அதற்கு சேசுநாதர் பிரத்தியுத் தாரமாக: என்னிமித்தமாகவும், சுவி சேஷத்தினிமித்தமாகவும், வீட்டையா வது, சகோதரர், சகோதரிகளையா வது, தந்தை தாயையாவது, பிள்ளை களையாவது, காணிகளையாவது விட்டு விட்ட எவனும்,
இப்பொழுது இம்மையிலே துன்பங்களோடு நூறத்தனையாய் வீடுகளையும், சகோதரரையும், சகோதரி களையும், தாய்மார்களையும், பிள்ளை களையும், நிலங்களையும் பெற்றுக் கொள்வதுமன்றி, மறுமையிலே நித்திய ஜீவியத்தையும் அடையாதிருப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
* 30. சேசுநாதரைப் பின்செல்லும்படி இவ்வுலக நன்மைகளை விட்டுவிடுகிறவர்கள் அவைகளுக்குப் பதிலாய் ஞான நன்மைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவைகளால் இவ்வுலகத்திலே முதலாய் உண்டாகும் மனச்சமாதானமும் ஞான சந்தோஷமும், தாங்கள் துறந்துவிட்ட இலெளகீக நன்மைகளிலும் நூறுமடங்கு மாத்திரமல்ல, இன் னும் அதிகமான பெரிய நன்மைகளாகவேயிருக்கின்றன. மேலும் சேசுநாதர்சுவாமி யைப்பற்றியும், மோட்ச இராச்சியத்தைப்பற்றியும், தங்கள் தாய் தகப்பன், சகோதரர், வீடுவாசல், காணி பூமிகளை விட்டுவிடுகிற சந்நியாசிகளுக்கு நூறு பங்கு அதிக பட்ச முள்ள சிரேஷ்டர்களும், மற்றுஞ் சந்நியாசிகளும், தாய் தந்தைகள் சகோதரரிடமா யிருப்பதுமல்லாமல், அவர்கள் போகுமிடமெல்லாம் அவர்களுக்கு வீடுவாசல் காணி பூமியாகிற மடங்களும் நிலங்களும் அனுபவிக்கக் கிடைக்குமென்று அர்த்தமாம்.
Mark 10:29-30