Topic : Baptism

ஏனெனில் நீங்களெல்லாரும் கிறீஸ்நாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
எப்படியெனில் கிறீஸ்துநாதரிடத் தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிற நீங்க ளெல்லோரும் கிறீஸ்துநாதரை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். (உரோ. 6:3.)

Galatians 3:26-27

ஆகையால் நீங்கள் போய், சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மாற். 16:15.)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ நான் உலகமுடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார். * 20. அப்போஸ்தலர்கள் மரிப்பார்களென்று சேசுநாதர் அறிந்திருந்தும், உலக முடியுமட்டும் அவர்களோடுகூடத் தாமிருக்கிறதாகச் சொல்லுகிறபடியால், அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப்பின், அவர்களுடைய ஸ்தானத்திலே இருக்கிறவர்களோடும் சேசுநாதர் சுவாமி வசிக்கிறாரென்று சொல்லவேண்டியது. அப்போஸ்தலர்களுடைய ஸ்தானங்களும் உலகமுடியுமட்டும் நிலைநிற்குமென்று நிச்சயமாயிருக்கிறது.

Matthew 28:19-20

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

Mark 16:16

அதற்கொத்த ஒப்பனையான ஞானஸ்நானமானது சரீர அழுக்கை நீக்குவதாயிராமல், சர்வேசுரன்மட்டில் நல்ல மனச்சாட்சி உண்டாவென்று அத்தாட்சியாயிருந்து,சேசுக் கிறீஸ்து நாதருடைய உத்தானத்தைக் கொண்டு நம்மை இரட்சிக்கிறது.

1 Peter 3:21

சேசுக்கிறீஸ்துநாதர் பேராலே நம்மில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எல்லாரும் அவருடைய மரணத்தினாலே ஞானஸ்நானம் பெற்றோம் என்று அறியாதிருக்கிறீர்களோ? *** 3. மரணத்தினால் என்பதற்கு மரணத்தின் சாயலாக என்று அர்த்தங்கொள்க. சேசுநாதர்சுவாமி மரித்துக் கல்லறைக்குள் வைக்கப்பட்டதுபோல, நாமும் தண்ணீருக்குள் ஞானஸ்நானத்தினாலே அமிழ்த்தப்படுகிறோம். ஆதி துவக்கத்தில் ஞானஸ்நானங் கொடுக்கும்போது தண்ணீரில் ஒரு முழுக்குப்போடும்படி செய்தார்கள்.

Romans 6:3

சேசுநாதர் பிரத்தியுத்தாரமாக: ஒருவன் ஜலத்தினாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும் மறுபிறப்பு அடையாதிருந்தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். * 4-5. மனுஷரெல்லோரும் ஜென்மதோஷத்தோடு உற்பவிக்கிறதினாலே பிறக்கிறபோது சரீர உயிரடைந்திருந்தாலும், ஆத்தும உயிராகிய இஷ்டப்பிரசாதமில்லாமல் பிறக்கிறார்கள். ஆகையால் ஜென்ம தோஷத்தைக் கழுவுகிற ஞானஸ்நானத்தை அவசியமாய்ப் பெற்றுத் தேவ இஷ்டப்பிரசாதமாகிற ஞான உயிரையும், ஞானப்பிறப்பையும் அடையவேண்டியது. கர்த்தர் இவ்விடத்தில் குறிக்கிற மறுபிறப்பும், ஞானப்பிறப்பும் இதுவேயன்றி, சரீரப் பிறப்புமல்ல, மறு ஜெனனமுமல்ல என்றறியவும்.

John 3:5

ஆகையால் இப்போது நீர் தாமதிப்பானேன்? எழுந்திருந்து, அவருடைய நாமத்தை மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று, உம்முடைய பாவங்களைக் கழுவும் என்றார்.

Acts 22:16

ஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெறுகிறபோது சம்பவித்த தேதெனில், சேசுநாதரும் ஞானஸ் நானம் பெற்று ஜெபஞ்செய்கையில், பரமண்டலம் திறக்கப்பட்டு, (மத். 3:13-17; மாற் 1:10; அரு. 1:32-34.)
இஸ்பிரீத்துசாந்துவானவர் தேக வடிவாய் புறாவைப்போல் அவர்மேல் இறங்க, பரலோகத்தினின்று ஓர் குர லொலியும் உண்டாகி: நீரே நமது நேச குமாரன்; உமது பேரில் பிரியமாயிருக்கி றோம் என்று சப்தித்தது. (மத். 3:17; 17:5: லூக். 9:35; 2 இரா. 1:17.)

Luke 3:21-22

அதெப்படியென்றால், நாம் யூத ரானாலும், புறஜாதியாரானாலும், அடிமைகளென்றாலும், சுயாதீனரானாலும் எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவி னாலே ஒரே சரீரமாயிருக்கும்படிக்கு ஞானஸ்நானம் பெற்று, எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம் பண்ணுகி றோம். (கலாத். 3:28; எபே. 2:13, 14.) *** 13. எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம்பண்ணுகிறோமென்பதற்கு அர்த்த மாவது: இஸ்பிரீத்துசாந்து ஆத்துமத்திலே பாய்ந்தோடுகிற ஜீவ ஜலமாயிருக்கிறாரென்று அப்போஸ்தலர் நடபடி 2-ம் அதிகாரம் 17, 18-ம் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இஸ்பிரீத்துசாந்துவில் பானம்பண்ணுகிறதென்கிறது இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் நிரப்பப்படுகிறதென்றறிக.

1 Corinthians 12:13

நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: நீ எவர்மேல் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவரவும், தங்கி நிற்கவும் காண்பாயோ, அவரே இஸ்பிரீத்துசாந்துவினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவரென்று, எனக்குத் திருவுளம்பற்றினார். * 33. சேசுநாதர் பிறந்து உலகத்தில் சஞ்சரிக்கிறாரென்று ஸ்நாபக அருளப்பர் தேவஞான திருஷ்டியால் அறிந்திருந்தாலும், சேசுநாதர்சுவாமி தம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற வந்தபோதுதான் அவரை முதல்விசை தம்முடைய கண்களால் கண்டு அறிந்துகொண்டார்.

John 1:33

அப்பொழுது சின்னப்பர் சொன்னதாவது: அருளப்பர் தமக்குப்பின் வருபவராகிய சேசுநாதரை விசுவசிக்கவேண்டுமென்று ஜனங்களுக்குச் சொல்லி, அவர்களுக்குத் தவத்தின் ஞானஸ்நானங்கொடுத்தார் என்றார். (அப். 1:5; 11:16; மத். 3:11.)

Acts 19:4

அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்: அப்படியே அன்றையத் தினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். *** 41. இவ்வாக்கியத்தில் சொல்லப்படுகிற அப்பம் தேவநற்கருணையாமே. அக்காலத்திலே சகல கிறீஸ்துவர்களும் பிரதி தினமும் தேவநற்கருணை உட்கொண்டுவந்தார்களென்றறிக. அன்றியுஞ் சீரிய பாஷைச் சுவிசேஷத்தில் அப்பமென்னும் சொல்லுக்குப் பதிலாய்த் தேவநற்கருணை என்ற சொல்லே எழுதப்பட்டிருக்கிறது.

Acts 2:41


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |