Topic : Prayer

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். (சர்வப். 18:22; கொலோ. 4:2.)
சகலத்திலும் நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். ஏனெனில் சேசுக்கிறீஸ்துநாதருக்குள்ளே உங்க ளெல்லாரையும்பற்றிய தேவசித்தம் இதுவே.

1 Thessalonians 5:16-18

எதன்பேரிலும் கவலைப்படாதிருங்கள். ஆனால் எல்லா ஜெபத்திலும், வேண்டுதலிலும், நன்றியறிந்த ஸ்தோத் திரத்தோடுகூடிய உங்கள் மன்றாட்டுகள் தேவசமுகத்தில் தெரியவரக்கடவது.
அப்படியே எல்லா அறிவை யுங் கடந்த சர்வேசுரனுடைய சமா தானமானது உங்கள் இருதயங்களை யும் உங்கள் சிந்தைகளையும் சேசுக் கிறீஸ்துவுக்குள் காப்பாற்றுவதாக.

Philippians 4:6-7

நாம் அவருடைய சித்தத்தின்படி எதெதைக் கேட்டாலும், நமக்கு அவர் செவிகொடுக்கிறாரென்பதே நமக்கு அவர்மேலுள்ள நம்பிக்கையாகும்.

1 John 5:14

ஜெபத்தில் நிலைத்திருங்கள். நன்றியறிந்த ஸ்தோத்திரத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள். (லூக்.18:1; 1 தெச. 5:17.)

Colossians 4:2

ஆதலால் நீங்கள் ஜெபம் பண் ணும் போது கேட்கிறதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்களென்று விசுவசி யுங்கள். அவைகள் உங்களுக்குச் சம்ப விக்குமென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். (மத். 7:7; 21:22; அரு. 14:13.)

Mark 11:24

நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.

Jeremiah 29:12

நம்பிக்கையில் அகமகிழுங்கள்; துன்பத்தில் பொறுமையாயிருங்கள்; ஜெபத்தில் நிலைத்திருங்கள்.

Romans 12:12

அல்லாமலும் நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வளர்த்துச் சொல்லாதேயுங்கள். ஏனென் றால் தங்களுடைய சொல் மிகுதியினால் தங்கள் மன்றாட்டுக் கேட்டருளப்படு மென்று நினைக்கிறார்கள்.

Matthew 6:7


நம்மை நோக்கி அபயமிடு; நாம் உனக்குக் காதுகொடுப்போம்; நீ அறியாத பெரியனவும் நிச்சயமு மான சில விஷயங்களை உனக்கு அறிவிப்போம்.

Jeremiah 33:3

ஏனெனில் என் நாமத்தினாலே எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நானிருக்கிறேனென்று திருவு ளம்பற்றினார்.

Matthew 18:20

ஆதலால் நாம் இரக்கம் பெறும் படிக்கும், அவசிய சமயத்துக்குக் கிருபையைக் கண்டடையும்படிக்கும் அவரு டைய கிருபைச் சிம்மாசனத்தை நம் பிக்கையோடு அண்டிப் போவோமாக.

Hebrews 4:16

நீயோவென்றால் ஜெபம் செய் யும்போது உன் அறைக்குள் பிரவேசித் துக் கதவைச் சாத்தி அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக்கொள். அப்போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக்குப் பலன் அளிப்பார். * 6. அந்தரங்கத்தில்:- நாம் செய்கிற நற்கிரியைகளில் சிலவற்றை மனிதர் கண் முன்பாகத்தான் செய்யும்படியாய் வரும். ஆனால் அவைகளை மனிதர் புகழ்ச்சிக்காகச் செய்யாமல் சர்வேசுரனுக்குப் பிரியப்படவேணுமென்கிற கருத்தோடே செய்யவேண்டியது.

Matthew 6:6

அது வானத்தின் முனையி லிருந்து புறப்பட்டு மறு முனை வரைக்கும் சென்று ஓடுகிறது; அதின் வெப்பத்திற்கு ஒருவனும் மறைகிற தில்லை (லூக். 24:46).

Psalms 18:6

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று அறிந்திருக்கிறோம்; அவரிடத்தில் நாம் கேட்கிற மன்றாட்டுகளை அடைகிறோ மென்றும் அறிந்திருக்கிறோம்.

1 John 5:15

நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவரொருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமானுடைய அயராத வேண்டுதல் மிகுந்த வல்லமையுள்ளது. * 16. பின்னும் நீங்கள் இரட்சணியமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணுங்களென்று கற்பிக்கிறார். இங்கே ஒருவருக்கொருவர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமேதெனில், பாவப்பொறுத்தல் கொடுக்க அதிகாரம் பெற்ற குருமார்கள் ஒருவருக்கொருவர் என்றும் மற்றக் கிறீஸ்தஃவர்கள் அந்த அதிகாரம் பெற்றிருக்கிற தங்கள் குருமார்களிடத்திலென்றும் அர்த்தமல்லாது வேறல்ல. ஏனெனில், பாவப்பொறுத்தலைக் கொடுக்க அதிகாரமில்லாதவர்களிடத்தில் ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால் பிரயோஜனமென்ன?

James 5:16

ஆனால் அவன் சற்றுந் தத்தளியாமல், விசுவாசத்தோடு கேட்கக்கடவான்; ஏனெனில் தத்தளிக்கிறவன் காற் றினால் அடிபட்டு எப்பக்கத்திலும் கொண்டுபோகப்படுகிற கடல் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். (மாற். 11:24.)

James 1:6

எனக்குச் செவிகொடுக்கிற உங்க ளுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள்; (மத். 5:44.)
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்கள்மேல் அபாண் டம் சொல்லுகிறவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்;

Luke 6:27-28

நடுராத்திரியில் சின்னப்பரும், சீலாவும் ஜெபஞ்செய்து சர்வேசுரனை ஸ்துதித்தார்கள். சிறையிலிருந்தவர்களும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Acts 16:25

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினால் பிதாவை ஏதேது கேட்டாலும், அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக, நீங்கள் போய், பலனைத் தரும்படிக்கும், உங்கள் பலன் நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன். (மத். 28:19.)

John 15:16

இவர்கள் எல்லாரும் ஸ்திரீக ளோடும், சேசுநாதருடைய தாயா ராகிய மரியம்மாளோடும் அவரு டைய சகோதரரோடும் ஒரே மனமாய் ஜெபத்தில் நிலைத்திருந்தார்கள். (மாற். 6:3.) *** 14. இதில் சொல்லப்பட்ட ஸ்திரீகள் கலிலேயா நாட்டிலிருந்து வந்து, சேசுநாதருக்கும் அப்போஸ்தலருக்கும் ஊழியஞ்செய்து தங்கள் சொந்தச் செலவினால் அவர்களைப் பராமரித்துக்கொண்டுவந்த புண்ணியவதிகளாம். மத். 27-ம் அதி. 55-56-ம் வசனங்களிலும், மாற். 15-ம் அதி. 41-ம் வசனத்திலும் காண்க.

Acts 1:14

நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை ஏதேது கேட்பீர்களோ, சுதனிடத்தில் பிதா மகிமைப்படும்பொருட்டு, நான் அதைச் செய்தருளுவேன். (மத். 7:7; மாற். 11:24; அரு. 16:23.)

John 14:13

நீங்கள் இச்சித்தும், கைக்கொள் ளுகிறதில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமைப்பட்டும் பெற்றுக்கொள் ளக்கூடாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் வழக்காடியும் போர் செய்தும், மன்றாடிக் கேளாததினாலே உங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. * 2. பற்பல காரியங்களுக்கு ஆசைப்படுகிறீர்கள். அவைகளை ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்க, நீங்கள் அதைவிட்டு, போராடி, வியாச்சியம் செய்து அடைந்துகொள்ளலாமென்று நினைக்கிறீர்கள். அதனாலே அதை அடைந்துகொள்ளாமல் போகிறீர்களென்று அர்த்தமாம்.

James 4:2

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் விவேகிகளாயிருந்து, ஜெபம்பண்ணுவதில் விழித்திருங்கள்.

1 Peter 4:7All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |