3. இவர் அவருடைய மகிமையின் பிரதாபமும் அவருடைய தற்பொருளின் சொரூபமாய் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லப வார்த்தையால் தாங்கி, நம்மைப் பாவங்களினின்று சுத்திகரித்து, உன்னத ஸ்தலங்களில் அவருடைய மகத்துவ வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். (ஞானா. 7:26; மாற். 16:19.) * 3. மகிமையின் பிரதாபம்: - முகக்கண்ணாடியில் ஒருவனுடைய சாயல் முழுவதும் பிரதிபிம்பமாய்த் தோன்றுவதுபோல, பிதாவாகிய சர்வேசுரனுடைய சாயல் முழுவதும் சுதனிடத்தில் தோன்றுகிறது. அவருடைய தற்பொருளின் சொரூபம்: - சுதனாகிய சர்வேசுரன் தேவ பிதாவின் சுயசாயலும், அவருடைய தற்பொருளின் சொரூபமுமாயிருக்கிறார். முத்திரைக்கோலிலுள்ள சகல விஷயங்களும் முத்திரையில் பதிவதுபோல, பிதாவினிடத்திலுள்ள சுபாவமும் இலட்சணங்களும் சுதனிடத்தில் பதிந்திருக்கின்றன.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save