப்புக்கொள்ளவில்லை. (அரு. 3:19.)

John 1:5

இதோ சேனைகளின் அதிபர் உரைத்தது: (ஆண்டவருக்குப் பிரியப்பட விருப்பமிருக்குமாயின்) மெய்யான சத்தியத்தைக் கோரி தீர்மா னங் கூறுங்கள்; ஒவ்வொருவனுந் தன் சகோதரன் மட்டில் இரக்கத்தையும், பிறர்சிநேகத்தையுங் காட்டுவானாக! (மிக். 6:8; மத். 23:23)
விதவைக்கென்கிலும், (அநாத) பிள்ளைக்கென்கிலும், அந்நியனுக் கென்கிலும், ஏழைக்கென்கிலுந் துன் புறுத்த (நினைவுறாதிருக்கக்கடவான்;) எவனுந் தன் இருதயத்தில் தன் சகோதர னுக்குத் தீங்கு கருதாதிருக்கக்கட வான் (யாத்.22:22; இசா.1:23; எரே. 5:28).

Zechariah 7:9-10

நான் (ஒவ்வொருவனை) என் உறவினனைப் போலவும், சகோதர னைப் போலவும் பாவித்து நடந்து (அவர்களுக்காகத்) துக்கித்துப் பிரலாபித்து இப்படியே கஸ்திப் பட்டுக்கொண்டிருந்தேன்.

Psalms 34:14

நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம்பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரி சுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக் கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

1 John 1:9


ஆகையால் எவ்வித அசுசியை யும், துர்க்குணப் பெருக்கத்தையும் அகற்றி விட்டு, உங்கள் உள்ளத்தில் ஒட்டப்பட்டதும் உங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கக்கூடியதுமான வாக்கியத்தைச் சிரவணத்தோடு கைக்கொள்ளுங்கள். (1 இரா. 2:1; கொலோ. 3:8.)

James 1:21

சகல தீவினைகளிலும் நின்று ஆண்டவர் என்னை இரட்சித்தார். அவரே தம்முடைய பரம இராச்சியத்தில் என்னை க்ஷேமமாய்ச் சேர்த்தருளுவார். அவருக்கே அநவரத காலங்களிலும் மகிமை உண்டாகக்கடவது. ஆமென்.

2 Timothy 4:18

எங்களைச் சோதனையிலே பிர | வேசிப்பியாதேயும், ஆனால் தின்மை யிலே நின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ஆமென். * 13. சோதனையிலே பிரவேசிப்பியாதேயும்:- அதாவது சோதனை வராமல் எங்களைக் காப்பாற்றியருளும். அப்படி வந்தாலும் அதற்குள் அகப்பட்டுப் பாவத்தில் விழாதபடி எங்களைத் தற்காத்தருளும் என்று அர்த்தமாம்.

Matthew 6:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |