அதற்கு இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ,
நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,
இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mark 10:29-30