Topic : Compassion

ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.

Ephesians 4:32

ஹேத்: ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் அழிவுறாது, அவருடைய பரிவுக்கு முடிவு இல்லை.
காலைதோறும் அவை புதுப்பிக்கப் படுகின்றன, நீர் மிக்கப் பிரமாணிக்கமுள்ளவர்;

Lamentations 3:22-23

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள்.
அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.

2 Corinthians 1:3-4

இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.

1 Peter 3:8

மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.

Romans 12:15

பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!
இதோ, நம்கைகளில் உன்னைப் பொறித்துள்ளோம், உன் பட்டணத்து மதில்கள் நம் கண் முன் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

Isaiah 49:15-16

ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.

Colossians 3:12

சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்; ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!
கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா; உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."

Zechariah 7:9-10

தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.

Psalms 103:13

நம்முடைய குறைபாடுகளைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர், நம் தலைமைக் குரு. மாறாக, அவர் நம்மைப்போல் ஒருவராயிருப்பதால், பாவம் தவிர, மற்றெல்லாவற்றிலும் சோதனை, துன்பங்களுக்கு உட்பட்டவரானார்.

Hebrews 4:15

ஆதலால் உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்; அவ்வாறு உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதால் அவர் மகிமைப்படுத்தப் பெறுவார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள், அவருக்குக் காத்திருப்பவர்கள் பேறு பெற்றோர்.

Isaiah 30:18

இவ்வுலக செல்வங்களை உடையவன் ஒருவன், தன் சகோதரன் வறுமையுற்றிருப்பதைக் கண்டு. மனமிரங்காவிடில், அவனுள் கடவுளன்பு நிலைத்திருக்கிறதென்று எவ்வாறு சொல் முடியும்?

1 John 3:17


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |