Topic : Calling

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்; நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.

John 15:16

கடவுளிடம் அன்புக்கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு ஆவியானவர் அவர்கள் நன்மைக்காக அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

Romans 8:28

உலகம் பொருட்படுத்துவதை ஒழித்து விட, உலகம் பொருட்படுத்தாததையும் தாழ்ந்ததெனக் கருதுவதையும், இகழ்ச்சிக்குரியதையும் கடவுள் தேர்ந்து கொண்டார்.
எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்.

1 Corinthians 1:28-29

உங்களை அழைக்கும் இறைவன் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பார்.

1 Thessalonians 5:24

கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.

Philippians 3:14

இதற்காகவே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக, இறைவன் உங்களை அழைத்தார்.

2 Thessalonians 2:14

கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;

2 Timothy 1:9

இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.

1 Peter 2:21

ஒரே நம்பிக்கையில் பங்கு பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே நம்பிக்கை இருப்பதுபோல், ஒரே உடலும் ஒரே ஆவியும் உண்டு.

Ephesians 4:4

அப்படி நடவாமல், உங்களை அழைத்த இறைவன் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையில் முற்றும் பரிசுத்தராய் இருங்கள்.
ஏனெனில், ' யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ' என எழுதப் பட்டிருக்கிறது.

1 Peter 1:15-16

தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; பழிக்குப்பழி கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள்; ஏனெனில், இறைவனின் ஆசிக்கு உரிமையாளர் ஆவதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

1 Peter 3:9

கடவுள் நம்பிக்கைக்குரியவர். 'தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவோடு நீங்கள் நட்புறவு கொள்ள அவரே உங்களை அழைத்திருக்கிறார்.

1 Corinthians 1:9

அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

Acts 2:38

முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம்.

Isaiah 65:1


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |