Topic : Faith

தம்முடடைய மாட்சியின் வளத்திற்கேற்ப, அவருடைய ஆவியினால், உங்கள் உள் மனத்தில் நீங்கள் வலிமையும் ஆற்றலும் பெறும்படி அருள்வாராக.
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிப்படையுமாக அமைவதாக. இவ்வாறு நீங்கள்,

Ephesians 3:16-17

ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.

Mark 11:24

விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி.

Hebrews 11:1

ஏனெனில், கண்கூடான காட்சி நமக்கில்லை. நாம் வாழ்வது விசுவாச வாழ்வு--

2 Corinthians 5:7

பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

ஆனால் விசுவாசத்தோடு கேட்கவேண்டும். தயக்கம் எதுவும் கூடாது. தயக்கம் காட்டுபவன் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலைக்கு ஒப்பாவான்.

James 1:6

விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.

Hebrews 11:6

நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை; எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,
உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.

1 Peter 1:8-9

அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.

John 11:40

அம் மனவுறுதியோ நிறைவான செயல்களில் விளங்குவதாக!

James 1:3

அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.
உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.

John 11:25-26

விசுவாசத்தில் எவனாவது வலுவற்றவனாய் இருந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவன் எழுப்பும் கேள்விகளைப்பற்றி வாதாடாதீர்கள்.

Romans 14:1

ஆனால், கடவுளின் அடியாராகிய நீர் இவையெல்லாம் தவிர்த்துவிடும். நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்பிடியும்.

1 Timothy 6:11

ஏனெனில், கடவுளிடமிருந்து பிறந்தவன் எவனும் உலகை வெல்கிறான். உலகைத் தோற்கடித்து நாம் அடைந்த வெற்றி நம் விசுவாசமே.

1 John 5:4

இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.

Mark 9:23

இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு எனக்கு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.

1 Corinthians 13:2

இயேசு அவனை நோக்கி, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.

Mark 10:52

உண்மையின் பாதையை நான் தேர்ந்து கொண்டேன்: உம் முறைமைகளை என் கண்முன் கொண்டேன்.

Psalms 119:30

அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.

John 6:35

ஆம், உள்ளத்தால் விசுவாசிப்பவன் இறைவனுக்கு ஏற்புடையவனாவான்; வாயினால் அறிக்கையிடுகிறவன், மீட்புப் பெறுவான்.

Romans 10:10

சாராள் வயதான காலத்திலும் ஒரு மகனை ஈன்றெடுக்க ஆற்றல் பெற்றது விசுவாசத்தினாலே தான்.

Hebrews 11:11

ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.

Galatians 3:26-27

தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

John 3:16

ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப் பட்டவனே வாழ்வு பெறுவான்'. என எழுதியுள்ளதன்றோ? இவ்வாறு ஏற்புடையவர்களாக்கும் இறையருட் செயல் முறை அந்த நற்செய்தியிலேயே வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை அது விசுவாசத்தினாலேயே ஆகும்.

Romans 1:17

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.

Mark 16:16


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |