Topic : Fear

நீ பயப்படாதே; நாம் உன் னோடிருக்கிறோம், நம்பிக்கையில் தளராதே; ஏனெனில் நாம் (அபிர காம்) தேவனான உன் கடவுளாயிருக் கிறோம், அவருக்குச் செய்தது போலவே உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவிபுரிவோம்; நம்மு டைய நீதிமானின் பலமாயிருந்த நம் வலது கரம்தான் உன்னையும் ஆதரிக் கும்.

Isaiah 41:10

மகா உந்நதமான கடவுளும், எனக்கு நன்மை புரிந்த தேவனு மானவரை நோக்கி நான் அபய சத்த மிடுவேன்.

Psalms 56:3

பலங்கொண்டு திடமனதா யிருவென்று இதோ நாம் உனக்குக் கற்பிக்கிறோம். திகைக்கவும் மதி கலங்கவும் வேண்டாம். ஏனென் றால் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருப்பார் என்றருளினார்.

Joshua 1:9

ஏனெனில், உன் கரத்தைப் பற்றிக்கொண்டு; ""நீ அஞ்சாதே; நாமே உனக்குத் துணையாயிருப் போம்'' எனப் புகலும் உன் தேவனான ஆண்டவர் நாமே.

Isaiah 41:13

எதன்பேரிலும் கவலைப்படாதிருங்கள். ஆனால் எல்லா ஜெபத்திலும், வேண்டுதலிலும், நன்றியறிந்த ஸ்தோத் திரத்தோடுகூடிய உங்கள் மன்றாட்டுகள் தேவசமுகத்தில் தெரியவரக்கடவது.
அப்படியே எல்லா அறிவை யுங் கடந்த சர்வேசுரனுடைய சமா தானமானது உங்கள் இருதயங்களை யும் உங்கள் சிந்தைகளையும் சேசுக் கிறீஸ்துவுக்குள் காப்பாற்றுவதாக.

Philippians 4:6-7

உமது சகல கற்பனைகளின்படி நான் நடந்துகொள்வேனேயாகில் எனக்கு வெட்கம் நேரிடாது.

Psalms 118:6

சிநேகத்தில் பயமில்லை. உத்தம சிநேகம் பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் சிநேகத்தில் உத்தமனல்ல. *** 18. உத்தம சிநேகமானது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது என்கிறார். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் 2-ம் அதி. 12-ம் வசனத்தில்: பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சணியத்தை நிறைவேற்றப் பிரயாசைப்படுங்கள் என்கிறார். தாவீது இராஜா 18-ம் சங்கீதம் 9-ம் வசனத்தில்: தேவபயமானது பரிசுத்தமுள்ளது. அது என்றென்றைக்கும் நிலைநிற்கிறது என்று சொல்லியிருக்கிறார். இப்படியே வேதாகமங்களில் இன்னும் அநேக இடங்களில் தேவ பயமானது நல்லதென்று சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் அருளப்பருடைய இந்த வசனத்துக்கு விரோதமென்று நினைக்கத்தக்கதல்ல. அருளப்பர் பாவிகளுடைய தீர்வைக்கும் தண்டனைக்கும் பயப்படுகிற அடிமைப் பயத்தைப்பற்றிப் பேசுகிறார். தாவீது இராஜா, அர்ச்.சின்னப்பர் முதலானவர்களோ புத்திர பயத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். அதேதென்றால் குற்றஞ்செய்த அடிமைகள் தண்டனைக்குப் பயந்து தங்கள் குற்றத்தை எஜமான்கள் கண்டுகொள்வார்களென்று பயப்படுவார்கள். நல்ல குணமுள்ள பிள்ளைகள் தங்கள் குற்றத்தால் தங்கள் தகப்பனுக்கு மனவருத்தம் வருவிப்போமே, என்று பயப்படுவார்கள். இதுவே தாவீது இராஜாவும், அர்ச். சின்னப்பர் முதலானவர்களும் சொல்லுகிற புத்திர பயமென்று சொல்லப்படும். இப்படிப்பட்ட பயம் தேவ சிநேகத்துக்கு விரோதமாயிராததுமன்றி, அதைக் காப்பாற்றுவதற்கு மகா உதவியாயிருக்கிறது.

1 John 4:18

வீணில் தன் ஆத்துமாவை உபயோகப்படுத்தாமலும், தன் புறத் தியானுக்குக் கபடாய் ஆணை யிடாமலுங் கரங்களில் மாசற்றவனும் இருதயத்தில் பரிசுத்தமுள்ளவனுமாயிருப்பவன்தான்.

Psalms 23:4

அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர்மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள். (சங். 54:24; மத். 6:25; லூக். 12:22.)

1 Peter 5:7

மனிதனுக்குப் பயப்படுகிற வன் சீக்கிரம் மடிவான்; ஆண்டவ ரில் நம்பிக்கையாயிருக்கிறவன் உயர்த்தப்படுவான்.

Proverbs 29:25

ஆண்டவரே! உம்மை நோக்கி அபயமிடுவேன்; என் சர்வேசுரா! தேவரீர் என்மட்டில் மவுனமாயிரா தேயும்; நீர் மவுனமாயிருந்தால் படு குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

Psalms 27:1

ஏனெனில், சர்வேசுரன் நமக்குப் பயத்தின் இஸ்பிரீத்துவைக் கொ டாமல், தைரியம், சிநேகம், மனஅமைதி என்பவற்றின் இஸ்பிரீத்துவைக் கொடுத் திருக்கிறார். (உரோ. 8:15.)

2 Timothy 1:7

என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் வெட்கி நாணமடைவார் களாக! எனக்குப் பொல்லாப்பு களைச் (செய்ய) நினைக்கிறவர்கள் சிதறுண்டு குன்றிப்போகக்கடவார்கள்.

Psalms 34:4

வீரங்கொண்டு மனத்தைரிய மாயிருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் தானே உன்னை நடத்துபவர், அவர் உன்னை விடப் போவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றான் (உபா. 7:2).

Deuteronomy 31:6

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; சர்வேசுரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறீர்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (அரு. 14:27.)

John 14:1

அப்படியே நீங்கள் திரும்பவும் பயத்தோடுகூடிய அடிமைத்தனத் தின் புத்தியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடுகிற சுவீ காரப் பிள்ளைகளுக்குரிய புத்தியைப் பெற்றுக்கொண்டீர்கள். (2 தீமோ. 1:7.)

Romans 8:15

ஒரு காசுக்கு இரண்டு அடைக் கலங் குருவிகள் விற்கப்படுகிறதல் லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றா வது உங்கள் பிதாவின் சித்தமின்றித் தரையில் விழமாட்டாது. (லூக். 8:17.)
உங்கள் சிரசின் ரோமங்களெல் லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. (அப். 27:34.)
ஆதலால் அஞ்சாதிருங்கள்; அநே கம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் மேலானவர்களாயிருக்கிறீர்கள்.

Matthew 10:29-31

ஆகையால், ஆண்டவரே எனக்கு உதவி; மனிதன் எனக்கு என்ன செய்வானோவென்று பயப்படமாட்டேன் என்று நாம் நம்பிக்கையோடு சொல்லலாமே. (சங். 117:6.)

Hebrews 13:6

உங்களை நடத்துபவராகிய கர்த்தரே உன்னோடு இருப்பா ரல்லாதே அவர் உன்னை விடவும், கை நழுவவும் மாட்டாராகையால் நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

Deuteronomy 31:8

அவர் கடலின் மேல் நடக் கிறதை அவர்கள் கண்டவுடனே, அது ஒரு பூதமென்று எண்ணி அலறினார்கள்.
ஏனெனில் எல்லாரும் அவ ரைக் கண்டு கலங்கினார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: தைரிய மாயிருங்கள். நான்தான், பயப்படா தேயுங்கள் என்று சொல்லி,

Mark 6:49-50

ஆகிலும் நீங்கள் நீதியினிமித்தம் ஏதேனும் பாடுபட்டால் பாக்கியவான்கள். ஆதலால் அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படாமலும், கலங்காமலு மிருங்கள். (மத். 5:10.)

1 Peter 3:14

அவர் வானத்திலிருந்து (உதவி) அனுப்பி என்னை மீட்டார்; என்னை உபாதிக்கிறவர்கள் வெட்கிப்போகப் பண்ணினார்; சர்வேசுரன் தமது இரக் கத்தையும், உண்மையையும் அனுப்பி னார்; சிங்கக்குட்டிகளுடைய நடுவில் நின்று என் ஆத்துமத்தை விடுவித்தார்; நான் கலக்கங்கொண்டு நித்திரை செய் தேன்; ஏனெனில் மனுமக்களின் பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாம்; அவர் கள் நாவு கருக்கான பட்டயமாம்.

Psalms 56:4

சிறு மந்தையே, நீங்கள் பயப்படாதேயுங்கள்; ஏனெனில் உங்களுக்குத் தம்முடைய இராச்சியத்தைத் தரும்படி உங்கள் பிதாவுக்குச் சித்தமாயிற்று.

Luke 12:32

ஆகாயத்தில் நின்று விழுகிற தண்ணீரால் பர்வதங்களை நனைக் கிறீர்; உம்முடைய கிருபைகளின் பலனாலே பூமி திருப்தியடையும்.

Psalms 103:13

தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்சவேண்டாம், ஏனெனில் சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.
இதோ, உமது உதரத்தில் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமஞ் சூட்டுவீர். (இசை . 7:14; லூக். 2:21.)

Luke 1:30-31


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |