Topic : Children

இன்று நான் உனக்குக் கற்பிக் கிற இந்த வார்த்தைகளே உன் இருத யத்திலே பதிந்திருக்கக் கடவது (உபா.14:2; 26:18).
நீ அவைகளை உன் குமாரர் களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கை யிலும் வழியில் நடந்து போகை யிலும், தூங்குகையிலும், விழித்தெழுந் திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கக் கடவாய்.

Deuteronomy 6:6-7

ஆனால் சேசுநாதர் அவர்களை நோக்கி; சிறுவர்களைச் சும்மா விடுங்கள். அவர்களை என்னிடத்தில் வரத் தடை செய்யாதேயுங்கள். ஏனெனில் மோட்ச இராச்சியம் அப்படிப்பட்டவர்களு டையது என்று சொல்லி, (மத். 18:3.)

Matthew 19:14

தன் வாலிப நாட்களில் வாலி பன் சென்ற மார்க்கத்தைத் தன் விருத்தாப்பியத்திலும் விடானென்று ஒரு பழமொழி.

Proverbs 22:6

(அதற்கு மாறுத்தாரமாக:) பெண்ணானவள் தன் பாலனை மறப் பதுண்டோ? தன் கற்பகர குழந்தைக்கு இரங்காதிருப்பாளோ? அப்படி அவள் மறந்தாலும் நாம் உன்னை ஒரு போதும் மறக்கவறியோம்.
இதோ நமது கரங்களில் உன்னை அட்சரமிட்டிருக்கின்றோம்; உன் பட்டணத்து மதிள்கள் நம் கண் கள் முன் எப்போதும் பிரசன்ன மாகும் (யாத்.13:9).

Isaiah 49:15-16

ஆகிலும் எந்தத் தண்டனை யும் தற்காலத்தில் சந்தோஷமாகத் தோன்றாமல் துக்கமாகத் தோன்றும். ஆனால் அதில் பழகிப்போனவர்களுக்குப் பின்னால் அது மிகுந்த சமாதானத்துக் குரிய நீதிப்பலனைப் பெறுவிக்கும். * 11. துன்பங்களில் கிறீஸ்துவனுக்கு ஆறுதல் வருவிக்கக்கூடிய ஐந்து பிரதான முகாந் தரங்கள் உண்டு. * 1-வது. அந்தத் துன்பங்களுக்குச் சர்வேசுரன் தாம் பட்சமுள்ள தகப்பனைப்போல் காரணமாயிருக்கிறார். * 2-வது. சர்வேசுரன் நமக்கு அனுப்புகிற துன்பங்கள் அவருடைய பட்சத்தின் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 3-வது. சர்வேசுரனுக்குப் பிரியமான பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோ மென்பதற்கு அவைகள் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 4-வது. நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாய் இருக்கிறபடியினாலே துன்பங்கள் அவசியமாய் நமக்கு வரவேண்டியது. இல்லாவிட்டால் சர்வேசுரனுக்கு நாம் பிள்ளைகளாய் இருக்கமாட்டோம். சர்வேசுரன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளாமல் நம்மை விபசாரத்தின் பிள்ளைகள்போல் எண்ணித் தள்ளுவார். * 5-வது. துன்பங்கள் தற்காலத்திலே கசப்பாய்த் தோன்றினாலும் பிற்பாடு நித்தியமான சந்தோஷத்துக்குக் காரணமாயிருக்கின்றன.

Hebrews 12:11

தகப்பன்மார்களே, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கோபமூட்டாதிருங்கள். ஆனால் அவர்களை ஆண்டவருக்கேற்க ஒழுக்கத்திலும், கண்டிப்பிலும் வளர்ப்பீர்களாக.

Ephesians 6:4

சிறுபிள்ளைகளே, விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்ளுவீர்களாக. ஆமென்.

1 John 5:21

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் என்னப்படுவார்கள்.

Matthew 5:9

ஆகையால் நீங்கள் மிகவும் பிரியமான பிள்ளைகளைப்போல், சர்வேசுரனைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,

Ephesians 5:1

ஏனெனில் நீங்களெல்லாரும் கிறீஸ்நாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
எப்படியெனில் கிறீஸ்துநாதரிடத் தில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிற நீங்க ளெல்லோரும் கிறீஸ்துநாதரை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். (உரோ. 6:3.)

Galatians 3:26-27

அதற்கு அவர்கள்: ஆண்டவராகிய சேசுநாதரை விசுவசி. அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

Acts 16:31

மதிகேடன் தன் பிதாவின் கண்டனையை நகைக்கிறான்; ஆனால் கண்டனைகளைக் காக்கிற வன் மிக விவேகியாவான். நீதித் துவம் எவ்வளவு மிகுவோ அவ்வள வாக அதிக மனத் திடனுண்டாகும்; அக்கிரமிகளின் சிந்தனைகளோ வெனில் வேருடன் கலைக்கப்படும்.

Proverbs 15:5

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட்டு, மெய்யாகவே அவருக்குப் பிள்ளைகளாயிருக்கும்படிக்கு எத்தன்மையான பரம அன்பைப் பிதாவானவர் நமக்குத் தந்தருளினாரென்று பாருங்கள். ஆகையால் உலகம் நம்மை அறியாதிருந்தால், அது அவரையும் அறியாதிருப்பதே அதற்குக் காரணம். (உரோ. 8:15.)

1 John 3:1

எப்படியெனில், எவர்கள் சர்வேசுரனுடைய ஞானத்தால் நடத்தப்படுகிறார்களோ, அவர்களே சர்வேசுரனுடைய பிள்ளைகள்.

Romans 8:14

புத்திரரின் புத்திரரோ விருத் தாப்பியரின் முடியாம்; புத்திர ருடைய மகிமையோ அவர்கள் பிதாக்களேயாம்.

Proverbs 17:6

யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (உரோ. 8:14; கலாத். 3:26.)

John 1:12

அப்படியே நீங்கள் திரும்பவும் பயத்தோடுகூடிய அடிமைத்தனத் தின் புத்தியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடுகிற சுவீ காரப் பிள்ளைகளுக்குரிய புத்தியைப் பெற்றுக்கொண்டீர்கள். (2 தீமோ. 1:7.)

Romans 8:15

ஏனெனில் சர்வேசுரனுடைய பிள்ளைகள் வெளிப்படுங் காட்சியைக் காணப் படைப்புகளெல்லாம் ஆவ லோடு காத்துக்கொண்டிருக்கின்றன.

Romans 8:19

மகா அன்பரே, இப்போது நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போ மென்பது இன்னும் நமக்கு வெளிப்படவில்லை. அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்.
மீளவும் அவர்மேல் இந்த நம்பிக் கை வைத்திருக்கிறவனெவனும், அவர் பரிசுத்தமாயிருக்கிறதுபோல் தன்னை யும் பரிசுத்தமாக்கிக்கொள்ளுகிறான்.

1 John 3:2-3

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று இஸ்பிரீத்துசாந்துவானவரே நம்முடைய புத்திக்கு அத்தாட்சி கொடுக்கிறார்.

Romans 8:16

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாய்த் தன் வீட்டாரையும் விசாரியாதிருந்தால், அவன் விசுவாசத்தை மறுத்தவனும், அவிசுவாசியைவிட அதிகக் கெட்ட வனுமாய் இருக்கிறான்.

1 Timothy 5:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |