Topic : Rebirth

சேசுநாதர் அவனுக்கு மறுமொழி யாக: ஒருவன் மறுபடியும் பிறவாதிருந் தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காணமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

John 3:3

ஆகையால் ஒருவன் கிறீஸ்துநாதரிடத்தில் இருந்தால் அவன் புதுச் சிருஷ் டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின. இதோ, எல்லாம் புதிதாக் கப்பட்டன. (இசை. 43:19; காட்சி. 21:5.) *** 17. நாம் மரித்தவர்களாயிருக்கையிலே தமக்காக நாம் ஜீவிக்கும்படிக்கு சேசுநாதர் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தபடியால், அவரிடத்தில் நாம் புது ஜீவியத்தை அடைந்திருக்கிறோமாகில், பழைய மனிதனுக்குரியவைகளெல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் புது ஜீவியத்துக்கு யோக்கியமான விதமாய் எல்லாக் காரியங்களிலும் நடக்கக்கடவோம். ஆகையால் இதுமுதல் ஒருவனையும் உறவின் முறையானோ அன்னியனோ, மேன்குலத்தானோ கீழ்குலத்தானோ, ஆஸ்திக்காரனோ தரித்திரனோ என்று மாம்ச சம்பந்தப்படி அவனை அறியாமலுஞ் சிநேகியாமலும், கிறீஸ்துநாதரைப்பற்றி மாத்திரம் அவனை அறியவுஞ் சிநேகிக்கவுங்கடவோம். கிறீஸ்துநாதரைமுதலாய் மாம்சத்துக்குரிய தன்மையாய் அறியாமலுஞ் சிநேகியாமலும், அவரை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நித்திய ஜீவியத்தை நமக்குப் பெறுவிக்கிறவராகவும் அவரை அறிந்து சிநேகித்துச் சேவிக்கக்கடவோம்.

2 Corinthians 5:17

சர்வேசுரனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கின்றது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாமே.

1 John 5:4

நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவர் தம்முடைய இரக்கப் பெருக்கத்தின் படியே மரித்தோரிலிருந்து உயிர்த்த சேசுக் கிறீஸ்துநாதருடைய உத்தானத்தின் வழியாய் ஜீவனுள்ள நம்பிக்கைக்கும், (2 கொரி. 1:3; எபே. 1:3.)

1 Peter 1:3

ஏனெனில் அழிவுள்ள வித்தினாலேயல்ல; ஜீவியரும் என்றென்றைக்கும் நிலைநிற்பவருமாகிய கடவுளுடைய வார்த்தையான அழியா வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப் பட்டிருக்கிறீர்கள். *** 22-23. நாம் ஒருவரையொருவர் அன்போடு சிநேகிப்பதற்கு நாம் அடைந்திருக்கிற மறுபிறப்பே ஆதாரமான முகாந்தரமாகும். நமது வெளி நிலைமையும் அந்தஸ்தும் எப்படியிருந்தாலும், ஞானஸ்நானத்தின் வழியாய் நாம் அடைந்த மறுபிறப்பினாலே நாம் எல்லாரும் சர்வேசுரனுடைய பிள்ளைகளாகவும், ஒருவருக்கொருவர் சமானஸ்தராகவும், சகோதரராகவும் இருக்கிறோம். அழிவுக்குரிய வித்தினால் அல்ல, அழியா வித்தாகிய நித்திய கடவுளுடைய வாக்கியத்தை விசுவசித்து, ஞானஸ்நானத்தால் அந்தக் கடவுளுக்கு நாம் பிள்ளைகளாகிறதினால், ஒருவரையொருவர் குறையற்ற சிநேகத்தோடு நேசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

1 Peter 1:23

உங்களுக்குள் அந்த நற்கிரியையைத் துவக்கினவர் சேசுக்கிறீஸ்துவின் நாள்வரையில் அதை முற்றுமுடிய நடத்துவாரென்று நம்புகிறேன். *** 6. சேசுக்கிறீஸ்துவின் நாள் என்பது தீர்வைநாள்.

Philippians 1:6

சேசுநாதர் பிரத்தியுத்தாரமாக: ஒருவன் ஜலத்தினாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும் மறுபிறப்பு அடையாதிருந்தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். * 4-5. மனுஷரெல்லோரும் ஜென்மதோஷத்தோடு உற்பவிக்கிறதினாலே பிறக்கிறபோது சரீர உயிரடைந்திருந்தாலும், ஆத்தும உயிராகிய இஷ்டப்பிரசாதமில்லாமல் பிறக்கிறார்கள். ஆகையால் ஜென்ம தோஷத்தைக் கழுவுகிற ஞானஸ்நானத்தை அவசியமாய்ப் பெற்றுத் தேவ இஷ்டப்பிரசாதமாகிற ஞான உயிரையும், ஞானப்பிறப்பையும் அடையவேண்டியது. கர்த்தர் இவ்விடத்தில் குறிக்கிற மறுபிறப்பும், ஞானப்பிறப்பும் இதுவேயன்றி, சரீரப் பிறப்புமல்ல, மறு ஜெனனமுமல்ல என்றறியவும்.

John 3:5

எனக்கு மிகவும் பிரியமானவர்களே, நாம் ஒருவரொருவரைச் சிநேகிப்போமாக. ஏனெனில் சிநேகம் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறது. ஆகையால் சிநேகமுள்ளவனெவனும் சர்வேசுரனால் பிறந்து, சர்வேசுரனை அறிந்திருக்கிறான்.

1 John 4:7

மாம்சத்தினால் பிறந்தது மாம்சமாம்; இஸ்பிரீத்துவினால் பிறந்தது இஸ்பிரீத்துவாமே.

John 3:6

இப்போதே பிறந்த பிள்ளைகளைப் போல், கலப்பில்லாத ஞானப்பாலை உண்டு இரட்சணியத்துக்காக வளரும்படி அதன் மேல் விருப்பமாயிருங்கள். *** 2. ஞானப்பால் என்பது ஞான உபதேசமென்று அர்த்தமாம். பிறந்த குழந்தை வளர்ந்து பலப்படுவதற்குப் பால் ஆதாரமாவதுபோல, ஞானஸ்நானத்தினால் மறுபிறப்படைந்தவர்கள் இரட்சணியத்துக்காக வளர்ந்து பலப்படுவதற்கு ஞான உபதேசமாகிய ஞானப்பாலை ஆவலோடு தேடிச் சாப்பிடவேண்டியது.

1 Peter 2:2


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |