அப்பொழுது தேவனுடைய ஆவி ஒதேதின் குமாரனாகிய அசரி யாஸின்மேல் இறங்கி வந்தது.
அவன் வெளிப்பட்டு ஆசா வுக்கு எதிர்கொண்டுபோய் அவனை நோக்கி: ஆசாவே, யூதாவின் புத்தி ரரே, பெஞ்சமீன் கோத்திரத்தாரே, கேளுங்கள்: கர்த்தர் உங்களுக்குத் துணையாக வந்தார். நீங்கள் அவரைத் தேடினால் அவர் உங்களுக்கு அகப் படுவார். நீங்கள் அவரை விட்டுவிட் டாலோ அவரும் உங்களை விட்டு விடுவார்.
இஸ்ராயேல் வெகுநாளாய் மெய்யான தேவனுமில்லாமல், உபதேசிக்கிற குருக்களும் இல்லாமல் வேதத்துக்கேற்ற நடக்கையுமில்லா மல் இருக்கப் போகிறது. பின்னும் இஸ்ராயேலர் நெருக்கத்தில் அகப் பட்டுத் தங்கள் தேவனாகிய கர்த்த ருக்குத் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுதே அவர் அவர்களுக்கு வெளிப்படுவார்.
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் சரி, உள்ளே வருகிறவர்களுக்கும் சரி, சமாதானம் கிடையாது. ஆனால் தேசங்களின் குடிகள் எல்லோருக்குள்ளே நாலு திசையினின்று வந்த பயங்கரங்கள் இருக்கப் போகிறது.
ஜாதியை ஜாதியும், பட்ட ணத்தைப் பட்டணமும் விரோதம் பண்ணுமே. தேவன் அவர்களை நானாவித இடுக்கத்திலும் கலங்கப் பண்ணுவார்.
நீங்களோ திடன் கொள்ளுங் கள். உங்கள் கைகளை நெகிழ்ந்து போக விடாதீர்கள்; உங்கள் கிரியை களுக்குச் சம்பாவனை கிடைக்கு மல்லவா? என்றான்.
இந்த வார்த்தைகளையும், ஓதேதின் குமாரனான தீர்க்கதரிசி யாகிய அஸரியாஸின் தீர்க்கதரிசனத் தையும் கேட்டபோது ஆசா திடாரிக் கம் கொண்டு யூதா தேசத்திலும் பெஞ்சமீன் தேசத்திலும் தான் பிடித் திருந்த பட்டணங்களிலும், எப்பிரா ம் மலையிலும் அகப்பட்ட விக்கிர கங்களை அகற்றிக் கர்த்தருடைய மண்டபத்திற்கு முன்பாக இருந்த கர்த்தருடைய பீடத்தை அபிஷேகம் பண்ணினான்.
பிறகு, யூதா ஜனங்களையும் பெஞ்ஜமீன் ஜனங்களையும் அவர் களோடு எப்பிராயீமிலும், மனாசே யிலும், சிமேயோனிலும் இருந்து வந்த அந்நியர்களையும் வரப்பண்ணி னான். (உள்ளபடி) இவர்களில் வெகு பேர்கள் தேவனாக கர்த்தர் ஆசா வோடு இருக்கிறதைக் கண்டு இஸ்ரா யேலை விட்டு அவனிடத்தில் அடைக்கலம் புகுந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் ஆசா அரசனுடைய பதினைந்தாம் வருஷத் திலே எருசலேமுக்கு வந்து கூடி,
தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த திரவியங்களில் அவர்கள் அந்நாளிலே எழுநூறு மாடு களையும், ஏழாயிரம் கடாக்களையும் கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
அவர்கள் முழு ஆத்துமத் தோடேயும், முழு மனதோடேயும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடிப் பின்செல்ல வேண்டும் என்று (பூர்வம் செய்யப் பட்ட) உடன்படிக்கையைப் புதுப் பிக்கிறதற்காக ஆசா வழக்கப்பிர காரம் வந்தான்.
(அவன் அவர்களைப் பார்த்து:) சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும் இஸ்ராயேலின் தேவ னாகிய கர்த்ரை எவன் தேடாமல் இருக்கிறானோ, அவன் சாகக்கடவா னென்றான்.
அதற்கு அவர்கள் மகா சப்தத் தோடும், கெம்பீரத்தோடும், பூரிகை களும், எக்காளங்களும் தொனிக்க மேற்படி உடன்படிக்கையைப் பண்ணி கர்த்தருடைய திருநாமத் தினாலே ஆணையிட்டார்கள்.
இவ்வித ஆணையைத் தவிர யூதா தேசத்தார் அனைவரும் (மீறி நடந்தால்) தாங்கள் சாபத்துக்க உட்பட்டவர்கள் என்று சொல்லிச் சபதம் கூறினார்கள்: ஆ! அவர்கள் மனசாரத்தானே மேற்சொல்லப் பட்ட ஆணையை இட்டதும், முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடின தும் வாஸ்தவமே. ஆனதுபற்றிக் கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, அவர்களைச் சுற்றுப்புறத்தாரோடு யுத்தமில்லாமல் இளைப்பாறப் பண்ணினார்.
ஒரு விக்கிரகச் சோலையிலே இராசாவின் தாயாராகிய மாக்காள் பரியப்பென்னும் அருவருப்பான விக்கிரகத்தை ஸ்தாபித்ததைக் கேள் விப்பட்டு, ஆசா அவளை இராக்கினி யாயில்லாதபடிக்கு விலக்கிப் போட் டதுமன்றி, மேற்படி விக்கிரகத்தை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித் துப் போட்டான்.
மேடைகளோ இன்னும் இஸ் ராயேலிலே இருந்தன. ஆனால் ஆசாவின் இருதயம் அவன் உயிர் நாட்களிலெல்லாம் உத்தமமாகவே இருந்தது.
அவனுடைய தகப்பனும் தானும் பரிசுத்தமென்று நேர்ந்து கொண்டிருந்த வெள்ளியையும், பொன்னையும், பலவித பணிமுட்டு முதலியவைகளையும் ஆசா தேவ னுடைய ஆலயத்திலே கொண்டு வந்தான்.
ஆசா அரசாண்ட முப்பத் தைந்தாம் வரும் மட்டும் தேசத்தில் யாதொரு சண்டையும் (நேரிட வில்லை).
2 Chronicles 15:2b