Topic : Creation

ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்
பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே.
இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர்.

Psalms 139:13-14

ஒவ்வொரு வீட்டுக்கும் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும். உலகெல்லாம் கட்டி அமைத்தவர் கடவுளே.

Hebrews 3:4

ஏனெனில், கட்புலனாகாத அவருடைய பண்புகளும், அவருடைய முடிவில்லா வல்லமையும், கடவுள் தன்மையும் உலகம் உண்டானது. முதல் அவருடைய படைப்புக்களிலேயே அறிவுக்குப் புலனாகின்றன. ஆகவே அவர்கள் சாக்குச் சொல்வதற்கு வழியில்லை.

Romans 1:20

ஆண்டவராகிய இறைவனே, உம்முடைய மிகுந்த வல்லமையாலும், நீட்டிய கரத்தாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவர் நீரே;

Jeremiah 32:17

ஏனெனில், யாவும் அவரிடமிருந்தே வந்தன, அவராலேயே உண்டாயின, அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.

Romans 11:36

மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்: "உதவி எனக்கு எங்கிருந்து வரும்?"
உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்: அவரே வானமும் வையமும் படைத்தவர்.

Psalms 121:1-2

நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.

Ephesians 2:10

உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையோ? ஆண்டவர் தான் முடிவில்லாத கடவுள்; பூமியின் எல்லைகளைப் படைத்தவர் அவரே, அவர் சோர்ந்து போவாரல்லர், களைப்படைவாரல்லர்; அவருடைய ஞானமோ புத்திக்கு எட்டாதது.

Isaiah 40:28

மலைகள் தோன்றுமுன்பே, பூமியும் உலகும் உண்டாகு முன்பே, ஊழ் ஊழிக்காலமாக இறைவா, நீர் இருக்கிறீர்.

Psalms 90:2

இம்மகிமையுடன் கடவுளுடைய மக்கள் வெளிப்பட வேண்டுமென்று படைப் பனைத்துமே ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கிறது.

Romans 8:19

இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

Genesis 1:27

ஆண்டவருடைய வார்த்தையால் வானங்கள் உண்டாயின: அவரது சொல்லால் வான் அணிகள் எல்லாம் உருவாயின.

Psalms 33:6

அவரே வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகிறவர், வானவளைவை நிலத்தில் அடிப்படையிட்டு நாட்டுகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின் மேலே பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.

Amos 9:6

ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

Psalms 118:24

பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக; அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன் என்றார்.

Genesis 1:26

மேலும், ஆண்டவராகிய கடவுள்: மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலால் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம் என்றார்.

Genesis 2:18

ஆகவே ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், புதியதொரு படைப்பு தோன்றுகிறது; பழையன கழிந்துபோயின.

2 Corinthians 5:17

பின்பு மேலுலகம், பூவுலகம், கீழுலகம், ஆழ்கடல் எங்குமுள்ள படைப்புகள் அனைத்தும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் செம்மறியானவர்க்கும். போற்றியும் மாட்சியும் மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக" என்று பாடக் கேட்டேன்.

Revelation 5:13

தம் படைப்புக்களுள் நாம் முதற் கனிகளாகும் பொருட்டு, உண்மையை அறிவிக்கும் வாக்கினால் நம்மை ஈன்றெடுத்தார். தாமே விரும்பியபடி இங்ஙனம் செய்தார்.

James 1:18

மேலும் தாம் செய்ய நினைத்திருந்த வேலைகளையெல்லாம் செய்து விட்டு அந்நாளில் ஓய்வெடுத்தார். எனவே, அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

Genesis 2:3

ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.

Psalms 124:8

தன்னை உருவாக்கியவனுடன் வாதாடுகிற மட்கலத்திற்கு ஐயோ கேடு! களிமண் குயவனை நோக்கி, 'நீ என்ன செய்கிறாய்? உன் வேலைப்பாட்டில் கைத்திறமையில்லை' என்று சொல்வதுண்டோ?

Isaiah 45:9

' நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். ' உங்கள் புலவர்களில் ஒருவர் கூறுவதுபோல், நாமும் அவரினமே.

Acts 17:28

வாருங்கள் ஆராதிப்போம், தெண்டனிடுவோம், வணங்குவோம்: நம்மைப் படைத்த ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்.

Psalms 95:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |