Topic : Faith

நீங்கள் அவருடைய இஸ்பிரீத்துவினால் உள்ளரங்க மனிதனாக வல்லமையால் பலப்படவும்,
விசுவாசத்தினாலே கிறீஸ்துநாதர் உங்கள் இருதயங்களில் வாசம் பண்ண வும், நீங்கள் பரம அன்பில் வேரூன்றி நிலைபெற்று, (கொலோ. 2:7.)

Ephesians 3:16-17

ஆதலால் நீங்கள் ஜெபம் பண் ணும் போது கேட்கிறதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்களென்று விசுவசி யுங்கள். அவைகள் உங்களுக்குச் சம்ப விக்குமென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். (மத். 7:7; 21:22; அரு. 14:13.)

Mark 11:24

விசுவாசமானது நாம் நம்பிக் காத்திருக்கவேண்டியவைகளின் அடிநிலையும், காணப்படாதவைகளின் நிச்சயிப்புமாயிருக்கின்றது.

Hebrews 11:1


நீங்கள் நம்பிக்கையிலும், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையிலும், பெருகும்படிக்கு நம்பிக்கையின் தெய் வம் விசுவசிப்பதினாலுண்டாகும் எவ் வித சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

ஆனால் அவன் சற்றுந் தத்தளியாமல், விசுவாசத்தோடு கேட்கக்கடவான்; ஏனெனில் தத்தளிக்கிறவன் காற் றினால் அடிபட்டு எப்பக்கத்திலும் கொண்டுபோகப்படுகிற கடல் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். (மாற். 11:24.)

James 1:6

விசுவாசமில்லாமல் சர்வேசுரனுக் குப் பிரியப்படவே முடியாது. ஏனெனில் சர்வேசுரனை அண்டிப் போகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பதிலளிக்கிறவ ரென்றும் விசுவசிக்கவேண்டும்.

Hebrews 11:6

அவரை நீங்கள் காணாதிருந்தும், சிநேகிக்கிறீர்கள்; இப்போது நீங்கள் அவரைத் தரிசியாதிருந்தும், அவரை விசுவசிக்கிறீர்கள். விசுவசித்து,
உங்கள் விசுவாசத்தின் கதியாகிய ஆத்தும இரட்சணியத்தை அடைவீர்களென்பதால், வாக்குக்கெட்டாத தும், மகிமை நிறைந்ததுமான சந்தோ ஷத்தால் அகமகிழுவீர்கள்.

1 Peter 1:8-9

சேசுநாதர் அவளை நோக்கி: நீ விசுவசித்தால், சர்வேசுரனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையோ? என்றார்.

John 11:40

ஏனெனில் உங்கள் விசுவாசத்தின் பரீட்சை பொறுமையைப் பெறுவிக்கிறதென்று அறிந்து கொள்ளுங்கள். (உரோ. 5:3.)

James 1:3

சேசுநாதர் அவளை நோக்கி: உத்தானமும், உயிரும் நானே; என்னில் விசுவாசமாயிருக்கிறவன் இறந்தாலும், பிழைப்பான். (அரு. 6:40.)
உயிரோடிருக்கையில் என்னை விசுவசிக்கிறவன் எவனும் நித்தியத்துக்கும் சாகமாட்டான். இதை விசுவசிக்கிறாயோ ? என்றார்.

John 11:25-26

விசுவாசத்தில் பலவீனமாயிருக் கிறவனுடைய எண்ணங்களைப் பற்றித் தர்க்கியாமல், அவனை ஏற்றுக்கொள் ளுங்கள்.

Romans 14:1

கடவுளுடைய மனுஷனாகிய நீரோ, இவைகளுக்கு விலகி ஓடி, நீதியையும், பக்தியையும், விசுவாசத்தையும், பரம அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் நாடுவீராக.

1 Timothy 6:11

சர்வேசுரனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கின்றது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாமே.

1 John 5:4

உடனே பிள்ளையின் தகப்பன் அழுகையோடு பேரொலியிட்டு: ஆண்ட வரே! விசுவசிக்கிறேன், என் விசுவாசக் குறையில் எனக்கு உதவிசெய்தருளும் என்றான்.

Mark 9:23

நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனா யிருந்தாலும் என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. (மத். 21:21.)

1 Corinthians 13:2

சேசுநாதர் அவனை நோக்கி: நீ போகலாம்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். என்றவுடனே அவன் பார்வையடைந்து, வழியில் அவரைப் பின்தொடர்ந்து போனான்.

Mark 10:52


சேசுநாதர் அவர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஜீவியத்தின் அப்பம் நானே: என்னிடத்தில் வருகிற வன் பசியடையான்; என்னை விசுவசிக் கிறவனும் ஒருக்காலும் தாகமடையான். (சர்வப். 24:29; அரு. 4:14; 6:41, 48, 51.)

John 6:35

எவ்வாறெனில், நீதியை அடைய இருதயத்தால் விசுவசிக்கிறோம். இரட்சணியமடைய வாயால் அறிக்கையிடுகிறோம்.

Romans 10:10

மலடியான சாராள் தனக்கு வயது காலமாய்விட்டாலும், கர்ப்பந் தரிக்கும்படியான சக்தியை விசுவாசத் தினாலே பெற்றுக்கொண்டாள். ஏனெ னில் வாக்குத்தத்தஞ்செய்தவர் பிர மாணிக்கமுள்ளவரென்று விசுவசித் தாள். (ஆதி. 17:19: 21:2.)

Hebrews 11:11

ஏனெனில் நீங்களெல்லாரும் கிறீஸ்நாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
எப்படியெனில் கிறீஸ்துநாதரிடத் தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிற நீங்க ளெல்லோரும் கிறீஸ்துநாதரை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். (உரோ. 6:3.)

Galatians 3:26-27

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசு வாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9; உரோ. 5:8.)

John 3:16

எப்படியெனில் நீதிமான் விசுவாசத்தினால் ஜீவிக்கிறான் என்று எழுதப் பட்டிருக்கிறபடியே, விசுவாசத்தினின்று விசுவாசத்தில் (வளருவதால்) தேவநீதி அதிலே விளங்குகின்றது. (அபகூக். 2:4; கலாத். 3:11; எபி. 10:38.) *** 17. விசுவாசத்தினின்று விசுவாசத்தில் வளருவதால்:- சுவிசேஷ போதகமானது ஒருவன் தேவரகசிய விசுவாசத்தைக்கொண்டு, தர்மவழியிலே நடக்கத் துவக்கி, அந்த வழியிலே ஆயுசுகாலம் முழுவதும் நெறி தவறாமல் சென்று கடைசியாய் உத்தமனாகும் படி செய்கிறது. ஆகையால் விசுவாசத்தினின்று என்பது விசுவாசத்தில் துவக்கி என்றும் விசுவாசத்தில் வளருவதால் என்பது விசுவாச நெறிதவறாமல் அதில் ஸ்திரப்பட்டு முடிவுபரியந்தம் நிலைநிற்கிறதென்றும் அர்த்தமாம். அதிலே விளங்குகின்றது:- சுவிசேஷத்தில் விளங்குகிறது என்றர்த்தமாம்.

Romans 1:17

விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

Mark 16:16


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |