Topic : Angels

சகோதர அன்பு உங்களில் நிலைத் திருப்பதாக.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங் கள். அதனாலே சிலர் தாங்கள் அறியாம லே தேவதூதர்களை உபசரித்தது உண்டு. (உரோ. 12:13; 1 இரா. 4:9; ஆதி. 18:3.)

Hebrews 13:1-2

நான் என் பிதாவை மன்றாடக் கூடாதென்றும், அவர் பன்னிரண்டு சேனைக்கதிகமான தேவதூதர்களை இக்ஷணமே என்னிடத்தில் அனுப்ப மாட்டாரென்றும் நினைக்கிறாயோ?

Matthew 26:53

பின்பு (இவ்வுலகத்தில்) உயி ரோடே விடப்பட்டிருக்கிற நாம் அவர் களோடேகூட மேகங்களில் எடுபட்டு, ஆகாயத்தில் கிறீஸ்துநாதருக்கு எதிர் கொண்டுபோய், அப்படியே ஆண்ட வரோடு எப்போதும் இருப்போம்.
ஆனபடியினாலே இந்த வார்த்தைகளைக்கொண்டு நீங்கள் ஒருவ ரொருவரைத் தேற்றிக்கொள்ளுங்கள். * 17. தெசலோனிக்கேய சபையார் தங்களில் மரிக்கிறவர்களை ப்பற்றி மிகவும் துக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆறுதலாக அர்ச். சின்னப்பர் போதித்த தன்மையாவது: நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் நீங்களும் உங்கள் மரித்தோர்களைக் குறித்துத் துக்கப்படவேண்டாம். ஏனெனில், அவர்கள் என்றென்றைக்கும் மரித்தவர்களல்ல. அவர்களுடைய மரணம் நித்திரையைப்போலிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உயிர்த்தெழுந்திருப்பார்கள். அதெப்படியென்றால், உலகமுடிவிலே சேசுநாதர் சம்மனசுக்கள் சூழ, மிகுந்த மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்தினின்று இறங்கி வந்து, அதிதூதர் நான்கு திசைகளிலும் கேட்கும்படி எக்காளம் ஊதி: மரித்தோரே எழுந்திருங்களென்று கூப்பிடக் கற்பிப்பார். அப்பொழுது கிறீஸ்துநாதருடைய சமாதான ஐக்கியத்தில் மரித்தவர்களாகிய சகலரும் ஒரு க்ஷணத்தில் கல்லறைகளைவிட்டு எழுந்து, அப்போது உயிரோடிருக்கும் மற்ற விசுவாசிகளோடு ஏகோபித்துக் கிறீஸ்துநாதருக்கு எதிர்கொண்டுபோய் அவரோடேகூடப் பரமண்டலங்களில் ஏறி என்றென்றைக்கும் அவருடனேகூடப் பாக்கியமாயிருப்பார்கள். ஆகையால் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற நீங்கள் இந்த வாக்கியங்களைக் கொண்டு ஒருவரொருவரைத் தேற்றி ஆறுதலடைந்திருங்கள் என்கிறார். இதிலே அர்ச். சின்னப்பர் அந்தச் சபையார்களுக்கு ஆறுதல் வருவிக்கவேண்டுமென்கிற கருத்தாயிருந்தபடியால், நடுத்தீர்வையில் நடக்கப்போகிற மற்றவைகளெல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டு, ஆறுதலுக்கு ஏதுவானவைகளை மாத்திரம் இங்கே காட்டுகிறார். அதைப்பற்றியே முதலாவது, கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர்களுடைய உத்தானத்தைக் குறித்துப் பேசுகிறார். ஆனால் 1 கொரிந்தியர் 15-ம் அதி. 51-ம் வசனத்தில் கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர் களுமன்றிப் பாவிகளும் உயிர்ப்பார்கள் என்கிறார். 2-வது. சேசுநாதர் நடுத்தீர்க்க வரும் போது உயிரோடிருக்கிறவர்கள் ஒரு க்ஷணத்தில் மரித்து உயிர்ப்பார்களென்று சொல்லாமல், முன் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்தவுடன் அவர்களும் இவர்களும் ஒன்றாகக்கூடி ஆகாயத்தில் எழுந்து சேசுநாதருக்கு எதிராகப் போவார்கள் என்கிறார். ஆகையால் அப்போது உயிரோடிருப்பவர்கள் மரிப்பதில்லையென்று சிலர் நினைப்பதற்கு இட மாகிறது. ஆயினும் அர்ச். சின்னப்பரே எபிரேயர் 9-ம் அதி. 27-ம் வசனத்தில் சொல்லு மாப்போல தேவ தீர்மானத்தால் எல்லா மனிதர்களும் மரிக்கவேண்டியதென்பத

1 Thessalonians 4:16-17

அப்பொழுது, தேவதூதன் அந்த ஸ்திரீகளைப் பார்த்து: நீங்கள் பயப் படவேண்டாம், சிலுவையிலே அறை யுண்ட சேசுநாதரைத் தேடுகிறீர்க ளென்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை . ஏனெனில் தாம் திருவுளம்பற்றினபடியே உயித் தெழுந்தார். ஆண்டவர் வைக்கப்பட் டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.

Matthew 28:5-6

ஏனெனில் சாவானாலும், ஜீவ னானாலும், தேவதூதரானாலும், சத்து வகரானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், பராக்கிரமமானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதர்மேல் நமக்குள்ள தேவ சிநேகத்தைவிட்டு நம்மை விலக்க முடியாதென்று எனக்கு நிச்சயமா யிருக்கிறது.

Romans 8:38-39

உன்னத ஸ்தலங்களிலே சர்வேசு ரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோ கத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக் குச் சமாதானமும் உண்டாகக்கடவது என்றார்கள்.

Luke 2:14

மனிதருடைய பாஷைகளையும், தேவதூதர்களுடைய பாஷைகளையும் நான் பேசினாலும், என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் ஓசையிடுகிற வெண்கலம்போலவும், கிண்கிணீரென்கிற கைத்தாளம் போலவும் ஆனேன்.

1 Corinthians 13:1

அவ்விதமே தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கு மென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். * 10. மோட்சவாசிகளுக்கும், இவ்வுலகத்திலுள்ள கிறீஸ்துவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், ஆகையால் அவர்களை நோக்கி மன்றாடுகிறது வீணென்றும் போதிக்கிறவர்களை இந்த வாக்கியம் மறுக்கிறது.

Luke 15:10

தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்சவேண்டாம், ஏனெனில் சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.
இதோ, உமது உதரத்தில் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமஞ் சூட்டுவீர். (இசை . 7:14; லூக். 2:21.)

Luke 1:30-31

அவர் பரலோகத்துக்கு எழுந்தருளிப்போகிறதை அவர்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ வெண்ணுடையணிந்தவர்களாகிய இரண்டுபேர் அவர்கள் அருகே வந்து நின்று, *** 10. இரண்டுபேர் என்பது அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 20-ம் அதி. 12-ம் வசனத்தில் கண்டபடி மனித ரூபமாய்த் தோன்றிய இரண்டு சம்மனசுக்கள் என்றறிக.
அவர்களை நோக்கி: கலிலேய மனிதரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நிற் கிறீர்கள்? உங்களிடத்தினின்று பரலோ கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சேசுநாதர் எப்படிப் பரலோ கத்துக்கு எழுந்தருளிப் போகக் கண்டீர் களோ, அப்படியே திரும்பவும் வருவார் என்றார்கள்.

Acts 1:10-11

இஸ்பிரீத்துசாந்துவினால் உண்டாயிற்று:- இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அர்ச். கன்னிமரியாயின் இரத்தத்தைக்கொண்டு திருக்குழந்தையின் சரீரத்தை அவருடைய நிர்மலமான உதரத்திலே உண்டாக்கினாரேயொழிய அவர் திருக்குழந்தைக்குத் தகப்பனல்ல. ஆதாமின் சரீரத்தை சர்வேசுரன் மண்ணாலே உண்டாக்கினதினாலே ஆதாமுக்கு சர்வேசுரன் உண்டாக்கின தகப்பனே தவிர, பெற்ற தகப்பனாகவில்லை என்பது போலவாம்.

Matthew 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |