Topic : Desires

ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: இஸ்பிரீத்துவுக்கு ஏற்றபிரகாரம் நடந்துகொள்ளுங்கள். அப்போது மாம்ச இச்சைகளை நிறை வேற்றமாட்டீர்கள். (1 இரா. 2:11.)

Galatians 5:16

ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

நீங்கள் இச்சித்தும், கைக்கொள் ளுகிறதில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமைப்பட்டும் பெற்றுக்கொள் ளக்கூடாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் வழக்காடியும் போர் செய்தும், மன்றாடிக் கேளாததினாலே உங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. * 2. பற்பல காரியங்களுக்கு ஆசைப்படுகிறீர்கள். அவைகளை ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்க, நீங்கள் அதைவிட்டு, போராடி, வியாச்சியம் செய்து அடைந்துகொள்ளலாமென்று நினைக்கிறீர்கள். அதனாலே அதை அடைந்துகொள்ளாமல் போகிறீர்களென்று அர்த்தமாம்.

James 4:2

ஆயினும் வேசித்தனத்தை விலக்கும்பொருட்டு அவனவன் தன் மனைவியையும், அவளவள் தன் புருஷனையும் உடையவர்களாயிருக்கட்டும். *** 2. இந்த வாக்கியத்தில் விவாகஞ் செய்துகொண்ட ஸ்திரீபூமான்களைப்பற்றிப் பேசியிருக்கிறதல்லாதே சகலரையுங் குறித்துப் பொதுப்படையாகப் பேசவில்லை. சகலரும் விவாகஞ் செய்துகொள்வது அர்ச். சின்னப்பருடைய நோக்கமானால், 8-ம் வசனத்தில் கலியாணஞ் செய்யாத வாலர்களையும் கன்னிகைகளையுங் குறித்து அவர்கள் தம்மைப்போல் இருக்கவேண்டுமென்று அவர் ஆசிப்பதேன்? அப்படியானால் தாம் சொன்னதைத் தாமே மறுத்துப் பேசுகிறாரென்கவேண்டும். ஆகையால் இந்த வசனத்தில் கலியாணஞ் செய்துகொண்டவர்களாகிய ஸ்திரீபூமான்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருக்கவேண்டியதைப்பற்றி மாத்திரம் பேசுகிறாரென்று அறியவும்.

1 Corinthians 7:2

அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக்கூடுமோ?

Proverbs 6:28

ஆயினும் உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம். தெய்வ சித்தத்தை நிறைவேற்றுகிறவனோ என்றென்றைக்கும் நிலைநிற்பான்.

1 John 2:17

கன்னிப் பெண்களின் மேல் சிந்தனை முதலாய் எனக்கு வராத படிக்கு நான் என் கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருந்தேன்.மீ

Job 31:1

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆயினும் இந்தச் சுயாதீனத்தைச் சரீர இச்சைகளுக்கு ஏதுவாக்காமல், சிநேகத்தினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.

Galatians 5:13

மன அடக்கமும், விழிப்பும் உள்ள வர்களாயிருங்கள். ஏனெனில் உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங் கத்தைப்போல் யாரை விழுங்கலா மோவென்று தேடி, சுற்றித்திரிகிறது.

1 Peter 5:8

ஏனெனில் உன் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கேயே உன் இருதயமும் இருக்கின்றது. (லூக். 12:34.)

Matthew 6:21

யாவருக்குள்ளும் விவாகமானது சங்கைக்குரியதாயும், விவாகமஞ்சமானது அசுசிப்படாததாயும் இருப்பதாக. காமாதுரர்களையும் விபசாரரையும் தெய்வம் நடுத்தீர்க்கும்.

Hebrews 13:4

எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆனாலும் எல்லாம் தகுந்ததல்ல. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆயினும் நான் ஒன்றிற் கும் என்னை அடிமையாக்கிக்கொள்ள மாட்டேன். (1 கொரி. 10:23.) *** 12. அஞ்ஞான நடுவனிடத்தில் கிறீஸ்தவர்கள் வழக்காடக்கூடாதாவென்று சிலர் கேட்பார்களாக்கும். உத்தரவுதான், என்றாலும் அப்படிச் செய்வது கிறீஸ்தவனுக்கு யோக்கியமல்ல. வேறுவழியாய் அதாவது, திருச்சபையாரைக்கொண்டு நியாயம் பெற்றுக் கொள்ளக்கூடுமாகில் அப்படிச் செய்வதே நலம். ஏனென்றால் கிறீஸ்தவன் சர்வேசுர னுடைய பிள்ளையாயிருக்கிறபடியினாலே, பசாசுக்கடிமையாயிருக்கிற அஞ்ஞானிக ளுடைய அதிகாரத்துக்கு மனம்பொருந்தித் தன்னைக் கீழ்ப்படுத்தப்போவது சரியல்ல வென்று சொல்லத்தகும்.

1 Corinthians 6:12

எவனும் சோதிக்கப்படுகையில், சர்வேசுரனாலே நான் சோதிக்கப் படுகிறேனென்று சொல்லாதிருப்பா னாக. ஏனெனில் சர்வேசுரன் தின்மைக்குச் சோதிப்பவரல்ல. ஆகையால் அவர் எவனையும் சோதிக்கிறவரல்ல.

James 1:13

சர்வேசுரா! தேவரீர் பக்தியற்ற சனத்திற்கு விரோதமாய் என் நியா யத்தை விசாரித்துக்கொள்ளும்; கெட்டவனுங் கபடுள்ளவனுமாகிய மனிதனிடத்தில் நின்று என்னை விடுதலையாக்கும்.

Psalms 42:1

மனுஷசுபாவத்துக்குரிய சோ தனையேயன்றி வேறொன்றும் உங்களுக்கு நேரிடாதிருப்பதாக. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடார். ஆனால் நீங்கள் சோதனையைத் தாங்கும்படி சோதனையோடு வழியும் பண்ணுவார்.

1 Corinthians 10:13

அவர் வழியாக (சர்வேசுரன்) நமக்கு மகா மேன்மையும் விலையேறப் பெற்றதுமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவைகளால் நாம் உலகத்தி லுள்ள துர் இச்சைகளின் கேட்டுக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்துக்குப் பங்காளி களாகும்படி செய்கிறார். (எபே. 4:22.)

2 Peter 1:4

உமது கற்பனை வழிப்பாட் டிலே, ஆண்டவரே! உம்மையே துடர்ந்து வந்தோம்; உமது நாமும், உமது ஞாபக மும் எங்கள் ஆத்தும அன்பாய் இருக்கின்றன.

Isaiah 26:8

ஏனெனில் உலகத்திலுள்ள யாவும் சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாயிருக்கின்றது. அவைகள் பிதாவினிடத்தினின்று வராமல் உலகத்தினின்றே வருகின்றது.

1 John 2:16

சகோதரரே, ஒரு மனிதன் நினையாமல் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஞானவான்களாகிய நீங்கள் சாந்தகுணத்தோடு அப்படிப்பட்டவனுக்குப் புத்தி சொல்லுங்கள். ஆனால் சோதனையில் நீயும் அகப்படாதபடிக்கு உன்மட்டில் கண்ணுண்டாயிரு.

Galatians 6:1

நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து, ஜெபஞ் செய் யுங்கள். மனமானது வேகமுள்ளதுதான், மாம்சமோ துர்ப்பலமுள்ளது என்றார்.

Matthew 26:41

அவன் நாள் முழுவதும் இச் சித்து ஆசிக்கிறான்; ஆனால் நீதிமானா யிருக்கிறவன் கொடுப்பான்; ஒயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

நீ அடையக்கூடாத ஆஸ்தியின் பேரில் உன் கண்களை ஏறெடுக் காதே; ஏனெனில், அவை கழுகு களைப் போல் தங்களுக்குச் சிறகு களை உண்டாக்கிக்கொண்டு ஆகா யத்தில் பறந்துவிடும்.

Proverbs 23:5

ஏனெனில், பொருளாசை எல்லாத் தின்மைகளுக்கும் வேராயிருக்கிறது. சிலர் அப்படிப்பட்ட இச்சைக்கு இடங்கொடுத்து, விசுவாசத்தினின்று தவறி, பற்பல துன்பங்களில் சிக்கிக்கொண்டார்கள்.

1 Timothy 6:10

ஆதலால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமா? இல்லை, இல்லை. ஆனாலும், நியாயப்பிரமாணத்தின் வழியாயன்றி, நான் பாவத்தை அறியேனே. எப்படியெனில் இச்சைப்படாதே என்று நியாயப்பிர மாணம் சொன்னதினாலேயயாழிய நான் இச்சை என்பதை அறியாதிருந் தேன். (யாத். 20:17; உபாக. 5:21.)

Romans 7:7

எங்களைச் சோதனையிலே பிர | வேசிப்பியாதேயும், ஆனால் தின்மை யிலே நின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ஆமென். * 13. சோதனையிலே பிரவேசிப்பியாதேயும்:- அதாவது சோதனை வராமல் எங்களைக் காப்பாற்றியருளும். அப்படி வந்தாலும் அதற்குள் அகப்பட்டுப் பாவத்தில் விழாதபடி எங்களைத் தற்காத்தருளும் என்று அர்த்தமாம்.

Matthew 6:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |