Topic : Fear

நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.

Isaiah 41:10

உன்னதமானவரே, அச்சமென்னை ஆட்கொள்ளும் நாளில் நான் உம்மீது நம்பிக்கை வைப்பேன்: இறைவனின் வாக்குறுதியை நான் போற்றிப் புகழ்கிறேன்.

Psalms 56:3

உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம். திகைக்கவோ மதிகலங்கவோ வேண்டாம். ஏனென்றால், நீ போகும் இடமெல்லாம் உன் ஆண்டவாகிய கடவுள் உன்னோடு இருப்பார்" என்றருளினார்.

Joshua 1:9

ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே உன்னுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, "அஞ்சாதே, நாமே உனக்குத் துணையாயிருப்போம்" என்று உன்னிடம் சொல்லுகின்றோம்.

Isaiah 41:13

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.

Philippians 4:6-7

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்?

Psalms 118:6

அன்பில் அச்சத்துக்கிடமில்லை; நிறை அன்பு அச்சத்தை அகற்றும்; ஏனெனில் அச்சம் கொள்பவன் தண்டனையை எதிர் பார்க்கிறான். அச்சம்கொள்பவனோ அன்பில் நிறைவு பெறவில்லை.

1 John 4:18

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்; உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.

Psalms 23:4

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு.

1 Peter 5:7

மனிதனுக்கு அஞ்சுகிறவன் விரைவில் மடிவான். ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவன் உயர்த்தப்படுவான்.

Proverbs 29:25

ஆண்டவரே என் ஒளி, ஆண்டவரே என் மீட்பு: நான் யாருக்கு அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் வாழ்வுக்கு அடைக்கலம், யாருக்கு நான் நடுங்கவேண்டும்?

Psalms 27:1

கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.

2 Timothy 1:7

நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார்.

Psalms 34:4

துணிவு கொண்டு மனத்தைரியமாய் இருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை நடத்துபவர். அவர் உன்னை விட்டு நீங்கப்போவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார்.

Deuteronomy 31:6

உள்ளம் கலங்கவேண்டாம். கடவுள்மீது விசுவாசம்வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்.

John 14:1

நீங்கள் பெற்றுக்கொண்டது, திரும்பவும் அச்சத்திற்குள்ளாக்கும் அடிமையுள்ளம் அன்று; பிள்ளைகளாக்கும் தேவ ஆவியையே பெற்றுக்கொண்டீர்கள். அந்த ஆவியினால் நாம், "அப்பா, தந்தாய்" எனக் கூப்பிடுகிறோம்.

Romans 8:15

காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா ? எனினும், அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது.
உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.
எனவே, அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்.

Matthew 10:29-31

இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும்.

Hebrews 13:6

உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார்.

Deuteronomy 31:8

அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.
அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.

Mark 6:49-50

நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.

1 Peter 3:14

இறைவன்மீது நம்பிக்கை வைக்கிறேன், அச்சமெனக்கில்லை: அற்ப மனிதன் எனக்கு என்ன செய்வான்?

Psalms 56:4

"சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.

Luke 12:32

தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.

Psalms 103:13

அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.
இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

Luke 1:30-31


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |