Topic : Giving

ஆகிலும் மனவருத்தத்தோடுமல்ல, கட்டாயத்தினாலுமல்ல, அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கக்கடவான். ஏனென்றால் முகமலர்ந்து கொடுக்கிறவனிடத்தில் சர்வேசுரன் பிரியப்படுகிறார். (சர்வப். 35:11.)

2 Corinthians 9:7

மனிதன் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு ஸ்தலத்தை உண்டாக்குகின்றது.

Proverbs 18:16

நன்மையை ஆசிக்கிற ஆன்மா பூரணமடையும்; (மற்றவர்களைப்) பூரிக்கச்செய்கிறவன் தானும் பூரிக்கப் படுவான்.

Proverbs 11:25

இவைகளையெல்லாம் தேவ ரீருக்குக் கொடுக்கும் சத்துவமுண்டா வதற்கு நான் எம்மாத்திரம்? எல்லாம் தேவரீருடையது, உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

1 Chronicles 29:14

கொடுக்கும்படி ஒருவனுக்கு நல்ல மனமிருந்தால், அவன் சக்திக்கு மிஞ்சினதல்ல, அவன் சக்திக்குத் தக்கது (கொடுப்பது) அங்கீகரிக்கப்படும்.

2 Corinthians 8:12

கொடுங்கள், உங்களுக்கும் கொடுக் கப்படும்; அமுக்கவும் குலுக்கவும்பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும் என்றார். (மத். 7:2; மாற். 4:24.)

Luke 6:38

உன் ஆஸ்தியைக் கொண்டு ஆண்டவரைச் சங்கி; உன் எல்லா விளைவுகளின் முதல் பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு (தோபி.4:7; லூக். 14:13).

Proverbs 3:9

ஆகையால் விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறவர் உங்களுக்குப் புசிப்பதற்கு அப்பத்தையுங் கொடுத்து, உங்கள் விதையையும் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் பலன்களையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

2 Corinthians 9:10

ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது, கள்ள ஞானிகள், மனிதரால் சங்கிக்கப்படத்தக்கதாக ஜெப ஆலயங்களிலும் தெருவீதிகளிலும் செய் கிறது போல, உனக்கு முன்பாக எக் காளம் ஊதப்பண்ணாதே. அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 6:2

நன்மைபுரிய முயலுகின்ற வனை நீ விலக்காதே; உன்னால் இயலு மானால் நீயும் நன்மை செய்.

Proverbs 3:27

உன்னைக் கேட்கிற எவனுக் கும் கொடு; உன்னுடையவைகளைப் பறித்துக் கொள்ளுகிறவனிடத்தில் அவைகளைத் திரும்பக் கேளாதே;

Luke 6:30

பத்தில் பாகங்களெல்லாம் (நமது) களஞ்சியஞ் சேருங்கள்; அது நமது வீட்டில் (நம்மூழியருக்குப்) போஷணையாயிருக்கட்டும்; அதற் குப்பின் யாம் உங்களுக்கு வானக மழைத் தாரைகளைத் திறந்து விடா மல் போகின்றோமா? (எல்லா நன்மைகளிலும்) சம்பூரணம் வரை யாக நமது நல்லாசியை உங்கள்மீது சொரியாதிருக்கின்றோமா என நம் மைப் பரீட்சியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

Malachi 3:10

மேலும் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் உங்களுக்குப் போதுமான யாவற்றையுங் கொண்டிருந்து, எவ்வித நற்கிரியைகளிலும் சம்பூரணமுள்ளவர்களாகும்படி சர்வேசுரன் உங்களிடத்தில் எவ்வித நன்மைகளையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

2 Corinthians 9:8

உமது கோபத்தின் முகத்தே எனது திரேகத்தில் சுகமற்றுப் போயிற்று, என் பாவங்களின் முகத்தே என் எலும்புகள் உறவற்றுக் கலகலத் துப்போயின.

Psalms 37:4

இந்தப்பிரகாரமாய் நீங்கள் சகலத்திலும் நிறைந்தவர்களாகி, எங்களாலே சர்வேசுரனுக்குத் தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாகச் சகல நேர்மையான தர்மத்திலும் பெருகி வளருவீர்கள்.

2 Corinthians 9:11

அன்றியும் என் ஆஸ்திபாஸ்திகளெல்லாவற்றையும் நான் ஏழைகளுக்குப் போஜனமாகப் பகிர்ந்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கும்படி கையளித்தாலும் என்னிடத்தில் தேவசிநேக மில்லாவிட்டால், எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை. (மத். 6:2, 3.)

1 Corinthians 13:3

சேசுநாதர் அவனை நோக்கி: நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக்கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷ முண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் என்றார்.

Matthew 19:21

அவன் நாள் முழுவதும் இச் சித்து ஆசிக்கிறான்; ஆனால் நீதிமானா யிருக்கிறவன் கொடுப்பான்; ஒயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

நோயாளிகளைக் குணமாக்குங் கள், மரித்தோரை உயிர்ப்பியுங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குங்கள்; பசாசுகளை ஓட்டுங்கள். இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

Matthew 10:8


மீளவும் அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் போய்க் கொழுத் தவைகளை உண்டு தேன் கலந்த ரசத்தைக் குடித்துத் தங்களுக்குச் சாப்பாடு முஸ்திப்புப் பண்ணாதவர் களுக்கும் பங்குகளை அனுப்புங்கள்; ஏனென்றால் (இது) கர்த்தருடைய பரிசுத்த நாளாயிருக்கிறது. கர்த்த ருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறதே உங்களுடைய வல்லமையாகையி னால் நீங்கள் விசாரத்துக்கு இடங் கொடுக்க வேண்டாம் என்றார்.

Nehemiah 8:10

உன் வாயைத் திறந்து நீதியா யிருக்கிறதைக் கற்பி; இல்லாதவனை யும் ஏழையையும் நியாயந் தீர்.

Proverbs 31:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |