Topic : Children

இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த வார்த்தைகள் உன் இதயத்திலே பதியக்கடவன.
நீ அவைகளை உன் புதல்வர்களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போதும் வழியில் நடந்து போகும்போதும் தூங்கும்வேளையிலும் விழித்தெழுந்திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கவும் கடவாய்.

Deuteronomy 6:6-7

சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.

Matthew 19:14

இளைஞன் தன் வாலிப நாட்களில் சென்ற நெறியைத் தன் முதுமையிலும் விடான் என்பது பழமொழி.

Proverbs 22:6

பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!
இதோ, நம்கைகளில் உன்னைப் பொறித்துள்ளோம், உன் பட்டணத்து மதில்கள் நம் கண் முன் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

Isaiah 49:15-16

கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத் தான் தோன்றும். ஆனால், அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

Hebrews 12:11

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.

Ephesians 6:4

அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

1 John 5:21

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.

Matthew 5:9

ஆகவே, அன்புப் பிள்ளையாய், நீங்கள் கடவுளைப்போல் ஒழுக முயலுங்கள்.

Ephesians 5:1

ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.

Galatians 3:26-27

அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றனர்.

Acts 16:31

அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிறான். ஆனால், கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான். நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக அதிக மனத்திடன் உண்டாகும். அக்கிரமிகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.

Proverbs 15:5

பரம தந்தை நம்மிடம் காட்டிய அன்பு எவ்வளவு என்று பாருங்கள்! நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். அவருடைய மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான், நாம் எத்தன்மையரென்பதையும் அது அறிந்துகொள்வதில்லை.

1 John 3:1

ஏனெனில் கடவுளின் ஆவியால் யார் இயக்கப்படுகிறார்களோ, அவர்களே கடவுளின் மக்கள்.

Romans 8:14

பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம்.

Proverbs 17:6

ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.

John 1:12

நீங்கள் பெற்றுக்கொண்டது, திரும்பவும் அச்சத்திற்குள்ளாக்கும் அடிமையுள்ளம் அன்று; பிள்ளைகளாக்கும் தேவ ஆவியையே பெற்றுக்கொண்டீர்கள். அந்த ஆவியினால் நாம், "அப்பா, தந்தாய்" எனக் கூப்பிடுகிறோம்.

Romans 8:15

இம்மகிமையுடன் கடவுளுடைய மக்கள் வெளிப்பட வேண்டுமென்று படைப் பனைத்துமே ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கிறது.

Romans 8:19

அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.

1 John 3:2-3

நாம் இவ்வாறு கூப்பிடும்போது நம் உள்ளத்தோடு தேவ ஆவியானவரே நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சான்று பகர்கிறார்.

Romans 8:16

தன் உறவினரை, சிறப்பாகத் தன் சொந்த வீட்டாரைப் பார்த்துக் கொள்ளாதவன் விசுவாசத்தை மறுதலித்தவனே. அவன் அவிசுவாசியைவிடக் கேடு கெட்டவன்.

1 Timothy 5:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |