Topic : Prayer

எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
இடைவிடாது செபியுங்கள்.
என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

1 Thessalonians 5:16-18

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.

Philippians 4:6-7

நாம் இறைவனிடம் கேட்பது அவரது திருவுளத்திற்கேற்றதாய் இருந்தால், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இந்த நம்பிக்கையுடன் நாம் அவர் முன் நிற்க முடியும்.

1 John 5:14

செபத்தில் நிலைத்திருங்கள்,. அதில் விழிப்பாயிருங்கள், நன்றி கூற மறவாதீர்கள்.

Colossians 4:2

ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.

Mark 11:24

நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.

Jeremiah 29:12

நம்பிக்கை கொண்டவர்களாய் மகிழ்ச்சியோடு இருங்கள்; வேதனையில் மன ஊறுதியோடு இருங்கள்; செபத்தில் நிலையாய் இருங்கள்.

Romans 12:12

செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

Matthew 6:7

தம்மைக் கூவியழைக்கும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்: நேர்மையுடன் தம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

Psalms 145:18

நம்மை நோக்கிக் கூப்பிடு; நாம் உனக்குச் செவிசாய்ப்போம்; நீ அறியாத பெரியனவும் மறைந்தனவுமான சிலவற்றை உனக்கு அறிவிப்போம்.

Jeremiah 33:3

இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

Matthew 18:20

தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறை அருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக.

Hebrews 4:16

நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

Matthew 6:6

துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்; என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்; என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.

Psalms 18:6

நாம் கேட்கும்போதெல்லாம் அவர் செவிசாய்க்கிறார். என்ற உறுதி நமக்கிருந்தால், அவரிடம் கேட்டதனைத்தும் கிடைத்துவிட்டது என்ற உறுதியும் இருக்கும்.

1 John 5:15

அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.

James 5:16

ஆனால் விசுவாசத்தோடு கேட்கவேண்டும். தயக்கம் எதுவும் கூடாது. தயக்கம் காட்டுபவன் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலைக்கு ஒப்பாவான்.

James 1:6

"நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்.

Luke 6:27-28

நள்ளிரவு வந்தது. சின்னப்பரும் சீலாவும் கடவுளைப் புகழ்ந்து பாடிச் செபித்துக்கொண்டு இருந்தனர். மற்றக் கைதிகளோ கேட்டுக் கொண்டிருந்தனர்.

Acts 16:25

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்; நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.

John 15:16

இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

Acts 1:14

நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்; இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்.

John 14:13

பிறர் பொருள்மீது ஆசை வைக்கிறீர்கள்; அதைப் பெறாததால், கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; ஆசைப்படுவதை அடைய முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால் தான்.

James 4:2

அனைத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. எனவே, நீங்கள் செபத்தில் ஈடுபடுவதற்குச் சம நிலையோடும், மட்டுமிதத்தோடும் வாழுங்கள்.

1 Peter 4:7

வாய் திறந்து அவரையே நான் கூவியழைத்தேன், என் நாவோல அவரது புகழைச் சொன்னேன்.

Psalms 66:17


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |