Topic : Giving

ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.

2 Corinthians 9:7

மனிதனின் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு இடத்தை உண்டாக்குகின்றன.

Proverbs 18:16

நன்மையை நாடுகிற ஆன்மா நிறைவுபெறும். (மற்றவர்களைப்) பூரிக்கச் செய்கிறவன் தானும் பூரிப்படைவான்.

Proverbs 11:25

இவற்றை எல்லாம் உமக்குக் கொடுக்க நான் யார்? என் குடிகளுக்கும் என்ன உரிமை இருக்கிறது? எல்லாம் உம்முடையன. உம் கைகளினின்று நாங்கள் பெற்றுக்கொண்டதையே உமக்குத் திரும்பக் கொடுத்துள்ளோம்.

1 Chronicles 29:14

கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .

2 Corinthians 8:12

மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."

Luke 6:38

உன் சொத்தைக் கொண்டு ஆண்டவரை வணங்கு. உன் எல்லா விளைவுகளின் முதற்பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு.

Proverbs 3:9

விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார்.

2 Corinthians 9:10

எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 6:2

நன்மை புரிய முயல்கிறவனை நீ விலக்காதே. உன்னால் இயலுமானால், நீயும் நன்மை செய்.

Proverbs 3:27

உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே.

Luke 6:30

பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்த பின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறோமா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Malachi 3:10

கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார்.

2 Corinthians 9:8

ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார்.

Psalms 37:4

நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.

2 Corinthians 9:11

எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும் எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல், எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

1 Corinthians 13:3

அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.

Matthew 19:21

அவன் நாள் முழுதும் ஆவலோடு இச்சிக்கிறான். ஆனால், நீதிமானாய் இருக்கிறவன் கொடுப்பான்; ஓயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயுற்றோரைச் சுகமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்; இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

Matthew 10:8

தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.

Psalms 37:21

மீண்டும் எஸ்ரா அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு இனிய திராட்சை இரசத்தைக் குடித்து, உண்ண இல்லாதவர்களுக்கு உணவு அனுப்பி வையுங்கள். ஏனெனில், ஆண்டவரின் புனித நாள் இதுவே! எனவே வருந்த வேண்டாம். ஆண்டவரில் மகிழ்வதிலேயே உங்களுடைய ஆற்றல் அடங்கியிருக்கிறது" என்றார்.

Nehemiah 8:10

உன் வாயைத்திறந்து நீதியானதைக் கற்பி; இல்லாதவனையும் ஏழையையும் நியாயந்தீர்.

Proverbs 31:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |