Topic : Baptism

ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.

Galatians 3:26-27

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

Matthew 28:19-20

அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

Acts 2:38

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

Mark 16:16

இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.

1 Peter 3:21

கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதை அறியீர்களா?

Romans 6:3

இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.

John 3:5

இனித் தாமதமேன்? எழுந்து அவருடைய பெயரைச் சொல்லி, மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்ளும்" என்றார்.

Acts 22:16

மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.
பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.

Luke 3:21-22

ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம்.

1 Corinthians 12:13

நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், 'ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்' என்றார்.

John 1:33

சின்னப்பர் அப்பொழுது, "அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம். அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார்.

Acts 19:4

அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு, அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

Acts 2:41


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |