Topic : Creation

ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார். (சங். 32:6; 135:5: சர்வப். 18:1; அப். 14:14; 17:24.)
பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது; அன்றியும் பாதாளத்தின் முகத்தே இருள் வியாபித்திருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

இப்படியே நீதிமான்கள் உம்முடைய நாமத்தைத் துதிப்பார் கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்திலே வாசம்பண்ணுவார்கள்.

Psalms 139:13-14

எப்படியெனில் எந்த வீடும் ஒருவனால் கட்டப்படும்; அப்படியே எல்லாவற்றையும் உண்டாக்கினவர் சர்வேசுரன்.

Hebrews 3:4

எவ்வாறெனில், கண்ணுக்கெட்டாத அவருடைய இலட்சணங்கள் உலகமுண்டானதுமுதல் சிருஷ்டிக்கப் பட்ட பொருட்களாலே புத்திக்கெட் டும்படியாகி, அவருடைய நித்திய வல்லமையையும், தெய்வீகத்தையுங் கூட விளங்கப்பண்ணுவதால் அவர் கள் போக்குச்சொல்வதற்கு இடமே யில்லை

Romans 1:20

ஐயையோ! ஐயோ! ஆண்ட வரே, தேவனே! உமது பராக்கிரமத் தினாலும் புஜ பலத்தினாலும் வானத் தையும் பூமியையும் படைத்தீர்; உம்மாலாகாதது ஏதுமில்லை.

Jeremiah 32:17

சகலமும் அவராலும், அவரைக் கொண்டும், அவரிலும் உண்டாயிருக்கின்றது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Romans 11:36

ஆண்டவருடைய வீட்டுக்குப் போவோமென்று எனக்குச் சொல்லப் பட்டதுகளைப் பற்றிச் சந்தோஷப் பட்டேன்.
எருசலேம் நகரே! எங்கள் பாதங் கள் உன் ஒலிமுக வாசல்களில் நிலை நின்றன.

Psalms 121:1-2

ஏனெனில் நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறீஸ்து சேசு வுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுத் தேவனுடைய கைவேலையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். *** 10. கைவேலை: நீதிமானாக்கப்பட்டவன் மெய்யாகவே இஷ்டப்பிரசாதத்தால் புது உயிர் அடைந்தவனாயிருப்பதால், சர்வேசுரனுடைய கைவேலை எனப்படுகிறான்.

Ephesians 2:10

கடவுள் பூமியின் எல்லைகளைச் சிருஷ்டித்த நித்தியரான தேவன் எனவும், அவர் இராச்சிய பாரத்தில் களைக்கிறதுமில்லை, உழைக்கிறது மில்லை; அவருடைய ஞானமோ புத்திக்கெட்டதாய் இருக்கின்றதென வும், நீங்கள் அறியீர்களோ? கேள்வி யுற்றதுமில்லையோ?

Isaiah 40:28

அவன் கர்த்தரை நோக்கி: நீரே எனக்கடைக்கலம்; நீரே எனக்காதரவு என்று சொல்லுவான்; அவரே எனக் குத் தெய்வம்; அவரிடத்தில் நான் நம்பிக்கை வைப்பேன்.

Psalms 90:2

ஏனெனில் சர்வேசுரனுடைய பிள்ளைகள் வெளிப்படுங் காட்சியைக் காணப் படைப்புகளெல்லாம் ஆவ லோடு காத்துக்கொண்டிருக்கின்றன.

Romans 8:19

அவ்வாறு கடவுள் மனிதனைத் தம்முடைய சாயலாகப் படைத்தார். தேவ சாயலாகவே அவனைச் சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஞானா.2:23; சர்வப்.17:1; மத்.19:4.)

Genesis 1:27

இந்த ஏழை அபயசத்தமிட் டான்; ஆண்டவர் அவன் மன்றாட் டைக் கேட்டருளினார்; சகல துன்பங் களிலும் நின்று அவனைக் காப் பாற்றினார்.

Psalms 33:6

வானமண்டலத்தில் தமது ஆசனத்தை அமர்த்தியவரும், பூத பெளதீகாதிகளைப் பூமிமீது நிலைப் பித்தவரும், சமுத்திர சலங்களை உயர அழைப்பவரும், அவைகளைப் புவனத்தின்மீது இறைப்பவருமாகிய ஆண்டவரெனும் நாமரான தேவன் இங்ஙனஞ் செய்வார்; இது திண்ணம் (ஆமோஸ்.5:8).

Amos 9:6

ஏனென்றால், உமது கற்பனை களின் பேரிலே நான் தியானம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்; உம் முடைய ஞாயப் பிரமாணங் களையே நான் ஆலோசித்துக்கொண் டிருந்தேன்.

Psalms 118:24

பின்னும்: நம்முடைய சாய லாகவும், பாவனையாகவும் மனித னைப் படைப்போமாக. அவன் சமுத் திர மச்சங்களையும் ஆகாயப் பறவைகளையும் மிருகங்களையும், பூவுலக னைத்தையும் பூமியில் அசைவாடும் ஊர்வன யாவற்றையும் ஆளக்கட வான் என்றார். (ஆதி. 5:1; 9:6; 1கொரி. 11:7; கொலோ. 3:10)

Genesis 1:26

பின்னையும் கர்த்தராகிய கடவுள்: மனிதன் தனிமையாயிருப் பது நல்லதல்லவாதலால் அவனுக்குச் சரிசமானமாக ஒரு துணைவியை அவனுக்கு உண்டாக்குவோமாக, என்றார்.

Genesis 2:18

ஆகையால் ஒருவன் கிறீஸ்துநாதரிடத்தில் இருந்தால் அவன் புதுச் சிருஷ் டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின. இதோ, எல்லாம் புதிதாக் கப்பட்டன. (இசை. 43:19; காட்சி. 21:5.) *** 17. நாம் மரித்தவர்களாயிருக்கையிலே தமக்காக நாம் ஜீவிக்கும்படிக்கு சேசுநாதர் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தபடியால், அவரிடத்தில் நாம் புது ஜீவியத்தை அடைந்திருக்கிறோமாகில், பழைய மனிதனுக்குரியவைகளெல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் புது ஜீவியத்துக்கு யோக்கியமான விதமாய் எல்லாக் காரியங்களிலும் நடக்கக்கடவோம். ஆகையால் இதுமுதல் ஒருவனையும் உறவின் முறையானோ அன்னியனோ, மேன்குலத்தானோ கீழ்குலத்தானோ, ஆஸ்திக்காரனோ தரித்திரனோ என்று மாம்ச சம்பந்தப்படி அவனை அறியாமலுஞ் சிநேகியாமலும், கிறீஸ்துநாதரைப்பற்றி மாத்திரம் அவனை அறியவுஞ் சிநேகிக்கவுங்கடவோம். கிறீஸ்துநாதரைமுதலாய் மாம்சத்துக்குரிய தன்மையாய் அறியாமலுஞ் சிநேகியாமலும், அவரை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நித்திய ஜீவியத்தை நமக்குப் பெறுவிக்கிறவராகவும் அவரை அறிந்து சிநேகித்துச் சேவிக்கக்கடவோம்.

2 Corinthians 5:17

அப்போது வானத்திலும், பூமி யிலும், பூமியின் கீழும் உள்ள சகல சிருஷ்டிகளும், சமுத்திரத்திலும் அதி லடங்கிலும் உள்ளவைகளுமாகிய யாவும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக் கும், செம்மறிப்புருவையானவருக்கும் ஸ்தோத்திரமும், வணக்கமும், மகிமை யும், வல்லபமும், காலாகாலங்களுக்கும் உண்டாவதாக என்று சொல்லக் கேட் டேன்.

Revelation 5:13

தம்முடைய (ஞான) சிருஷ்டிப்புக்கு நாம் ஒரு ஆரம்பமாயிருக்கும் படி, அவர் தமது சித்தத்தின்படியே நம்மைச் சத்திய வாக்கியத்தால் ஜெனிப் பித்தார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

James 1:18

மேலும் அவர் செய்ய நினைத் திருந்த எல்லாக் கிரியைகளையும் அந்நாளில் விட்டு ஓய்ந்துகொண் டிருந்ததினாலே அவ்வேழாம் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

Genesis 2:3


களிமண்ணும், மட்பாத்திர முமான மனிதன் தன் சிருஷ்டிகருக்கு விரோதமாய் விவாதஞ் செய்வா னேல் அவனுக்குக் கேடாம்; களி மண் தன் குயவனை நோக்கி: நீ என்ன செய்கின்றாய், உன் வேலை திறமுள கரமற்றதெனப் புகல்வதுமுண்டோ? (எரே.18:6; உரோ. 9:20)

Isaiah 45:9

ஏனெனில், நாம் அவருக்குள் ஜீவிக்கிறோம்; அவருக்குள் அசைகிறோம்; அவருக்குள் இருக்கிறோம். அப் படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய வம்சமுமாயிருக்கி றோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Acts 17:28

மகிமையும் புகழும் அவர் சமுகத்திலுள்ளது; பரிசுத்ததனமும் மகத்துவமும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலே இருக்கின்றன.

Psalms 95:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |