Topic : Following

ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த மார்க்கத்திலேயே நடவுங்கள். அப்போது சீவிப்பீர்கள். உங்களுக்கும் நன்றாக இருக்கும். நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே உங்கள் நாட்களும் நீளித்திருக்கும்.

Deuteronomy 5:33


கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவசிநேகத்தாலும், கிறீஸ்துநாதருடைய பொறுமையிலும் நடத்துவாராக.

2 Thessalonians 3:5

உங்களை நடத்துபவராகிய கர்த்தரே உன்னோடு இருப்பா ரல்லாதே அவர் உன்னை விடவும், கை நழுவவும் மாட்டாராகையால் நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

Deuteronomy 31:8

சேசுநாதர் மீளவும் ஜனங்களோடு பேசி, அவர்களை நோக்கி: நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்செல்லுகிறவன் இருளிலே நடவாமல், ஜீவியத்தின் ஒளியைக் கொண் டிருப்பான் என்றார். (1 அரு. 1:5, 9; 9:15.)

John 8:12

தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவ னும் எனக்குப் பாத்திரவானல்ல. (மத். 16:24; மாற். 8:34; லூக்.14:27.)

Matthew 10:38

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரானவரை மாத்திரம் பின்பற்றி அவருக்குப் பயந்தவர்களுமாய் அவரு டைய கற்பனைகளை அநுசரிக்கிற வர்களுமாய் அவருடைய வாக் கியத்திற்குச் செவிகொடுக்கிறவர் களுமாய் அவருக்கு மாத்திரமே ஊழியஞ் செய்து அவரை அண்டிக் கொள்ளக் கடவீர்கள்.

Deuteronomy 13:4

நாம் இஸ்பிரீத்துவினால் ஜீவிக்கிறோமாகில், இஸ்பிரீத்துவுக்கேற்றபடி நடக்கவுங்கடவோம்.

Galatians 5:25

பின்னும் அவர் தம்முடைய சீஷர் களோடு ஜனக்கூட்டத்தை வரவ ழைத்து, அவர்களுக்குத் திருவுளம் பற்றி னதாவது: யாதொருவன் என்னைப் பின்சென்றுவர விரும்பினால், தன்னைத் தானே பரித்தியாகஞ் செய்து தன் சிலு வையைச் சுமந்து கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவான். (மத். 10:38; 16:24; லூக். 9:23; 14:27.) * 34-ம் வசனத்துக்கு மத் 10-ம் அதி 38-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

Mark 8:34

ஆகையால் நீங்கள் மிகவும் பிரியமான பிள்ளைகளைப்போல், சர்வேசுரனைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,

Ephesians 5:1

இப்போது இஸ்ராயேல் சொல்லத்தக்கதாவது : என் வாலப் பிராயந்துவக்கி அடிக்கடி என்னை நெருக்கினார்கள்.

Psalms 128:1

ஏனெனில் நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறீஸ்து சேசு வுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுத் தேவனுடைய கைவேலையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். *** 10. கைவேலை: நீதிமானாக்கப்பட்டவன் மெய்யாகவே இஷ்டப்பிரசாதத்தால் புது உயிர் அடைந்தவனாயிருப்பதால், சர்வேசுரனுடைய கைவேலை எனப்படுகிறான்.

Ephesians 2:10

ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என்னைப் பின்பற்றக்கடவான். நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே என் ஊழியனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், என் பிதா அவனைக் கனப்படுத்துவார்.

John 12:26

ஆகையால் சேசுநாதர் தம்மை விசுவசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் வாக்கியத்திலே நிலைத்திருந்தால், மெய்யாகவே என்னுடைய சீஷர்களா யிருப்பீர்கள்.
சத்தியத்தையும் அறிந்துகொள்ளு வீர்கள்; சத்தியம் உங்களைச் சுயாதீன ராக்கும் என்றார்.

John 8:31-32

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதெதைச் செய்தாலும், அவையெல்லாம் ஆண்டவரா கிய சேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாய்ப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத் திரம் பண்ணுங்கள். (1 கொரி. 10:31.)

Colossians 3:17

இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறீஸ்து நாதரும் நமக்காகப் பாடுபட்டு, தம் முடைய அடித்தடங்களை நீங்கள் பின்பற்றும்படியாக உங்களுக்கு மாதிரி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

1 Peter 2:21

நீங்கள் ஒருவரை ஒருவர் சிநே கித்தாலல்லோ, நீங்கள் என் சீஷர்க ளென்று எல்லாரும் இதனாலே அறிந்துகொள்வார்கள் என்றார்.

John 13:35

அப்படிப்போல விசுவாசமும் கிரியைகளைக் கொண்டிராவிட்டால், தன் னிலே செத்த விசுவாசமாயிருக்கின்றது.

James 2:17

சேசுநாதர் அவனை நோக்கி: நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக்கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷ முண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் என்றார்.

Matthew 19:21

அல்லது கர்த்தரைச் சேவிக்கிற எங்களுக்கு ஆகாததாய் நீங்கள் கண் டால் உங்கள் இஷ்டப்படி செய் யுங்கள். உங்களுக்குச் சித்தமானால் மெசொப்பொத்தாமியாவில் உங்கள் பிதாக்கள் தொழுத தேவர்களை யாகி லும் நீங்கள் வாசம்பண்ணுகிற அமோறையர் தேசத்து விக்கிரகங் களையென்கிலுங் கும்பிட்டுச் சேவிக் கக்கூடும். நானும் என் வீட்டாரு மோ கர்த்தரையே சேவிப்போம் என்றான்.

Joshua 24:15



நீங்கள் மிகுந்த கனியைத் தந்து, என் சீஷர்களாயிருப்பதால் என் பிதா மகிமைப்பட்டிருக்கிறார்.

John 15:8

கடைசியாய் நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளின் பெரிய மேய்ப்பரான நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாத ரை மரித்தோரினின்று எழுந்து வரச் செய்த சமாதான தேவன், (உரோ. 15:33.)
சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு தமது சமுகத்திற்குப் பிரியமானதை உங்களிடத்தில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியைகளுக் கும் இணக்குவாராக. சேசுக்கிறீஸ்துநாதருக்கே அநவரதகாலமும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Hebrews 13:20-21

வலத்திலும் இடத்திலுந் திரும் பாதே; உன் பாதத்தையுந் தின்மை யினின்று விலக்கு; ஏனெனில், வலத் திலிருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்திலிருக்கின்ற வையோ பொல்லாதவைகளாயிருக் கின்றன; ஆனால் அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்து வார்.

Proverbs 4:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |