Topic : Calling

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினால் பிதாவை ஏதேது கேட்டாலும், அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக, நீங்கள் போய், பலனைத் தரும்படிக்கும், உங்கள் பலன் நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன். (மத். 28:19.)

John 15:16

அன்றியும் சர்வேசுரனைச் சிநேகிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக் கேதுவாக உதவுகிறதென்று அறிந் திருக்கிறோம். (அவர்கள் தேவ) தீர்மா னத்தின்படி அர்ச்சியசிஷ்டவர்களாக அழைக்கப்பட்டவர்களாமே.

Romans 8:28

உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார்.
ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.

1 Corinthians 1:28-29

உங்களை அழைத்தவர் பிரமாணிக்கமுள்ளவர். அவர் அப்படியே செய்வார். (1 கொரி. 1:9.)

1 Thessalonians 5:24

கிறீஸ்து சேசுநாதரில் சர்வேசுரன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

Philippians 3:14

ஆகையால் சகோதரரே, எங்கள் பிரசங்கத்தினாலாவது, நிருபத்தினாலாவது நீங்கள் கற்றுக்கொண்ட போதக முறைகளைக் கடைபிடித்து நிற்பீர்களாக. (1 தெச. 2:13; 4:7.) * 14. வாக்கினாலாவது, எழுத்தினாலாவது தங்களுக்குப் போதிக்கப்பட்ட பாரம் பரியங்களை வித்தியாசமொன்றின்றி ஒரே தன்மையாய்க் காப்பாற்றி அவைகளில் நிலைத்திருக்கவேண்டுமென்று அர்ச். சின்னப்பர் தெசலோனிக்கேயருக்குக் கற்பிக்கிறார். ஆகையால் வேதப்பிரமாணத்தில் எழுதப்பட்ட வேதசத்தியங்களை மாத்திரம் கைக் கொண்டு, வாக்கினால் போதிக்கப்பட்டவைகளை ஏற்றுக்கொள்ளவொண்ணாதென்று சொல்லுகிறவர்கள் அர்ச். சின்னப்பருடைய போதகத்துக்கு விரோதமாய்ப் போதிக் கிறார்களென்றறிக. போதக முறைகள்: - அப்போஸ்தலர் எழுதின நிருபங்களைப்போலவே அவர்கள் எழுதாமல் வாய்மொழியாய்ப் போதித்தும், அவர்கள் எழுதித்தந்து காணாமற்போன நிருபங்களில் அடங்கியதும், கிரியைகளால் செய்து காட்டிய பாரம்பரை முறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இங்கே கற்பிக்கப்படுகிறது.

2 Thessalonians 2:14

அவர் நம்முடைய கிரியைகளைப் பாராமல், தம்முடைய சித்தத்தையும், கிறீஸ்து சேசுவுக்குள் உலகாதிகாலத்துக்குமுன் நமக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்தையும் பார்த்து, நம்மை மீட்டிரட்சித்து, தம்முடைய பரிசுத்த அழைப்பால் நம்மை அழைத்திருக்கிறார். (தீத்து. 3:5.)

2 Timothy 1:9

இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறீஸ்து நாதரும் நமக்காகப் பாடுபட்டு, தம் முடைய அடித்தடங்களை நீங்கள் பின்பற்றும்படியாக உங்களுக்கு மாதிரி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

1 Peter 2:21

உங்களுக்கு உண்டான அழைப்பினால் ஒரே நம்பிக்கைக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறதுபோல, உங்களுக்கு ஒரே சரீரமும், ஒரே ஆத்துமமும் உண்டு.

Ephesians 4:4

உங்களை அழைத்த பரிசுத்தரைப்போல், நீங்களும் உங்கள் சர்வ நடபடிக்கைகளிலும் பரிசுத்தராயிருங்கள்.
ஏனெனில், நாம் பரிசுத்தராயிருக்கிறபடியால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கின்றது. (லேவி. 11:44; 19:2; 20:7.)

1 Peter 1:15-16

நீங்கள் தின்மைக்குத் தின்மை செய்யாமலும், சாபத்துக்குச் சாபமிடா மலும் இருப்பதுந்தவிர, அதற்குப் பதி லாக நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்த ரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்ட வர்களாகையால், ஆசீர்வதியுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17; 1 தெச. 5:15.)

1 Peter 3:9

சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ள வர். அவர் மூலமாகவே தம்முடைய குமா ரனும், நம்முடைய கர்த்தருமாகிய சேசுக் கிறீஸ்துவின் ஐக்கியத்துக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். (1 தெச. 5:24.)

1 Corinthians 1:9

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

முன் நம்மை யார் என விசாரி யாதவர்கள் நம்மைத் தேடினார்கள்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டடைந்தனர்; நாம் நமது நாமத் தைக் கொண்டாடாத சனத்தை நோக்கி: இதோ நாம் (இருக்கின் றோம்,) இதோ நாம் காத்திருக்கின் றோம் என்றோம் (உரோ. 10:20).

Isaiah 65:1


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |